சென்னை | இன்ஸ்டாகிராமில் தவறுதலாக குறுஞ்செய்தி: பெண் மீது தாக்குதல் நடத்திய இளைஞர் கைது

0
37

தவறு​தலாக இன்​ஸ்​டாகி​ராமில் குறுஞ்செய்தி அனுப்​பிய விவ​காரத்​தில், பெண் மீது தாக்​குதல் நடத்​திய இளைஞர் கைது செய்​யப்​பட்​டார்.

சென்​னை, திரு​வொற்​றியூரைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒரு​வர் கணவன் மற்​றும் குழந்​தைகளு​டன் வசித்து வரு​கிறார். மேலும், இவர் அதே பகு​தி​யில் உள்ள பெட்​ரோல் பங்க் ஒன்​றில் வேலை செய்து வரு​கிறார்.

கடந்த 11-ம் தேதி மாலை அவர் வேலை​யில் இருந்​த​போது, அங்கு வந்த இளைஞர் ஒரு​வர், எதற்​காக எனக்கு இன்​ஸ்​டாகி​ராம் மூலம் தொடர்ந்து குறுஞ்​செய்தி அனுப்​பு​கிறீர்​கள் என கேட்​டுள்​ளார்.

எனக்கு செல்​போன் உபயோகப்​படுத்த தெரி​யாது. எனது குழந்​தைகள் தவறு​தலாக அனுப்​பி​யிருக்​கலாம் என்று அப்​பெண் கூறி​யும் கேட்​காமல், தொடர்ந்து அந்த இளைஞர் வாக்​கு​வாதம் செய்​துள்​ளார்.

இதனால், இரு தரப்​பினரிடையே மோதல் ஏற்​பட்​டது. ஆத்​திரம் அடைந்த அந்த இளைஞர் அப்​பெண்ணை தாக்கி விட்டு அங்​கிருந்து தப்​பிச் சென்​றார்.

இதுகுறித்​து, பாதிக்​கப்​பட்ட பெண் திரு​வொற்​றியூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். போலீஸ் விசாரணையில் புகார் அளித்த பெண்​ணின் செல்​போனிலிருந்து அவரது பிள்​ளை​கள் தவறு​தலாக இன்​ஸ்​டாகி​ராமில் மெசெஜ் அனுப்பி இருந்​தது தெரிய​வந்​தது.

இருப்​பினும், இந்த விவ​காரம் தொடர்​பாக தாக்​குதல் நடத்தி தப்​பிய திரு​வொற்​றியூரைச் சேர்ந்த நரேஷ் (26) என்​பவரை போலீ​ஸார் கைது செய்​தனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here