நலத்திட்டங்கள் வழங்க ஆதார் போல தமிழ்நாடு அடையாள அட்டை: விஜய் வாக்குறுதி

0
24

தவெக ஆட்சி அமைந்​தால் ஆதார் அட்டை போன்று தமிழ்​நாடு அடை​யாள அட்டை உரு​வாக்​கப்​பட்​டு, ஏஐ தரவு​களு​டன் லஞ்​சம் இல்​லாத நலத்​திட்​டங்​கள் மக்​களுக்கு வழங்​கப்​படும் என்று கன்​னி​யாகுமரி​யில் நடந்த தேர்​தல் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் விஜய் தெரி​வித்​தார்.

தவெக தலை​வர் விஜய் நேற்று மாலை கன்​னி​யாகுமரி​யில் ரோடு ஷோ நடத்​தி​னார். முன்​ன​தாக மகா​தானபுரம் ரவுண்​டா​னா​வில் வேனை விட்டு கீழே இறங்​கி, ரவுண்​டா​னாவை சுற்றி விசில் ஊதி​யபடி சைக்​கிள் ஓட்​டி​னார். அப்​போது அங்கு திரண்​டிருந்த தவெக தொண்​டர்​கள் கரகோஷம் எழுப்​பினர்.

பின்​னர் அங்​கிருந்த சிறிய மேடை​யில் ஏறி விஜய் பேசி​ய​தாவது: தவெக ஆட்சி அமைந்​தால் லஞ்​சம் இன்றி ஒவ்​வொரு​வருக்​கும் நலத்​திட்​டங்​கள் போய்ச் சேரும். இதற்​காகவே ஆதார் அட்டை போன்று தமிழ்​நாடு அடை​யாள அட்டை உரு​வாக்​கப்​பட்​டு, ஏஐ தரவு​களு​டன் லஞ்​சம் இல்​லாத நலத்​திட்​டங்​கள் வழங்​கப்​படும்.

தற்​போது அரசு அலு​வல​கங்​களில் லஞ்​சம் கொடுத்​தால் தான் வேலை ஆகிறது. இந்த லஞ்​சம் அதி​காரி​களுக்கு மட்​டுமின்​றி, அமைச்​சருக்​கும் செல்​கிறது. பட்​ஜெட் ஒரு ஆவண​மாக மட்​டும் தான் நமக்கு தெரி​யும். அந்த நிதி எங்கே செல்​கிறது எனத் தெரி​யாது. அது சிதம்பர ரகசி​யம் போன்று ஸ்டா​லின் சார் ரகசி​ய​மாக உள்​ளது.

தமிழ்​நாட்​டில் 10.5 லட்​சம் கோடி கடன் சுமை உள்​ளது. அரசின் ஒவ்​வொரு செல​வும் நம்ம பிள்​ளை​கள், கிராம திட்​டங்​களில் இருந்து திருடப்​பட்​டது. இது ஒரு தலை​முறைக்​கான தேர்​தல். நான்கு முனை போட்டி என எது​வும் இல்​லை. இங்கு திமுக​வுக்​கும், தவெக​வுக்​கும் இரு​முனை போட்டி தான் உள்​ளது. தவெக ஆட்சி அமைந்​தால் இந்​தி​யா​வின் ஏஐ தலைநக​ராக தமிழ்​நாடு மாற்​றப்​படும்.

தமிழகத்​தில் முதல் ஏஐ தொழில்​நுட்ப பல்​கலைக்​கழகம் உரு​வாக்​கப்​படும். தமிழக மக்​கள் நலத்​திட்​டங்​களை பெற பிரத்​யேக கார்டு வழங்​கப்​படும். நலத்​திட்​டங்​களை பெற விண்​ணப்​பிக்க வேண்​டிய தேவை​யில்​லை. ஏஐ தொழில்​நுட்ப உதவி​யுடன் அரசு நலத்​திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​படும். ‘வெற்றி தமிழ்​நாடு’ சூப்​பர் செயலி உரு​வாக்​கப்​படும்.

மக்​களுக்கு ஆலோ​சனை வழங்​கும் வகை​யில் புதிய இணை​யசேவை உரு​வாக்​கப்​படும். 10,000 கையெழுத்​துகளு​டன் மனு அளித்​தால் உடனடி நடவடிக்கை எடுக்​கப்​படும். ஏஐ சிட்டி உரு​வாக்​கப்​படும். தமிழகத்​தின் முக்​கிய மாநகரங்​களில் ஏஐ புத்​தாக்க மையம் உரு​வாக்​கப்​படும். எனவே ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்​கள். இது ஒரு விசில் புரட்சி தேர்​தலாக இருக்​கட்​டும். இவ்​வாறு விஜய் பேசி​னார். பின்​னர் கன்​னி​யாகுமரி ஜீரோ பாயிண்ட் வரை மூன்​றரை கிலோ மீட்​டர் தூரம் விஜய் ரோடு ஷோவில் பங்​கேற்​றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here