பெட்ரோல், டீசல் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்: பிரதமர் மோடி அறிவுரை

0
22

பெட்​ரோல், டீசல் தொடர்​பான வதந்​தி​களை நம்ப வேண்​டாம் என்று பிரதமர் நரேந்​திர மோடி அறி​வுறுத்தி உள்​ளார்.

மாதத்​தின் கடைசி ஞாயிற்​றுக்​ கிழமை​யான நேற்று 132-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்​பப்​பட்​டது. இதில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: கரோனா பெருந்​தொற்று காலத்​தில் ஏற்​பட்ட பாதிப்​பு​கள் மிக நீண்ட காலம் நீடித்​தன. கரோனா காலத்துக்​குப் பிறகு ஒட்​டுமொத்த உலக​மும் வளர்ச்​சிப் பாதையில் முன்​னேறிச் செல்​லும் என்று அனை​வரும் எதிர்பார்த்தோம். ஆனால் உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடைபெறும் போர்​களால் பிரச்​சினை​கள் தொடர்​கின்​றன.

தற்​போது சுமார் ஒரு மாத​மாக மேற்​காசிய போர் தீவிரமடைந்து வரு​கிறது. அந்த பிராந்​தி​யத்தை சேர்ந்த கோடிக்​கணக்​கான மக்கள் போரால் பாதிக்​கப்​பட்டு உள்​ளனர். சுமார் ஒரு கோடிக்​கும் மேற்​பட்ட இந்​தி​யர்​கள் வளை​குடா நாடு​களில் வசிக்​கின்​றனர். வளை​குடா மக்​கள் மற்​றும் இந்​தி​யர்​களின் பாது​காப்பு குறித்து மத்​திய அரசு மிகுந்த அக்​கறை கொண்​டிருக்​கிறது. போர் சூழலில் இந்​தி​யர்​களை பாது​காத்து அரவணைத்​துச் செல்​லும் வளை​குடா நாடு​களின் அரசுகளுக்கு நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

மேற்​காசிய போரால் உலகம் முழு​வதும் பெட்​ரோல், டீசலுக்கு பற்றாக்​குறை ஏற்​பட்​டிருக்​கிறது. இந்த சவாலை நாம் திறம்பட எதிர்​கொண்டு வரு​கிறோம். உலகம் முழு​வதும் பல்​வேறு நாடுகளிடம் இந்​தி​யா​வுக்கு நெருங்​கிய நட்​புறவு நீடிக்​கிறது. இதன் மூலம் எரிபொருள் பிரச்​சினையை சமாளித்து வரு​கிறோம். ஒட்​டுமொத்த இந்​தி​யர்​களும் ஒன்​றிணைந்து புதிய சவாலை எதிர்​கொள்ள வேண்​டும்.

போர் விவ​காரத்​தில் முற்​றி​லு​மாக அரசி​யலை தவிர்க்க வேண்டும். இது 140 கோடி மக்​களின் நலன் சார்ந்​தது. இதில் சுயநல அரசி​யலுக்கு ஒரு​போதும் இடம் அளிக்​கக்​கூ​டாது. தற்போதைய சூழலில் வதந்​தி​களை பரப்​புவோர் சொந்த நாட்டுக்கே துரோகம் இழைக்​கின்​றனர்.

இந்​திய மக்​களிடம் ஒரு வேண்​டு​கோளை முன்​வைக்​கிறேன். எரிபொருள் தொடர்​பான (பெட்​ரோல், டீசல்) வதந்​தி​களை நம்ப வேண்​டாம். அரசு நிர்​வாகம் அளிக்​கும் தகவல்​களை மட்​டுமே நம்புங்​கள், அதற்​கேற்ப செயல்​படுங்​கள். கடந்த காலங்​களில் நாம் பல்​வேறு சவால்​களை வெற்​றிகர​மாக எதிர்​கொண்டு உள்ளோம். 140 கோடி இந்​தி​யர்​களின் பலத்​தால் இந்த சவாலிலும் நிச்​சய​மாக வெற்றி பெறு​வோம்.

இந்​திய மக்​கள் தங்​களது உடல் நலனில் அதிக அக்​கறை செலுத்த வேண்​டு​கிறேன். மனம், உடல் நலனை மேம்​படுத்த நாள்​தோறும் யோகா செய்ய வேண்​டும். பானங்​கள் மற்​றும் உணவு வகை​களில் சர்க்​கரை அளவை குறைத்​துக் கொள்ள வேண்​டும். சமையல் எண்ணெய் அளவை 10 சதவீதம் அளவுக்கு குறைத்து கொள்ள வேண்​டும். இந்​திய மீனவர்​கள் கடலில் பணி​யாற்​றும் மாபெரும் வீரர்​கள் ஆவர்.

அவர்​கள் சுய​சார்பு இந்​தி​யா​வின் முது​கெலும்​பாக உள்​ளனர். அவர்​களுக்கு தேவை​யான தொழில்​நுட்ப உதவி​களை வழங்கி வரு​கிறோம். ஜம்மு காஷ்மீர் கிரிக்​கெட் அணி ரஞ்சி கோப்​பையை வென்று புதிய சாதனைபடைத்​திருக்​கிறது. இது அந்த பகுதி இளம் தலை​முறை​யினருக்கு மிகுந்த ஊக்​கம் அளிப்​ப​தாக உள்​ளது. நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் கோடை காலம் தொடங்கி உள்​ளது. இந்த நேரத்​தில் தண்​ணீர் சேமிப்பு நடவடிக்​கை​களில் தீவிர கவனம் செலுத்த வேண்​டும்.

உத்தர பிரதேசம் வாராணசி​யில் அண்​மை​யில் ஒரு மணி நேரத்தில் 2.51 லட்​சம் மரக்​கன்​றுகள் நடப்​பட்​டன. இதன்​ மூலம் புதிய கின்​னஸ் உலக சாதனை படைக்​கப்​பட்டு உள்​ளது. பிஎம் சூர்ய கர் முப்ட் முஜிலி யோஜனா திட்​டத்​தின் மூலம் நாட்​டின் அனைத்து பகு​தி​களி​லும் சூரிய மின் உற்​பத்தி அதி​கரித்து வருகிறது. மரக்​கன்று நடு​தல், சூரிய மின் உற்​பத்தி உள்​ளிட்ட திட்டங்​களால் பரு​வநிலை மாறு​பாடு பிரச்​சினை​களுக்​கு தீர்​வு காண முடி​யும்​. இவ்​வாறு பிரதமர்​ நரேந்​திர மோடி பேசி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here