மிக்-29 போர் விமானத்தில் அதிநவீன அஸ்ராம் ஏவுகணை

0
22

இந்​திய விமானப்​படை​யில் உள்ள மிக்​-29 போர் விமானத்​தில் நவீன அஸ்​ராம் ஏவு​கணை​கள் இணைக்​கப்​பட​ உள்ளன.

இந்​திய விமானப்​படை​யில் மிக்​-29 ரக போர் விமானங்​களின் 2 படைப் ​பிரிவு​கள் உள்​ளன. இந்த விமானங்​களில் எதிரி நாட்டு போர் விமானங்​களை தகர்க்​கும் வான் தாக்​குதலுக்கு ரஷ்ய தயாரிப்​பான ஆர்​-73 ரக ஏவு​கணை​கள் பயன்​படுத்​தப்​பட்டு வந்தன. இது 10 முதல் 15 கி.மீ தூரம் மட்​டும் சென்று தாக்​கும். விமானப் படை​யில் உள்ள தேஜஸ் மற்​றும் ஜா​கு​வார் போர் விமானங்​களில் அதி நவீன அஸ்​ராம் ஏவு​கணை​கள் பயன்​படுத்தப்​படு​கின்​றன. ஐரோப்​பிய தயாரிப்​பான இந்த ஏவுகணைகள் 25 கி.மீ தூரம் சென்று தாக்​கும் திறன் படைத்​தவை.

இந்த வகை ஏவு​கணை​களை மிக்​-29 ரக போர் விமானங்​களில் பயன்​படுத்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இதற்​காக மிக்​-29 ரக போர் விமானத்​தில் சில மாற்​றம் செய்​யப்பட வேண்​டும். மேம்​படுத்​தப்​பட்ட மிக்​-29 ரக போர் விமானத்​தில், பயன்​படுத்த அஸ்ராம் ஏவு​கணை​களை எபிடிஏ நிறு​வனத்​திடம் இருந்து வாங்க பாதுகாப்​பு அமைச்​சகம் ஆர்​டர் கொடுக்க உள்​ளது. இதற்​கான ஒப்பந்த அறிக்கை கோரப்​பட்​டுள்​ளது. இதன் மூலம் மிக்​-29 ரக போர் வி​மானத்​தின்​ தாக்​குதல்​ திறன்​ மேம்​படும்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here