2019-ல் குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் வென்ற ம.பி. அதிகாரி ரூ.2.5 கோடி ஊழல் வழக்கில் கைது

0
25

2019-ல் கோன் பனேகா குரோர்​பதி நிகழ்ச்​சி​யில் ரூ. 50 லட்​சம் வென்ற மத்​தி​யபிரதேச மாநில அரசு பெண் அதி​காரி ரூ. 2.5 கோடி நிதி முறை​கேடு வழக்​கில் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

மத்​திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்​தவர் அமிதா சிங் தோமர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அமி​தாப்​பச்​சன் நடத்​தும் கோன் பனேகா குரோர்​பதி நிகழ்ச்​சி​யில் பங்​கேற்று ரூ.50 லட்​சம் பரிசு வென்​றிருந்​தார். இதனால் நாடு முழு​வதும் இவர் பிரபல​மா​னார்.

மேலும், இவர் மத்​திய பிரதேச மாநில அரசில் தாசில்​தா​ராக பணி​யாற்றி வரு​கிறார். இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் இவரை போலீ​ஸார் கைது செய்​தனர். கடந்த 2021-ம் ஆண்டு மத்​திய பிரதேச மாநிலத்​தில் வெள்ள நிவாரண நிதியை அரசு வழங்​கியது. அந்த நிதியை பரோடா பகு​தி​யில் விநி​யோகம் செய்​த​தில் முறை​கேடு நடந்​த​தாக புகார் எழுந்​துள்​ளது. ரூ.2.5 கோடி பணம் போலி​யான வங்​கிக் கணக்​கு​களுக்கு அனுப்​பப்​பட்டு முறை​கேடு செய்​யப்​பட்​டுள்​ளது கண்​டறியப்​பட்​டுள்​ளது.

இதையடுத்து பரோடா போலீஸ் அதி​காரி அவ்​நீத் சர்மா தலை​மையி​லான படை​யினர், அமிதா சிங் தோமரை அவரது வீட்​டில் வைத்து நேற்று முன்​தினம் கைது செய்​தனர். அமிதா சிங் தோமர், தற்​போது விஜய்​பூர் தாசில்​தா​ராக உள்​ளார். இதைத் தொடர்ந்து அவர் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்டு நீதி​மன்​றக் காவலில் வைக்​கப்​பட்​டுள்​ளார்.

அமிதா சிங் தோமர் கைது செய்​யப்​பட்​டுள்​ளதைத் தொடர்ந்​து, அவர் தாசில்​தார் பணியி​லிருந்து விடுவிக்​கப்​பட்​டுள்​ளார் என்று மாவட்ட ஆட்​சி​யர் அர்​பித்​ வர்​மா தெரி​வித்​துள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here