கன்னியாகுமரி மாவட்டம் கடையல் அருகே சிற்றாறு 1 பகுதியில் மது பிரியர்கள் தினமும் மது அருந்திவிட்டு கழிவுகளை அணைக்கட்டு சுற்றுப்புறங்களில் கொட்டி சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்துவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பிரச்சனையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.














