குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு மொத்தம் 2,295 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,295 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 2,485 விவிபேட் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருப்பு வைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கண்காணிக்கப்படுகின்றன. தேர்தல் பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.














