பளுகல் பகுதியை சேர்ந்த ஜித்து (32) மற்றும் அவரது நண்பர்கள் ராகுல், சபின் ஆகியோர் சேர்ந்து 24.12.2016 அன்று மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் சபின் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜித்து மற்றும் ராகுல் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஜித்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், குழித்துறை நீதிமன்ற உத்தரவின் பேரில் மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவம், மார்த்தாண்டம் பகுதியில் ஒரு வீட்டில் வைத்து ஜித்துவை நேற்று கைது செய்தார்.














