திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பங்குனி மாதத்தில் 3 முதல் 6-ம் தேதி வரை மாலை வேளையில் சூரிய ஒளி கருவறை வரை பாய்ந்து, உற்சவர் மற்றும் சயனகோலத்தில் காட்சி தரும் ஆதிகேசவப்பெருமாளின் திருமேனியை தழுவிச்செல்லும் அதிசயம் நிகழ்கிறது. நேற்று (மார்ச் 19) மாலை இந்த அற்புதக் காட்சியைக் கண்ட பக்தர்கள் பரவசமடைந்தனர். இந்த அரிய காட்சியை இன்று 20-ம் தேதி மாலையும் பக்தர்கள் கண்டு ரசிக்கலாம்.














