கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. கேரளா எல்லையை ஒட்டி உள்ளதால் களியக்காவிளை, கோழிவிளை, நெட்டா போன்ற எல்லைப் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களுடன் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. இரவு தொடங்கிய சோதனையைத் தொடர்ந்து, சொகுசு கார்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள், வேன்கள் என அனைத்தும் 24 மணி நேரமும் தடுத்து நிறுத்தப்பட்டு முழுமையாக சோதனையிடப்பட்டு வருகின்றன.














