கப்பியறை பகுதியை சேர்ந்த கிருஷ்ண மணி (36) கடந்த 12ஆம் தேதி தலையில் பலத்த காயத்துடன் வீட்டு அருகே கிடந்த நிலையில், குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று திடீரென மாயமானார். மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடியும் அவர் கிடைக்காததால், அவரது தாயார் ரெஜினாள் (63) ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














