ஒடிசாவில் மூத்த தலைவர் உட்பட 11 மாவோயிஸ்ட்கள் சரண் – ஆயுதங்கள் ஒப்படைப்பு

0
19

ஒடிசா மாநிலம் பஸ்​தாரா- கும்​சர் பகு​தி​யில் உள்ள கலாஹண்​டி, ராயகடா மற்​றும் கந்​த​மால் மாவட்​டங்​களில் மாவோ​யிஸ்ட்​கள் ஆதிக்​கம் இருந்து வந்​தது. இங்கு பாது​காப்பு படை​யினர் தொடர் தேடு​தல் வேட்டை நடத்தி வந்​தனர். மாவோயிஸ்ட்​கள் சரணடைவதை​யும் ஊக்​கு​வித்து வந்​தனர்.

இந்​நிலை​யில் இப்​பகு​தி​யில் மண்டல கமிட்டி உறுப்​பின​ராக இருந்த மூத்த மாவோ​யிஸ்ட் தலை​வர் நகுல் உட்பட 11 மாவோயிஸ்ட்​கள் மாநில டிஜிபி குரானியா முன்​னிலை​யில் ஆயுதங்​களை ஒப்​படைத்து விட்டு சரணடைந்​தனர். இவரை பற்றி தகவல் அளிப்​போருக்கு ரூ.22 லட்​சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.

சரணடைந்த மற்ற 5 பேருக்கு மொத்தமாக ரூ.63.25 லட்​சம் பரிசு அறிவிக்​கப்​பட்​டிருந்​தது குறிப்பிடத்​தக்​கது. ஏ.கே.-47, இன்​சாஸ் ரைபிள், எஸ்​எல்​ஆர் துப்பாக்​கி​கள் உட்பட 11 ஆயுதங்​களை மாவோ​யிஸ்ட்​கள் ஒப்படைத்​தனர்.

இந்​நிகழ்ச்​சி​யில் மாநில டிஜிபி குரானியா பேசுகை​யில், ”நகுல் போன்ற மூத்த மாவோ​யிஸ்ட்​கள் சரணடைந்​துள்​ளது மாவோயிஸ்ட் இயக்​கம் பலவீனம் அடைந்​துள்​ளதை காட்​டு​கிறது. பாது​காப்பு படை​யினரின் தொடர்ச்​சி​யான தேடு​தல் வேட்டையால், ஒடி​சா​வில் மாவோ​யிஸ்ட் இயக்​கம் குறிப்பிடத்தக்க வகை​யில் அழிந்​துள்​ளது” என்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here