பளுகல் பகுதியைச் சேர்ந்த 62 வயதான, மனநலம் பாதிக்கப்பட்ட டாளி என்பவர் நேற்று அவரது வீட்டில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். அக்கம்பக்கத்தினர் துர்நாற்றம் வீசியதை அடுத்து கதவை உடைத்து பார்த்தபோது இந்த சம்பவம் தெரியவந்தது. பளுகல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.














