திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தலைவராக ஜிகேஎம். தமிழ்க்குமரன் தேர்வு

0
24

தமிழ்த் திரைப்​படத் தயாரிப்​பாளர்​கள் சங்​கத் தலை​வ​ராக ஜிகேஎம். தமிழ்க்குமரன் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். தமிழ்த் திரைப்​படத் தயாரிப்​பாளர்​கள் சங்​கத்​துக்கு 3 ஆண்​டுகளுக்கு ஒரு முறை தேர்​தல் நடப்​பது வழக்​கம்.

தற்​போதைய நிர்​வாகி​களின் பதவிக் காலம் ஏப்​ரல் மாதத்​துடன் நிறைவடைகிறது. இதனால், 2026-29-ம் ஆண்​டுக்​கான புதிய நிர்​வாகி​கள் தேர்​தல் சென்னை அண்ணா நகரில் உள்ள கல்​லூரி​யில் நேற்று நடை​பெற்​றது.

ஒரு தலை​வர், 2 துணைத் தலை​வர்​கள், 2 செய​லா​ளர்கள், ஒரு பொருளாளர் உட்பட 33 பதவி​களுக்கு 100 பேர் போட்​டி​யிட்​டனர். இதில், ராம நாராயணன் அணி சார்​பில் தலை​வர் பதவிக்கு முரளி ராம​சாமி 3-வது முறை​யாக போட்​டி​யிட் டார்.

அவரை எதிர்த்​து, நலம் காக்​கும் அணி சார்​பில் ஜிகேஎம். தமிழ்க்​குமரன் போட்​டி​யிட்​டார். தேர்​தல் அதி​காரி​யாக முன்​னாள் நீதிபதி ராஜேஸ்​வரன் செயல்​பட்​டார். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. பின்​னர், வாக்​கு​கள் எண்​ணப்​பட்​டன. இதில் 788 வாக்​கு​கள் பெற்ற தமிழ்க்​குமரன், 527 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றுள்​ளார்.

இது​வரை நடந்த தயாரிப்​பாளர் சங்​கத் தேர்​தலில் தலை​வர் பதவிக்கு போட்​டி​யிட்டு அதிக வாக்​கு​கள் பெற்​றவர் என்ற பெரு​மையை அவர் பெற்​றுள்​ளார். செய​லா​ளர் பதவிக்கு போட்​டி​யிட்ட பைவ் ஸ்டார் கதிரேசன்​, பொருளாளர் பதவிக்கு போட்​டி​யிட் ட சுபாஷ் சந்​திர​போஸ்​ ஆகியோ​ரும் வெற்​றி பெற்றுள்​ளனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here