மனதின் குரல் வானொலி உரையில் பிரதமர் மோடி நேற்று கேரள மாநில கும்பமேளா பற்றி பெருமையாகக் குறிப்பிட்டார்.
இதுகுறித்து பிரதமர் கூறியதாவது: கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரே ஒரு வயலில் மட்டும் 570 வகையான நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இது விதைகளின் மரபைப் பாதுகாக்கும் பேரியக்கம் ஆகும். உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளராக இந்தியா உருவெடுத்திருக்கிறது.
15 கோடி டன்களுக்கும் மேலாக அரிசி உற்பத்தி செய்வது சாதாரண சாதனை கிடையாது. கேரளாவின் திருநாவாய் கிராமத்தில் பொன்னானி நதிக்கரையில் பழமையான பாரம்பரியம் பின்பற்றப்படுகிறது, அதுதான் மாமாங்கம். இதை மகாமக மஹோத்சவம் அல்லது கேரள கும்பமேளா என்கின்றனர்.
எந்த அறிவிப்பும் இல்லாமல் கேரளாவின் கும்பமேளா அண்மையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளது. இந்த விழாவுக்காக விளம்பரம் செய்யப்படவில்லை. வாய்மொழியாகவே தகவல்கள் பரிமாறப்பட்டன. இதன் மூலம் பெருந்திரளான மக்கள் திருநாவாய் கிராமத்தில் கூடினர்.
வடக்கு முதல் தெற்கு வரையில் ஓடும் நதிகள் வேறாக இருக்கலாம், கரைகள் வேறாக இருக்கலாம், ஆனால் நம்பிக்கை ஒன்றுதான், இதுதான் இந்தியா. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.














