விவசாயிகளை மணக்கும் பெண்களுக்கு ஊக்கத் தொகை வழங்க கர்நாடக காங். எம்எல்ஏ கோரிக்கை

0
21

கர்​நாட​க மாநிலம் துமக்​கூரு மாவட்​டத்​தில் உள்ள குனிகல் தொகு​தி​யின் காங்​கிரஸ் எம்​எல்ஏ ரங்​க​நாத் பெங்களூருவில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: “கர்நாட​கா​வில் மண்​டி​யா, துமக்​கூரு, ஹாசன், ஷிமோகா உள்ளிட்ட மாவட்​டங்​களில் விவ​சா​யத்​தில் ஈடு​பட்​டுள்ள ஆண்களை திரு​மணம் செய்​து​கொள்ள பெண்​கள் யாரும் முன்வரு​வ​தில்​லை.

இதனால் 35 வயதை கடந்த போதும், ஆண்​கள் திரு​மணம் செய்யாமல் தனித்து வாழ வேண்​டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் விவ​சா​யிகள் மணப்​ பெண்​களை தேடி கேரளா, தமிழ்நாடு, ஆந்​திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றனர். மொழி காரண​மாக அங்​கும் அவர்​களுக்கு பெண்கள் கிடைப்​ப​தில்​லை. இதனால் ஆண்​டு​தோறும் மலை மாதேஷ்வரன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கானோர் நடந்து சென்று, நேர்த்​திக் கடன் செலுத்தி வரு​கின்​றனர்.

எனது தொகு​தி​யில் 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட ஆண்​கள் 30 வயதை கடந்து திரு​மணம் ஆகாமல் இருக்​கின்​றனர். அவர்​களை திரு​மணம் செய்​து​கொள்ள முன்​வரும் பெண்​களுக்கு விவ​சாய அமைப்​பு​களே இலவச​மாக திரு​மணம் செய்து வைக்க தயா​ராக இருக்​கின்​றன. இருப்​பினும் பெண்​கள் பெங்​களூரு​வில் உள்ள மணமகன்களையே விரும்​பு​கின்​றனர்.

ஆண்​களின் இந்த அவல நிலையை கருத்​தில் கொண்டு கர்​நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். இதுகுறித்து முதல்​வர் சித்​த​ராமை​யா​வுக்கு கோரிக்கை மனு அடங்​கிய கடிதம் ஒன்றை அனுப்​பி​யுள்​ளேன். அந்த கடிதத்​தில் விவ​சா​யிகளை திரு​மணம் செய்​து​கொள்​ளும் பெண்​களுக்கு ஊக்​கத் தொகை வழங்க வேண்டும். தங்க தாலி, சீர்​வரிசை பொருட்​கள் ஆகிய​வற்றை அரசே வழங்க வேண்​டும்.

விவ​சாயக் குடும்​பங்​களின் சமூக, பொருளா​தார‌ நிலையை மேம்படுத்த அவர்​களுக்கு அரசு வேலை வழங்க வேண்​டும். இதனை வரு​கிற பட்​ஜெட் கூட்​டத்​திலே அறிவிக்க வேண்​டும் என வலி​யுறுத்​தி​யுள்​ளேன்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here