‘டபுள் ஆக்​குபன்​சி’யில் ரொமான்​டிக் ஃபேன்​டஸி

0
32

அறி​முக இயக்​குநர் அஸ்​வின் கந்​த​சாமி இயக்​கத்​தில் உருவாகி​யுள்ள திரைப்​படத்​துக்​கு, ‘டபுள் ஆக்​குபன்​சி’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் சந்​தோஷ், சம்யுக்தா விஸ்​வ​நாத், ரேஷ்மா வெங்​கடேஷ், வினோத் கிஷண், விடிவி கணேஷ், பகவதி பெரு​மாள் உள்பட பலர் நடித்​துள்​ளனர்.

ரொமான்​டிக் ஃபேன்​டஸி திரைப்பட​மான இதை அவ்னி மூவீஸ் மற்​றும் பென்ஸ் மீடியா நிறு​வனங்​கள் இணைந்து தயாரிக்​கின்​றன. சாம் சி.எஸ் இசை அமைக்​கும் இப்படத்துக்கு சந்​தகு​மார் சக்​ர​வர்த்தி ஒளிப்​ப​திவு செய்கிறார்.

காதல், கற்​பனை மற்​றும் அடை​யாளம் குறித்த சமகால சிந்​தனை​களை உள்​ளடக்​கிய இப்​படம், தமிழ் சினிமாவின் வழக்​க​மான எல்​லைகளைத் தாண்டி புதிய அனுபவத்​தைத் தரும் என்​றும் அறி​வியல் மற்​றும் நம்பிக்கைக்கு இடையே​யான மோதல், ஒரு​வரை இரண்டு வெவ்​வேறு வடிவங்​களில் நேசிப்​ப​தில் உள்ள வலிமிகுந்த அழகு ஆகிய​வற்றை மைய​மாக வைத்​துக் கதை பின்​னப்​பட்​டுள்​ள​தாக​வும் படக்​குழு தெரி​வித்​துள்​ளது. தற்​போது இதன் படப்​பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக் ஷன் பணி​கள் நடந்து வரு​கின்​றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here