பிரபல கன்னட நடிகை ரஷ்மி லீலா (37), ‘தெலுங்கு ஜானகி’, ‘காவலுதாரி’, ‘காவ்யாஞ்சலி’ உள்பட பல்வேறு சின்னத்திரை தொடர்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ரஷ்மி லீலாவின் கணவர் சரிக்கு மஞ்சு தொலைக்காட்சி தொடர் வசன கர்த்தாவாக உள்ளார்.
ரஷ்மி லீலா கடந்த 2019 -ம் ஆண்டு முதல் நுரையீரல் பிரச்சினை காரணமாக சிகிச்சைப் பெற்று வந்தார். சமீபத்தில் அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில் திடீரென அவர் உயிரிழந்தார். இதை அவர் கணவர் தெரிவித்துள்ளார். அவரின் இறுதிச் சடங்கு பெங்களூருவில் உள்ள பனசங்கரி மின்மயானத்தில் நேற்று நடைபெற்றது. நடிகை ரஷ்மி லீலாவின் மறைவுக்கு கன்னட சின்னத்திரை துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.














