7 வயது சிறுமி கொலை வழக்கில் திருப்பம்: கொலையாளி தற்கொலை – திருப்பதி அருகே நடந்தது என்ன?

0
19

திருப்​பதி அருகே உள்ள மதனபல்​லியை சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 16-ம் தேதி காணா​மல் போனார். இதையடுத்து அவரது பெற்​றோர் பல இடங்​களில் தேடிய பின்​னர் போலீ​ஸில் புகார் கொடுத்​தனர்.

மதனபல்லி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்​தனர். வீட்டின் அருகே இருந்த கண்​காணிப்பு கேம​ரா​வில் பதிவானவற்றை கொண்டு ஆய்வு செய்​த​ போது சிறுமி​யின் பக்கத்து வீட்​டில் வசிக்​கும் குல​வர்​தன் என்​பவர், சிறுமியை அழைத்​துச் சென்​றது தெரிய​வந்​தது. இதைத் தொடர்ந்து குலவர்தன் வீட்​டில் ஆய்வு செய்​த​போது சிறுமி​யின் சடலம் கிடைத்தது. இதையடுத்து குல​வர்​தன் கைதா​னார்.

இந்​நிலை​யில் குல​வர்​தனை தங்​களிடம் ஒப்​படைக்​கு​மாறு பொது​மக்​கள் கோஷமிட்​டனர். ஆந்​திர அமைச்​சர்​கள் அனி​தா, லோகேஷ் ஆகியோர் தலை​யிட்​டு, குற்​ற​வாளிக்கு தண்​டனை கிடைப்​ப​தற்கு நடவடிக்கை எடுப்​போம் என உறுதி அளித்​தனர். அதன் பின்​னர், குல​வர்​தனை போலீ​ஸார் அழைத்​துச் சென்​றனர். பின்​னர் சிறுமி​யின் உடல் அவரது பெற்​றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்​நிலை​யில், நேற்று கனசானி​வாரிபல்லி ஏரி​யில் குல​வர்​தன் ஏரி​யில் குதித்து தற்​கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மதனபல்லி மக்​கள் ஊர்​வல​மாக சென்​று, பட்​டாசு வெடித்​து கொண்​டாடினர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here