குமரி: மாணவன் ஓட்டிய பைக் விபத்து – உறவினர் மீது வழக்கு

0
119

மணவாளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கிங்சிலின் என்பவர், 12ஆம் வகுப்பு படிக்கும் தனது உறவினர் மகனுக்கு கடந்த 30ஆம் தேதி பைக்கை ஓட்டக் கொடுத்துள்ளார். அம்மாண்டி விளை பகுதியில் பைக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி மாணவன் படுகாயமடைந்தான். நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவன் மற்றும் பைக் ஓட்ட அனுமதித்த கிங்சிலின் மீது மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here