திருவட்டாறு: தொழிலாளி குளத்தில் பிணமாக மீட்பு

0
173

வேர்க்கிளம்பி பகுதியை சேர்ந்த தொழிலாளி செல்வின் ஜெபக்குமார் (44) மதுப்பழக்கத்தால் மனைவியுடன் பிரிந்து வாழ்ந்து வந்தார். நேற்று அப்பகுதியில் உள்ள குளத்தில் அவரது உடல் பிணமாக கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருவட்டாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here