மார்த்தாண்டம்: தனியார் வங்கி முன் மகனுடன் பெண் போராட்டம்

0
510

மார்த்தாண்டம் அருகே புலிப்பனம் பகுதியை சேர்ந்த பெண்ணின் கணவர் இறந்து விட்டதால் தனது 32 மகனுடன் வசித்து வருகிறார். தொழிலாளியான அவரது மகன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மார்த்தாண்டத்தில் ஒரு தனியார் வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டி உள்ளார்.

     வீடு கட்டும் பணியின் போது பக்கத்தில் நின்ற மரக்கிளையை வெட்டுவதற்காக மரத்தில் ஏறிய போது கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்து அவர் கடந்த ஒரு ஆண்டாக கை கால்கள் செயலிழந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவர்கள் தொடர்ந்து வங்கி தவணை செலுத்த முடியவில்லை இதனால் தனியார் வங்கி ஊழியர்கள் வீட்டை பூட்டினர்.

       இதனால் அந்தப் பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மகனை நேற்று ஆம்புலன்ஸ் சில்  அழைத்துக் கொண்டு மார்த்தாண்டத்தில் சம்பந்தப்பட்ட தனியார் வங்கி முன் வந்து நீதி கேட்டு போராட்டம் நடத்தினார். இதை அறிந்த வங்கி அதிகாரிகள் அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பெண் ஆம்புலன்ஸ் சில்  மகளை அங்கிருந்து அழைத்து சென்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here