தக்கலை: தோட்டத்தில்  பேட்டரி திருட்டு ; 2 பேர் கைது

0
333

வேர்க்கிளம்பி அருகே உள்ள மாத்திரவிளை பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் (62). இவருக்கு அந்த பகுதியில் வாழைத்தோட்டம் உள்ளது. தோட்டத்தை சுற்றி சூரிய ஒளி மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பேட்டரி, ரிசீவர், கண்ட்ரோலர் போன்ற மின் சாதனங்கள் வைக்கப்பட்டிருந்தது. 

நேற்று முன்தினம் அவர் தோட்டத்திற்கு சென்றபோது அங்கிருந்த பேட்டரி, ரிசீவர், கண்ட்ரோலர் ஆகியவற்றை காணவில்லை. அதனை யாரோ திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு 26 ஆயிரத்து 500 ஆகும். இதுகுறித்து கொற்றிகோடு போலீசில் வின்சென்ட் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தோட்டத்தில் உள்ள பொருட்களை திருடியது விஜில் ராஜ் (43), அருள்ராஜ் (49) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விஜயராஜ் போலீஸ் ரௌடிகள் பட்டியலில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here