சூர்யாவுக்கு நாயகி ஆகிறார் மமிதா பைஜு?

0
226

சூர்யா நடிக்கவுள்ள படத்துக்கு மமிதா பைஜு உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதனைத் தொடர்ந்து வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார். இதனை சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

சூர்யா நடிக்கவுள்ள இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மே மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதில் நாயகியாக நடிக்க மமிதா பைஜு உடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அவரும் சூர்யா படம் என்பதால் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெங்கி அட்லுரி – சூர்யா கூட்டணி படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரியவுள்ளார். இதன் படப்பிடிப்பு தொடங்கு முன்பே பாடல் பணிகள் அனைத்தையும் முடிக்க வெங்கி அட்லுரி திட்டமிட்டு இருக்கிறார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here