Home 2024
Yearly Archives: 2024
சல்மான் கான் மீது காதல்: நினைவு கூர்கிறார் சுஷ்மிதா சென்
பிரபல இந்தி நடிகை சுஷ்மிதா சென், தமிழில் ‘ரட்சகன்’ படத்தில் நடித்துள்ளார். ‘முதல்வன்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது இளம் பருவத்தில் சல்மான் கான் மீது காதல் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “சல்மான் கானின் முதல் படம் வெளியான போதே அவர் மீது எனக்கு காதல் வந்துவிட்டது. வீட்டில் என் செலவுக்குத் தரும் பணத்தை அவருடைய போஸ்டர் வாங்குவதற்காகச் செலவிட்டேன். அப்போது வீட்டுப் பாடத்தை சரியான நேரத்தில் முடிக்காவிட்டால், அந்த போஸ்டர்களை அறையிலிருந்து அகற்றிவிடுவதாக...
‘தி ஸ்மைல் மேன்’ – திரை விமர்சனம்
ஒரு விபத்துக்குப் பிறகு மறதி நோயின் தாக்கத்தால் அவதிப்படுகிறார் சிதம்பரம் (சரத்குமார்). சிறப்புப் புலனாய்வுத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற காவல் அதிகாரியான அவருடைய நினைவுகள் அனைத்தும் வெகு விரைவில் மறந்து போய்விடும் என்கிறார் மருத்துவர். இப்படிப்பட்டச் சிக்கலான நிலையில், ஒரு ‘சீரியல் கில்லர்’ வழக்கைக் கையிலெடுக்க வேண்டிய கட்டாயம் காரணமாக மீண்டும் பணியில் இணைகிறார். அவராலும் அவருடைய குழுவினராலும் அந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவர முடிந்ததா என்பது கதை.
முதன்மைக் கதாபாத்திர அறிமுகம், அவருக்கான பிரச்சினை, அவர் மீண்டும் பணியில் இணைய வேண்டிய கட்டாயம்...
நெல்சன் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் – பேச்சுவார்த்தையில் புதிய கூட்டணி
நெல்சன் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
‘ஜெயிலர்’ வெற்றிக்குப் பிறகு ‘ஜெயிலர் 2’ படத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் நெல்சன். இதன் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ரஜினியுடன் நடிக்க இருப்பவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே, ஜூனியர் என்.டி.ஆர் படத்தை இயக்க நெல்சனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஜூனியர் என்.டி.ஆர் - நெல்சன் சந்திப்பும் நடைபெற்றுள்ளது. இதனை ஜூனியர் என்.டி.ஆருக்கு நெருங்கிய நண்பரான தயாரிப்பாளர் நாக வம்சி உறுதிப்படுத்தி...
“திருமணம் செய்துகொள்ள மாட்டேன்” – ஸ்ருதிஹாசன்
திருமணம் செய்துகொள்ள போவதில்லை என்ற நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியொன்றில், “திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை” என்று தெரிவித்திருந்தார் ஸ்ருதிஹாசன். இப்போது அளித்துள்ள பேட்டியொன்றில், திருமணம் குறித்து அதே நிலைப்பாட்டில் இருக்கிறீர்களா என்று ஸ்ருதிஹாசனிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
அதற்கு ஸ்ருதிஹாசன், “திருமணம் செய்வதை விட ரிலேஷன்ஷிப் பிடிக்கும். வாழ்க்கையில் எதையும் கணிக்க முடியாது. ஆகையால் திருமணம் எனக்கு தெரியவில்லை. எனக்கு ரிலேஷன்ஷிப் பிடிக்கும், ரொமான்ஸ் பிடிக்கும். நான் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருப்பதை விரும்புகிறேன். யாரிடமாவது என்னை மிகவும்...
பெங்களூரு எஃப்சி அணியுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் சென்னையின் எஃப்சி
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - பெங்களூரு எஃப்சி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெங்களூரு எஃப்சி அணி தனது கடைசி ஆட்டத்தில் எஃப்சி கோவாவுக்கு எதிராக 2-2 என்ற கணக்கில் டிரா செய்திருந்தது. அதேவேளையில் சென்னையின் எஃப்சி தனது கடைசி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி மும்பையிடம் தோல்வி அடந்திருந்தது.
பெங்களூரு எஃப்சி அணி இந்த சீசனில் அற்புதமாக செயல்பட்டு வருகிறது. அந்த அணி 12 ஆட்டங்களில்...
ஆட்டத்தின் போக்கை மாற்றிய ஜெய்ஸ்வாலின் ரன் அவுட்: இந்திய அணி 164 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாற்றம்
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் ஸ்மித்தின் சதம் மூலம் 474 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.
மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 86 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது. அறிமுக வீரரான...
3-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி
இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வடோதராவில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் மகளிர் அணி 38.5 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சினெல்லே ஹென்றி 61, ஷெமைன் காம்ப்பெல் 46 ரன்கள் சேர்த்தனர். இந்திய மகளிர் அணி சார்பில் தீப்தி சர்மா 6 விக்கெட்களையும், ரேணுகா சிங் 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
163 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய மகளிர்...
சீன ஆய்வகத்தில் இருந்து கரோனா பரவியதற்கான ஆதாரத்தை அதிபர் பைடன் நிறுத்தி வைத்தார்: அமெரிக்க பத்திரிகையில் தகவல்
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் சீனாவிலிருந்து கரோனா வைரஸ் பரவியது. இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டனர். சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக இதன் பாதிப்பு இருந்தது.
இந்நிலையில் சீனாவின் வூகான் நகரிலுள்ள ஆய்வகச் சோதனையின்போது கரோனா வைரஸ் கசிந்து பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது என்று அப்போது செய்திகள் வந்தன. ஆனால், இதை சீனா மறுத்தது.
இந்நிலையில் சீனாவிலுள் ஆய்வகத்தில் இருந்துதான் கரோனா வைரஸ் பரவியது என்பதற்கான ஆதாரத்தை...
ட்ரம்ப் ஆட்சியில் அணு ஆயுத சோதனை நடத்த வாய்ப்பு: அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில், ரஷ்யா அணு ஆயுத சோதனை நடத்த வாய்ப்பு உள்ளதாக அந்நாடு எச்சரித்துள்ளது.
1990-ல் சோவியத் யூனியன் அணு ஆயுத சோதனையை நடத்தியது. சோவியத் யூனியன் உடைந்த பிறகு ரஷ்யா அணு ஆயுத சோதனையை நடத்தவில்லை. இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக இருக்கும் காலத்தில் ரஷ்யா அணு ஆயுத சோதனையை நடத்த வாய்ப்பு உள்ளதாக ரஷ்யாவின் ஆயுத கட்டுப்பாட்டு மையத்தை மேற்பார்வையிடும் அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் கூறியதாக கொம்மர்சன்ட்...
காலநிலை மாற்றத்தால் 2024-ல் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவு: ஆய்வறிக்கை
காலநிலை மாற்றத்தால் 2024-ல் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவானதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. மேலும், தீவிர காலநிலை நிகழ்வுகள் 3700 பேர் உலகம் முழுவதும் உயிரிழந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
கூடுதலாக 41 நாட்கள்.. ஐரோப்பாவின் காலநிலை கணிப்பு அமைப்பான கோப்பர்னிகஸ், 2024 ஆன் ஆண்டு தான் உலக வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டு. மேலும், இந்த ஆண்டு தான் முதன்முறையாக தொழில்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் நிலவிய சர்வதேச புவி மேற்பரப்பு வெப்ப சராசரியைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அதிக வெப்ப...














