Home 2024
Yearly Archives: 2024
சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேச அனுமதி மறுப்பு: பேரவையில் இருந்து பாமக வெளிநடப்பு
சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பேச அனுமதிக்காததால் பேரவையில் இருந்து பாமகவினர் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில், நேரமில்லா நேரத்தில், சட்டப்பேரவை பாமக தலைவர் ஜி.கே.மணி, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பேரவை விதிகளை தளர்த்தி தனித்தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பாக பேசவாய்ப்பு கேட்டார். அதற்கு பேரவைதலைவர் வாய்ப்பு அளிக்கவில்லை. அதைத்தொடர்ந்து, ஜி.கே.மணி உள்ளிட்ட பாமக உறுப்பினர்கள் பேச வாய்ப்பு கேட்டு கோஷம் எழுப்பினர்.
அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏற்கெனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக நானும், நிதியமைச்சரும் பதிலளித்து விட்டோம். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ்,...
மத்திய அரசு தனது கடமையை நிறைவேற்றாததால் மாநில அரசின் கடன், நிதி பற்றாக்குறை அதிகரிப்பு: நிதியமைச்சர் குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று பேசியதாவது:
இந்த அரசுக்கென்று மாபெரும் தமிழ்க்கனவு உள்ளது. சமூக நீதி,கடைக்கோடி தமிழர் நலன் உள்ளிட்ட இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள் ளது. சமூக நீதி தத்துவம்தான் பட்ஜெட்டில் வெளிப்பட்டுள்ளது.புதியவறுமை ஒழிப்பு திட்டத்தில் ஆதரவற்றோர், ஒற்றை பெற்றோர் குடும்பங்கள், மாற்றுத் திறனாளிகள், மனநலம் குன்றியோர் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளும் வழங்கப்படும்.
மத்திய அரசு திட்டங்களின் பெயரில்தான் தமிழக அரசு திட்டங்களைச் சொல்வதாக திட்டமிட்ட பிரச்சாரம்...
பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டத்தை கைவிட வேண்டும்: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை வேண்டுகோள்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் பார்வையற்றக் கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் சங்கத்தினர் ஆகியோர் போராட்டத்தைக் கைவிடவேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் நலத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக மாற்றுத் திறனாளிகள் நலத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பு, உதவித்தொகை உயர்த்திவழங்குதல் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்றக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் கடந்த 13-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்க உறுப்பினர்களிடம் பிப்.17 மற்றும் பிப்.21-ம்...
“நிலம் தர மறுத்ததால் குற்றவாளிகளை போல் நடத்தும் காவல் துறையினர்” – போராடும் மேல்மா விவசாயிகள்
அமைச்சர் எ.வ.வேலுவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முதல்வரை சந்திக்க அனுமதிக்க கோரியும் செய்யாறு அடுத்த மேல்மா கூட்டுச்சாலையில் 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த 7 விவசாயிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றி திருவண்ணா மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்த காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் திட்டத்தை எதிர்த்து, கடந்த 7 மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து, சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கருத்து தெரிவித்திருந்தார். அமைச்சர்...
“வரும் தேர்தலில் தமிழகத்தில் பாஜக வாக்கு சதவீதம் அதிகரிக்கும்” – அண்ணாமலை உறுதி
வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு 33 சதவீதமாக அதிகரிக்கும் என, மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்ற ‘என் மண் என் மக்கள்’ நடை பயணம் நேற்று மாலை கோவை பாப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் தொடங்கி சித்தாபுதூர் விகேகே மேனன் சாலையில் நிறைவடைந்தது.
தொடர்ந்து அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தில் மது விற்பனை மூலம் அரசுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இந்தியாவில் எந்த...
காங்கிரஸ் வங்கிக் கணக்கில் இருந்து நிலுவைத் தொகை ரூ.65 கோடி பிடித்தம் செய்த வருமான வரித் துறை
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளிலிருந்து வருமான வரித் துறை நேற்று ரூ.65 கோடியை வரி நிலுவையாக பிடித்தம் செய்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் “ஜனநாயகத்துக்கு விரோதமாக வருமான வரித் துறை செயல்படுகிறது” என்று விமர்சித்துள்ளது.
கடந்த வாரம், வருமான வரித் துறை காங்கிரஸ் கட்சியின் முக்கியமான நான்கு வங்கிக் கணக்குகளை முடக்கியது. இதை எதிர்த்து, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் முறையிட்டது. அதைத் தொடர்ந்து வங்கிக் கணக்கு முடக்கத்தை தற்காலிகமாக ரத்து செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை...
ஆந்திராவில் ஜெகன் கட்சியின் மற்றொரு எம்.பி. ராஜினாமா
ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் கட்சியின் மற்றொரு எம்.பி. நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் கட்சியை விட்டும் விலகினார்.வரும் மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. இந்நிலையில் மக்களிடையே செல்வாக்கு இல்லாத அல்லது செல்வாக்கு குறைந்த எம்.பி., எம்எல்ஏ.க்கள் பலரை வரும் தேர்தலில் வேறு தொகுதியில் போட்டியிட வைக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளார்.
வேட்பாளர்கள் மாற்றம்: இதற்காக 4-வது கட்டமாக வேட்பாளர்களை மாற்றிய பட்டியலை ஜெகன் வெளியிட்டுள்ளார். இதனால் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனை எதிர்க்கட்சிகளும் தீவிரமாக...
பெங்களூரு சட்டமேலவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி
கர்நாடகாவில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பெங்களூரு ஆசிரியர் தொகுதி எம்எல்சி புட்டண்ணா தனது பதவியை ராஜினாமா செய்தார்.ஆனால் அவருக்கு காங்கிரஸ் சார்பாக சீட் வழங்கப்படவில்லை. இதனால் கடந்த வாரம் நடந்த பெங்களூரு ஆசிரியர் தொகுதி சட்டமேலவை இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக - மஜத கூட்டணி சார்பில் ஏ.பி.ரங்கநாத் போட்டியிட்டார்.இந்த தேர்தலில் 16,063 வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் வேட்பாளர் புட்டண்ணா 8,260 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். பாஜக-மஜத...
மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி 39 தொகுதியில் போட்டி
மகாராஷ்டிராவில் மொத்தம் 48 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி 41 இடங்களில் வென்றது. தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களை வென்றது.
இந்நிலையில் கோல்ஹாபூரில் சத்ரபதி சிவாஜி குடும்பத்தைச் சேர்ந்த சத்ரபதி ஷாஹு மகாராஜை சரத் பவார் நேற்று சந்தித்தார். அவரை மக்களவை தேர்தலில் மகா விகாஸ் அகாடி கூட்டணி வேட்பாளராக நிறுத்துவதற்கு சரத்பவார் விருப்பம் தெரிவித்தார். பின்னர் சரத் பவார் கூறும்போது, ‘‘மகாராஷ்டிராவில் 39 தொகுதிகளில்...
இந்துக்களுக்கான நடத்தை விதிமுறை தயாரிக்கும் பண்டிதர்கள்: பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் வெளியிட திட்டம்
70 பண்டிதர்களால் இந்து சமூகங்களுக்கான நடத்தை விதிமுறைகள் தயாராகி வருகின்றன. இவை, உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள மகா கும்பமேளாவில் வெளியிடப்பட உள்ளன.
இந்துக்களில் ஒவ்வொருவரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்வுகளுக்கான நடத்தைவிதிமுறைகள் அனுசரிக்கப்படுகின்றன. இந்துக்களின் பல்வேறுசமூகங்களால் கடைப்பிடிக்கப்படும் நடத்தை விதிமுறைகள் பெரும்பாலும் சனாதனத்தை அடிப்படையாகக் கொண்டவையாகக் கருதப்படுகிறது.
காலப்போக்கின் மாற்றங்களால் சில தவறான சம்பிரதாயங்களும் இதில் கடைப்பிடிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இவற்றை சரி செய்யும் வகையில் இந்துக்களுக்கான நடத்தை விதிமுறைகளை தொகுத்து வெளியிடப்பட உள்ளது.இது, அடுத்த வருடம் ஜனவரியில் 351 ஆண்டுகளுக்கு...














