Google search engine
Home 2024

Yearly Archives: 2024

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள்

மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் உடன்படிக்கை நேற்று கையெழுத்தானது.கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக கூட்டணியில், 2 கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்தமுறை இரு கட்சிகளும் 3 தொகுதிகள் கேட்டன. இந்நிலையில் நேற்று அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு முதலில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சுப்பராயன் எம்.பி.தலைமையிலான குழுவினரும், தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சம்பத் தலைமையிலான குழுவினரும் அண்ணா அறிவாலயம்...

மஹாசிவராத்திரி: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச் 8 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

மஹாசிவராத்திரியினை முன்னிட்டு மார்ச் 8 (வெள்ளிக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. மார்ச் 08 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024 மார்ச் 23 (சனிக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மஹாசிவராத்திரிக்கு உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச் சட்டம் 1881-இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் மார்ச்...

விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும்: விஜய்வசந்த்

குமரி கிழக்கு மாவட்ட த.மா.கா. பொருளாளரும், மாநில செயற்குழு உறுப்பினருமான டாக்டர் சிவக்குமார் கட்சியிலிருந்து விலகி, விஜய் வசந்த் எம்.பி. முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். அவருடன் 50-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினரும் இணைந்தனர். தொடர்ந்து விஜய் வசந்த் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சி பழமையான கட்சியாகும். பல தலைவர்களை உருவாக்கியுள்ளது. விஜயதரணி எம்.எல்.ஏ. கட்சியை விட்டு சென்று விட்டதால் கட்சி பலவீனம் அடைந்து விடாது. விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். தொகுதி பங்கீடு குறித்து அகில இந்திய...

ஆந்திராவில் குடும்ப அரசியல் மேலோங்கி விட்டது: மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி கருத்து

ஆந்திராவில் குடும்ப அரசியல் மேலோங்கி விட்டது என மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி கூறியுள்ளார். ஆந்திராவில் வெகு விரைவில் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் மாநில கட்சிகளுக்கும், தேசிய கட்சிகளுக்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பிறகு அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அவர் தற்போது ஆந்திர முதல்வராக பதவி வகித்து வருகிறார். என்.டி.ஆரின் மறைவுக்கு பிறகு அவரது மருமகன் சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் கட்சியின்...

மனநலம் பாதித்த நபரின் வயிற்றில் 39 நாணயம், 37 காந்தங்கள் அகற்றம்

டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு ஒருவர் கடும் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவர் கடந்த சில வாரங்களாக நாணயங்கள் மற்றும் காந்தங்களை விழுங்கி வந்தார்எனவும், அவர் ஏற்கெனவே மனநல சிகிச்சை பெற்றவர் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர். அந்த நபரின் வயிற்றை எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது சிறுகுடலில் அதிகளவிலான நாணயங்கள் மற்றும் காந்தங்கள் அடைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து நாணயங்கள், காந்தங்கள் அகற்றப்பட்டது. அதில்...

மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏ-க்கள்: இமாச்சலில் பாஜக வேட்பாளர் வெற்றி

மாநிலங்களவைத் தேர்தலில் இமாச்சல பிரதேசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். கர்நாடகாவில் 3 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் விரைவில் காலியாக உள்ள 56 இடங்களுக்கு பிப்ரவரி 27-ல் தேர்தல் நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ம் தேதி முடிந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பாஜகதேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உட்பட மொத்தம் 41 பேர்போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில், உத்தரபிரதேசம், கர்நாடகா மற்றும் இமாச்சலபிரதேசம் ஆகிய 3...

ஜமாத்-இ-இஸ்லாமி மீதான தடை 5 ஆண்டுகள் நீட்டிப்பு

ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வந்த ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தது. இதனால் இந்த அமைப்பை கடந்த 2019-ம் ஆண்டு அரசு தடை செய்தது. இந்த அமைப்புடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தி, தீவிரவாதம் தொடர்புடைய ஆவணங்கள், டிஜிட்டல் கருவிகள் மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கத்தை கைப்பற்றியது. இதையடுத்து ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் டி.ராஜாவின் மனைவி போட்டி!

கேரளாவில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இதில் ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவை அக்கட்சி நிறுத்தியுள்ளது. இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் இடதுசாரி கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. எனினும் கேரளாவை பொறுத்தவரை காங்கிரஸும் இடதுசாரி கட்சிகளும் எதிரெதிராக போட்டியிடுகின்றன.கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் 15 தொகுதிகள் காங்கிரஸ் வசம் உள்ளன. இதனால் அந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் உள்ளது. இதுபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட...

அச்சிறுப்பாக்கத்தில் இரட்டைமலை சீனிவாசன் நினைவு மண்டபம்: முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்

அச்சிறுப்பாக்கத்தில் இரட்டை மலை சீனிவாசன் நினைவு மண்டபத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த கோழியாளம் என்ற கிராமத்தில் பிறந்தவர் இரட்டைமலை சீனிவாசன். இவர், பட்டியலின மக்களின் பல்வேறு உரிமைகளுக்காக போராட்டங்களில் ஈடுபட்டவர்.இந்நிலையில், இரட்டைமலை சீனிவாசனுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில், கடந்த 2018-19-ம் ஆண்டு ரூ.1 கோடியே 35 லட்சத்து 74 ஆயிரத்து 909 கோடி மதிப்பில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து,...

மிக்ஜாம் புயலால் சேதமடைந்த மீன்பிடி உபகரணங்களை சீரமைக்க ரூ.12.88 கோடி நிவாரணத் தொகை

சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் சேதமடைந்த மீன்பிடி உபகரணங்களை சீரமைக்க ரூ.12.88 கோடி நிவாரணத் தொகையை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி நேற்று வழங்கினார். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் சேதமடைந்த மீன்பிடி உபகரணங்களை சீரமைப்பதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி, சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நெல்லை, குமரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை.. வானிலை எச்சரிக்கை

தமிழ்நாடு வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி. காரைக்கால் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 9) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே...

நாகர்கோவில் பூத்தில் அதிக ஓட்டு பெற்றால் மோதிரம் -நயினார்

நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக தமிழ் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வேட்பாளர் எம். ஆர். காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில்...

இரணியல்: ரயில் நிலையம் ‘பி’ பிரிவு தர நிலைக்கு உயர்வு

இந்திய ரயில்வேயை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், குமரி மாவட்டம் இரணியல் ரயில் நிலையம் பழைய சிக்னல் மற்றும் ரயில் இயக்க கட்டுப்பாட்டு முறைகளை மாற்றி, 'மின்னணு இன்டர்லாக்கிங்' மற்றும் கணினி வழி கண்காணிப்பு வசதியுடன் தரம்...