Google search engine
Home 2024

Yearly Archives: 2024

உலகில் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது: தமிழிசை பெருமிதம்

குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசி திருவிழாவில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடந்த 87 வது சமய மாநாட்டில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் குத்து விளக்கேற்றினார். பின்னர் அவர் பேசியதாவது:- 500 ஆண்டு கால கனவு அயோத்தி கோவில் மூலம் நனவாகி உள்ளது. ஆன்மீகம் தழைக்கும் நாடு நன்றாக இருக்கும். இப்போது உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. இதற்கு காரணம் நம் நாட்டின் ஆன்மீகம்தான். ஆன்மீகத்துடன் தேசியமும் வளர்கிறது. நான் பிறந்த இந்து...

ம.பி.யில் மினி லாரி கவிழ்ந்த விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில் மினி லாரி கவிழ்ந்து ஆழமான பள்ளத்தில் விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர்.மத்திய பிரதேசத்தின் திண்டோரி மாவட்டம் அம்ஹாய் தேவ்ரி கிராமத்தை சேர்ந்த 30-க்கும்மேற்பட்டோர் ஷாபுரா பகுதியில் நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதன் பிறகு மினி லாரி ஒன்றில் இரவில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவில் பட்ஜார் காட் என்ற இடத்தில் உள்ள ஒரு வளைவில் இவர்களின் லாரி திடீரென கவிழ்ந்து, 40-50 அடி ஆழ பள்ளத்தில்...

பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறது சிபிஐ: அகிலேஷ் யாதவ் விமர்சனம்

கடந்த 2012-16 காலகட்டத்தில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தர பிரதேசமுதல்வராக பதவி வகித்தார். அப்போது, சுரங்க குத்தகை சட்ட விரோதமாக நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த அலகாபாத்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்தொடர்ச்சியாக 2019-ம் ஆண்டுசிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் அகிலேஷ் யாதவ் சாட்சியாக சேர்க்கப்பட்ட நிலையில், சாட்சி விசாரணைக்கு பிப்ரவரி 29-ம் தேதிக்குள் ஆஜராகும்படி அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதுகுறித்து அகிலேஷ் யாதவ் நேற்று கூறுகையில், “பாஜகவின் கைப்பாவையாக சிபிஐ...

இமாச்சல பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் 6 பேர் தகுதி நீக்கம்: சட்டப்பேரவைத் தலைவர் நடவடிக்கை

இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி கட்டுப்பாட்டை மீறி மாற்று கட்சி வேட்பாளருக்கு வாக்களித்த 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சட்டப்பேரவை தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவைத் தலைவர் குல்தீப் சிங் பதனியா கூறியதாவது:இமாச்சல பிரதேச மாநிலத்தின் ஒரே ஒரு தொகுதிக்கு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்தனர். மேலும், சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான வாக்கெடுப்பின்போதும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. நிதி மசோதாவில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க...

பாஜக தலைமையிலான கூட்டணிக்கு முஸ்லிம் வாக்காளர்களின் ஆதரவு அதிகரிக்கும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை

இந்திய குடியரசுக் கட்சித் தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே அசாம் மாநிலம் குவாஹாட்டியில் நேற்று கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான என்டிஏ அரசு அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய சமூக, பொருளாதார வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறது. சாலை உருவாக்கம், நீர்ப்பாசனக் கட்டமைப்பு, பழங்குடி மக்கள் மேம்பாடு என பல தரப்பட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. அந்த வகையில் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வரும் தேர்தலில் சிறப்பாக செயல்படும். இந்தத் தேர்தலில்,...

உ.பி.யின் ஐஏஎஸ் அதிகாரி அபிஷேக் சிங் ராஜினாமா: பாலிவுட் படங்களில் நடித்தவர், அரசியலில் இறங்கவும் திட்டம்

உத்தரபிரதேசம் ஜோன்பூரை சேர்ந்தவர் அபிஷேக் சிங். 2011-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர் சொந்த மாநில கேடரில் பணியாற்றி வந்தார். திரைப்பட நாயகன் போன்று தனது தோற்றம் இருப்பதாக கருதும் அபிஷேக் தனது புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வார். இவை வைரலாகி வந்த நிலையில், கடந்த 2015-ல்அயல்பணியாக டெல்லி மாநில அரசில் சேர்ந்து 5 வருடங்கள் பணியாற்றினார்.கடந்த 2022-ல் நடந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தலின்போது இவரை மத்திய பார்வையாளராக தேர்தல் ஆணையம் குஜராத் அனுப்பியது. அங்கு அபிஷேக் தனது...

பள்ளி வளர்ச்சி பணிகளுக்கான மத்திய அரசின் நிதி நிறுத்தம்: பள்ளிக்கல்வி துறைக்கு சிக்கல்

பள்ளிகள் வளர்ச்சிப் பணிகளுக்கான ரூ.1,045 கோடி நிதியுதவியை மத்திய அரசு திடீரென நிறுத்தியதால் தமிழகத்துக்கு கூடுதல் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் வளர்ச்சி சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் நிதியுதவி வழங்கி வருகிறது. இந்த நிதியை பெற மத்திய அரசின்விரிவான கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும். அதன்படி நடப்பு நிதியாண்டில் (2023-24) ரூ.2,090 கோடி நிதி வேண்டுமென மத்திய அரசிடம்...

அரசு விழாவை அரசியல் மேடையாக்கிய பிரதமர்: திருமாவளவன் குற்றச்சாட்டு

அரசு விழாவை, பிரதமர் நரேந்திர மோடி அரசியல் மேடையாக பயன்படுத்திக் கொண்டதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர்நேற்று கூறியதாவது: பிரதமர் மோடி பல்லடத்தில்பேசியபோது, 10 ஆண்டுகளில்மக்களுக்கு அவர் செய்ததுஎன்ன என்பது குறித்து பெரிதாகக்குறிப்பிடவில்லை. மாறாக, திமுக,காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைவிமர்சிப்பது, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களை புகழ்ந்துப் பேசுவது என தனது உரையை அமைத்துக் கொண்டார். அவர்கள் தங்களையும், தங்கள் செல்வாக்கையும், தங்கள் மீதுமக்கள் கொண்டிருக்கின்ற நன்மதிப்பையும் நம்பவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவை நம்பித்தான் அரசியல் செய்ய முடியும் என்ற...

கோயில் நிலங்களில் கல்வி நிறுவனங்கள் தொடங்கினால் ஆக்கிரமிப்புகள் தடுக்கப்படும்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

கோயில் நிலங்களில் கல்வி நிறுவனங்கள் தொடங்கினால், ஆக்கிரமிப்புகள் தடுக்கப்படும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.தமிழகம் முழுவதும் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களின் நிதியில் இருந்து புதிதாக கல்லுாரிகள் தொடங்கவும், கோயில் நிதியை வேறு காரியங்களுக்குப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மயிலாப்பூரைச் சேர்ந்தஇண்டிக் கலெக்டிவ் அறக்கட்டளையின் நிர்வாகியும், ஆலய வழிபாட்டுக் குழுத் தலைவருமான டி.ஆர்.ரமேஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், கோயில் நிதியில் இருந்து புதிதாக 4 இடங்களில் தொடங்கப்படும் கல்லூரிகளின் செயல்பாடுகள், இந்த...

அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிரான வழக்கு: நேரில் ஆஜரான விசாரணை அதிகாரியிடம் நீதிபதி சரமாரி கேள்வி

அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை நீதிமன்றம், வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் விதமாகசென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறார். உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான பூமிநாதன் நேற்று நீதிபதி...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நெல்லை, குமரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை.. வானிலை எச்சரிக்கை

தமிழ்நாடு வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி. காரைக்கால் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 9) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே...

நாகர்கோவில் பூத்தில் அதிக ஓட்டு பெற்றால் மோதிரம் -நயினார்

நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக தமிழ் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வேட்பாளர் எம். ஆர். காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில்...

இரணியல்: ரயில் நிலையம் ‘பி’ பிரிவு தர நிலைக்கு உயர்வு

இந்திய ரயில்வேயை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், குமரி மாவட்டம் இரணியல் ரயில் நிலையம் பழைய சிக்னல் மற்றும் ரயில் இயக்க கட்டுப்பாட்டு முறைகளை மாற்றி, 'மின்னணு இன்டர்லாக்கிங்' மற்றும் கணினி வழி கண்காணிப்பு வசதியுடன் தரம்...