Home 2024
Yearly Archives: 2024
நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழகம் உருவாக வங்கிகள் உதவ வேண்டும்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள்
நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழகம் உருவாக வங்கிகள் உதவ வேண்டும் என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்தார்.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு)சார்பில் 2024-25-ம் ஆண்டுக்கான மாநில கடன் கருத்தரங்கு சென்னையில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, 2024-25-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த மாநில அறிக்கையை வெளியிட்டுப் பேசியதாவது: நபார்டு வங்கி வெளியிட்டுள்ள வளம் சார்ந்த மாநில அறிக்கை, வங்கிகள் மற்றும் தமிழக அரசுக்கு அடிப்படை மேம்பாட்டு வசதிகள் மற்றும்...
ஓபிஎஸ்-க்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணை தள்ளிவைப்பு: மார்ச் 25, 26-ல் நடைபெறுகிறது
சொத்து குவிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால், ஓபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணையை மார்ச் 25, 26-ம் தேதிகளுக்கு தள்ளி வைத்து உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2001-06 அதிமுக ஆட்சி காலத்தில் வருவாய் துறை அமைச்சராக பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதிமுக...
போதைப் பொருள் நடமாட்டம் குஜராத்தில்தான் அதிகம்: சட்டத் துறை அமைச்சர் ரகுபதி புகார்
தென் மாநில டிஜிபிக்கள் கூட்டத்தில் தமிழக டிஜிபி கூறிய தகவல்களின் அடிப்படையில், ஆந்திராவில் 6,000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா பயிர்கள் அழிக்கப்பட்டன.
கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர் ஒருவரே கஞ்சா வியாபாரத்துக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அந்த அமைச்சர் மீது வழக்குத் தொடர ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். தமிழகத்தில் கஞ்சா கடத்தல், போதைப் பொருள் கடத்தல் குற்றங்களில் ஈடுபட்ட 16 பேர் பாஜகவில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மத்திய அரசிடம்தான்... குஜராத்தில் 1,660 கி.மீ. நீளம் கொண்ட கடற்கரை உள்ளது. அந்தப் பகுதியில்தான் போதைப் பொருள்...
கால்டுவெல், அய்யா வைகுண்டர் குறித்த ஆளுநரின் கருத்துக்கு மதிமுக, மார்க்சிஸ்ட் கண்டனம்
கால்டுவெல், அய்யா வைகுண்டர் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அய்யா வைகுண்டரின் 192-வது பிறந்தநாள் விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அய்யா வைகுண்டர் பற்றியும், கால்டுவெல் குறித்தும் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: கால்டுவெல் தமிழகத் தில் ஏறத்தாழ 53 ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்மொழி, வரலாறு, சமூக முன்னேற்றம், சமய வளர்ச்சிக்குப் பாடுபட்டதால் தமிழரின் வரலாற்றோடு கலந்து இருக்கிறார்.
வடமொழியை புறந்தள்ளிய கால்டுவெல் குறித்து...
123 ஆண்டுகள் பழமையான கட்டிடம் புதுப்பித்து காஞ்சிபுரத்தில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம்
காஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் செங்கையில் இயங்கி வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்டது. இதனையடுத்து நீதித் துறையும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நேற்று முதன்மை மாவட்ட, அமர்வு நீதிமன்றம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிஅனிதா சுமந்த் நேற்று புதிய நீதிமன்றத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இதேபோல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சோழிங்கநல்லூர் வட்டத்துக்கு என மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. 123 ஆண்டுகள் பழமையான நீதிமன்ற கட்டிடத்தை புதுப்பித்து அதில்...
வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வு தகுதி பட்டியல்: மார்ச் 15-க்குள் சமர்ப்பிக்க உத்தரவு
வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு தகுதியான தலைமை ஆசிரியர் பட்டியலை மார்ச் 15-ம் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:
தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையின்கீழ் வரும் வட்டாரக் கல்வி அலுவலர் பதவியில் 50 சதவீத பணியிடங்கள், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களைக் கொண்டு பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கான தகுதிப்...
8,130 பேரூராட்சி பணியிடங்களை ரத்து செய்து தமிழக அரசு ஆணை: திரும்ப பெற ராமதாஸ் வலியுறுத்தல்
பேரூராட்சிகளில் 8,130 பணியிடங்களை ரத்து செய்யும் ஆணையை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மொத்தம் 490 பேரூராட்சிகள் உள்ளன. அவற்றில் எலக்ட்ரிஷியன், பிட்டர், அலுவலக காவலர், ஓட்டுநர், பிளம்பர், குடிநீர் குழாய் பராமரிப்பாளர், தெருவிளக்குப் பராமரிப்பு உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக 8,130 பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 7,061 பணிகள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், 1,069 பணியிடங்கள் காலியாக உள்ளன.
அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும்...
பெண்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் 15 நாட்களுக்கு பெண்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
உலக மகளிர் தினம் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, சென்னை மாநகரில் அமைந்துள்ள அதன் 18-க்கும் மேற்பட்ட கிளைகள் அனைத்திலும், அனைத்து வயது பிரிவுகளையும் சேர்ந்த பெண்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாமை மார்ச் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடத்துகிறது.
கருத்தரிப்பால் தூண்டப்படும் உயர் ரத்த அழுத்தம், மெனோபாஸ் மற்றும்...
பிரதமர் மோடியின் தமிழக வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து
பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ராயபுரத்தில் நேற்றுநடைபெற்றது. கட்சியின் அமைப்புச் செயலாளர் ராயபுரம் மனோ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்று, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
யாரையும் நம்பி நாங்கள் இல்லை: பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருவதால் எந்ததாக்கமும் ஏற்படாது. பாஜக வழக்கமாக வாங்கும்...
பகவதி அம்மன் திருக்கோவில் மாசி பெருந்திருவிழா
மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் மாசி பெருந்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் , வருவாய் கோட்டாட்சியர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர













