Google search engine
Home 2024

Yearly Archives: 2024

போலி ஊடகவியலாளர்களின் அரசியல் விவாதங்களில் நேரத்தை வீணடிக்காதீர்கள்: பிரசாந்த் கிஷோர் கருத்து

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்றுமுன்தினம் வெளியாகின. பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் கூட்டணி 130 – 160 இடங்கள் வரையில் வெல்லும் என்றும் பல்வேறு ஊடகங்கள் கணிப்பு வெளியிட்டுள்ளன. பிரபல தேர்தல் வியூகரான பிரசாந்த் கிஷோர், இந்த முறைபாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் 2019 தேர்தல் பெற்ற இடங்களை பெறும் அல்லது அதைவிட கூடுதல்இடங்களில் பாஜக வெல்லும் என்று தெரிவித்து வந்தார். தற்போது வெளியாகி இருக்கும் தேர்தல் கருத்துக் கணிப்புகளோடு பிரசாந்த் கிஷோரின் கணிப்பு ஒத்துப்...

வட மாநிலங்களில் வெப்ப அலை: உ.பி.யில் 33 தேர்தல் பணியாளர்கள் உயிரிழப்பு – ரூ.15 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

 உத்தர பிரதேசத்தில் 13 தொகுதிகளுக்கு ஏழாம் கட்ட மற்றும் இறுதி கட்ட தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 33 பேர் அதிக வெப்பத்தை தாங்க முடியாமல் உயிரிழந்தனர். இதில், ஊர்க் காவல் படையினர், துப்புரவு பணியாளர்களும் அடங்குவர் என்று அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா தெரிவித்துள்ளார். வாக்காளர் உயிரிழப்பு: பலியா மக்களவை தொகுதியின் சிக்கந்தர்பூர் பகுதியில் உள்ளஒரு வாக்குச்சாவடியில் ஓட்டளிப்பதற்காக வரிசையில் நின்ற ராம்பதன் சவுகான் என்பவர் வெயில்தாங்க முடியாமல் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு...

மோடி பிரதமரானால் மொட்டை அடிப்பேன்: ஆம் ஆத்மி கட்சியின் சோம்நாத் பாரதி அறிவிப்பு

‘‘தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தவறு என நிருபணம் ஆகும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால், நான் மொட்டை அடிப்பேன்’’ என ஆம் ஆத்மி கட்சியின் புது டெல்லி வேட்பாளர் சோம்நாத் பாரதி தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் எல்லாம் தவறு என நிருபணமாகும். 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்ட பின்பு இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும். மோடி 3-வது முறையாக பிரதமராகமாட்டார். அப்படி அவர் பிரதமரானால், நான் மொட்டை அடிப்பேன். டெல்லியில்...

“பொறுத்திருந்து பாருங்கள்” – கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்து சோனியா காந்தி கருத்து

“மக்களவை தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்புகளுக்கு முற்றிலும் நேர்மாறாக இருக்கும். பொறுத்திருந்து பாருங்கள்” என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை ஒட்டி, டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி திருச்சி சிவா, கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோரும் கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் மக்களவை தேர்தல்...

மே.வங்கத்தில் 2 பூத்களில் மறு வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் செய்தியாளர்கள் சந்திப்புக்கு அழைப்பு

மக்களவைத் தேர்தலில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மேற்குவங்கத்தின் பராசத், மதுராபூர் தொகுதிகளுக்கு உட்பட்ட தலா ஒரு வாக்குச்சாவடியில் இன்று (ஜூன் 3) காலை தொடங்கி மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டு வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. கடந்தஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகியதேதிகளில் 7 கட்டமாக 543 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (ஜூன் 4) எண்ணப்படுகிறது. இந்நிலையில்...

தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால் இயந்திரத்தை வேட்பாளர்கள் சோதனையிடலாம்: வழிகாட்டுதல் வெளியிட்டது ஆணையம்

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, வாக்குப்பதிவு தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ள, தேர்தலில் 2, 3-வது இடம்பிடித்த வேட்பாளர்கள் விண்ணப்பிப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக கடந்த ஆண்டு தொடரப்பட்ட ஒரு வழக்கில், உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல்26-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதன்படி, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்தலில் 2, 3-வது இடம் பிடித்த வேட்பாளர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரத்தின் நினைவகம் அல்லது மைக்ரோ கன்ட்ரோலர் மற்றும் விவிபாட் இயந்திரத்தில் 5...

வங்கி வாடிக்கையாளர்களின் குறை தீர்க்க உதவும் ‘பேங்க் கிளினிக்’ அறிமுகம்

வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சேவை குறைபாடுகளுக்கு தீர்வு காணும் வகையிலும், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ‘பேங்க் கிளினிக்’ என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 12 பொதுத் துறை மற்றும் 20 தனியார் வங்கிகளுக்கு நாடு முழுவதும் ஒரு லட்சம் கிளைகள் உள்ளன. நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் இன்றைக்கு வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். ரூ.2.07 லட்சம் கோடி வைப்புத் தொகை வங்கிகளில் உள்ளது. வங்கி சேவைகள் இந்த பரந்து விரிந்துள்ள போதிலும், அவற்றின்...

“என் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் தேச சேவைக்காகவே அர்ப்பணிப்பேன்”: விவேகானந்தர் மண்டப பதிவேட்டில் மோடி உருக்கம்

எனது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் தேச சேவைக்காகவே அர்ப்பணிப்பேன் என்று கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டப பதிவேட்டில் பிரதமர் மோடி உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்குள்ள பார்வையாளர் பதிவேட்டில் இந்தியில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் கடைகோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில், இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதமான உணர்வை அனுபவித்து வருகிறேன். பார்வதி தேவியும், சுவாமிவிவேகானந்தரும் இந்தப் பாறையில் தியானம் செய்திருந்தனர். அதைப் போற்றும் வகையில் ஏக்நாத் ரானடே அவர்கள் இந்த கல்பாறை நினைவகத்தை...

கருணாநிதியின் 101-வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் மரியாதை

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை ஒட்டி, இன்று (ஜூன் 3) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதேபோல் தலைவர்கள் பலரும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில்...

ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயிலை தடையின்றி வழங்க அன்புமணி வலியுறுத்தல்

ஏழை மக்களின் தேவையையும், பொருளாதார நிலையையும் கருத்தில் கொண்டு அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை தடையின்றி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த இரு மாதங்களாக துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படவில்லை. பொதுமக்களுக்கு வழங்குவதற்கான துவரம்பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்யப்பட்டு விட்டதாகவும், அவை உடனடியாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றும் தமிழக அரசின் சார்பில் விளக்க...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில் நடிகர் சரத்குமார் பிரசாரம்

பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் சரத்குமார், கன்னியாகுமரி மாவட்டத்தில் இம்மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். 17 ஆம் தேதி விளவங்கோடு, பத்மநாபபுரம், கிள்ளியூர் சட்டமன்ற...

களியக்காவிளை: வீட்டை உடைத்து 5 பவுன் நகைகள் திருட்டு

களியக்காவிளை, செம்மண்விளை பகுதியைச் சேர்ந்த ஆனி ஜீவா (39) என்பவர் குடும்பத்துடன் வேளாங்கண்ணி ஆன்மீக சுற்றுலா சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க...

நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (ஏப்ரல் 10) வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், பிற்பகலில் திடீரென இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. நீதிமன்ற சாலை, ஒழுகினசேரி, வடசேரி,...