Home 2024
Yearly Archives: 2024
D-Day கொண்டாட்டத்தில் பங்கேற்க சென்ற 2-ம் உலகப் போரின் 102 வயது வீரர் மரணம்
இரண்டாம் உலகப் போரின் D-Day 80-வது நிறைவு ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க சென்ற 102 வயதான கடற்படை வீரரான ராபர்ட், நியூயார்கில் இருந்து பிரான்ஸ் நாட்டின் நார்மாண்டிக்கு பயணம் மேற்கொண்ட போது உயிரிழந்தார்.
இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி படைகளின் வசம் இருந்த பிரான்ஸ் நாட்டின் பகுதியை மீட்கும் வகையில் நேச நாட்டு படைகள் நார்மாண்டியில் 1944, ஜூன் 6-ம் தேதி அன்று படைகளை இறக்கி இருந்தன. இது போரில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. போர் முடிந்த பிறகு ஆண்டுதோறும் D-Day கொண்டாட்டம்...
மக்களவை தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்ற 280 எம்.பிக்கள்
மக்களவை தேர்தலின் மூலம் முதல்முறையாக 280 எம்பிக்கள் மக்களவையை அலங்கரிக்க உள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 267 எம்பிக்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது அதுவே அதிக எண்ணிக்கையிலான எம்பிக்களாக கருதப்பட்டது.
தற்போது மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 263 வேட்பாளர்களும் ஏற்கெனவே மக்களவையில் எம்பி பதவி வகித்தவர்களே. கூடுதலாக, 16 பேர் மாநிலங்களவை எம்பிக்களாக நியமிக்கப்படவிருக்கிறார்கள். மற்றுமொரு எம்பி ஏற்கெனவே மக்களவையில் ஏழு முறை பதவி வகித்தவர். மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்களில் 8 பேர் தங்களது முந்தைய...
நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி, அம்பேத்கர், சிவாஜி சிலைகளை இடம் மாற்ற எதிர்ப்பு
மகாத்மா காந்தி, பி.ஆர். அம்பேத்கர் மற்றும் சத்ரபதி சிவாஜி உள்ளிட்டவர்களின் சிலைகள் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதான தளத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், அந்த சிலைகள் தற்போது இருந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு பழைய கட்டிடத்தின் புல்வெளி பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இதேபோன்று பழங்குடியின தலைவர் பிர்சா முண்டா மற்றும் மகாராணா பிரதாப் ஆகியோரின் சிலைகளும் பழைய நாடாளுமன்ற கட்டடம் மற்றும் நாடாளுமன்ற நூலகத்துக்கு இடையே இடமாற்றம் செய்யப்படுகின்றன.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “சத்ரபதி சிவாஜி மகராஜ், மகாத்மா காந்தி, பாபாசாகேப்...
ஆந்திரா, பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்றுவாரா? – ஜெய்ராம் ரமேஷ் கேள்வி
ஆந்திரா, பிஹாருக்கு சிறப்புஅந்தஸ்து அளிக்கும் வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றுவாரா என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து ‘எக்ஸ்' தளத்தில்காங்கிரஸ் பொதுச் செயலாளர்ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: மோடியின் மூன்றாவது அரசு மத்தியில் அமைய உள்ளது. ஆனால் இது இம்முறை மோடியின் மூன்றில் ஒரு பங்கு அரசாகத்தான் இருக்கும். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்று கடந்த 2014 ஏப்ரல் 30-ம் தேதி திருப்பதியில் பிரதமர் மோடி கூறினார்.
10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. தற்போது ஆந்திராவுக்கு...
ஜூன் 12-ல் ஆந்திர முதல்வராக பதவியேற்கிறார் சந்திரபாபு: விழாவில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு
ஆந்திர மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 135 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி வென்றது. அதன் தோழமை கட்சிகளுடன் சேர்த்து மொத்தம் 164 தொகுதிகளில் தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி வென்றது.
ஆளும் கட்சியாக இருந்த ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து ஆந்திர மாநிலத்தில் 4-வது முறையாக சந்திரபாபு நாயுடு முதல்வராக வரும் 12-ம் தேதி பதவி ஏற்கவுள்ளார்....
மேற்கு வங்கத்தில் வன்முறை பாதித்த இடங்களை ஆளுநர் பார்வையிட வேண்டும்: சுவேந்து அதிகாரி கோரிக்கை
மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸுக்கு பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:
மேற்கு வங்கத்தில் ஒவ்வொரு தேர்தலுக்கு பிறகும் பாஜக தொண்டர்களை ஆளும் திரிணமூல் கட்சியின் குண்டர்கள் தாக்குவது வழக்கமாக உள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகுஇதுவரை 20 வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் சுமார்10 ஆயிரம் பேர் வீடற்றவர்களாக உள்ளனர். அவர்கள் பாஜக சார்பில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் மத்திய ஆயுதப் படைகள் இருக்கும்போதிலும், வன்முறையை கட்டுப்படுத்தஇப்படைகள் பயன்படுத்தப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஆளுநர்...
விஜய பிரபாகரனை தோற்கடிக்க சூழ்ச்சி நடந்ததாக பிரேமலதா குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையத்தில் தேமுதிக மனு
விருதுநகர் தொகுதியில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதால் அங்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்என்று தேர்தல் ஆணையத்தில் தேமுதிக மனு கொடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா நேற்று கூறியதாவது:
விருதுநகரில் மொத்தம் 10.61 லட்சம்ஓட்டுகள் பதிவாகியுள்ளன. அதில் விஜயபிரபாகரன் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக கூறுகின்றனர். தபால் வாக்குகள் எண்ணப்பட்டதற்கு பிறகுதான் விஜய பிரபாகரன் 0.4 சதவீத வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் பல லட்சம்வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தால்...
ஜூன் இறுதிக்குள் கட்டணமில்லா பயண அட்டை: மாநகர போக்குவரத்து கழகம் தகவல்
ஜூன் மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் 10-ம் தேதி பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு 2024-25 கல்வியாண்டில் மாணவர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை வழங்கப்பட வேண்டும்.
இதில் உள்ள கால அளவைக் கருத்தில் கொண்டு மாநகர போக்குவரத்துக் கழகத்தால் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பயண அட்டையைப் பயன்படுத்தியோ,...
நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்ய வேண்டும்: தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்
நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற புதியஎம்.பி.க்கள். மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி மட்டும் 99 இடங்களில் வென்றுள்ளது. அதனால் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக செயல்படவுள்ளது. இந்நிலையில், யார் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்...
இந்த ஆண்டு நீட் மறு தேர்வு நடத்துக; அடுத்த ஆண்டு முதல் நிரந்தரமாக ரத்து செய்க: ராமதாஸ்
நடப்பாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும். அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “2024ஆம் ஆண்டு இளநிலை மருத்துப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் எந்த வகையிலும் சாத்தியமற்ற வகையில் சில மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண்கள் வாரி இறைக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு எதற்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கங்களை நிறைவேற்றவில்லை என்று...













