Google search engine
Home 2024

Yearly Archives: 2024

பாஜக எம்.பி. கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த பெண் காவலர் கைது

பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் குல்விந்தர் கவுர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன் கைது நடவடிக்கையும் மேற்கொள் ளப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாஜக சார்பில் இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் போட்டியிட்டு அண்மையில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் கங்கனா ரனாவத். இவர் டெல்லி செல்வதற்காக சண்டிகர் விமான நிலையத்துக்கு வந்தபோது அங்கிருந்த பெண் காவலருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில்,ஆத்திரமடைந்த பெண் காவலர் ரனாவத்தை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. விவசாயிகளை பற்றி தவறான...

மக்களுக்கு போக்குவரத்தில் இடையூறு இருக்க கூடாது: சந்திரபாபு நாயுடு உத்தரவு

‘‘என்னால் போக்குவரத்தில் எவ்வித இடையூறும் இருக்க கூடாது. குறிப்பாக மக்கள் பாதிக்கப்பட கூடாது’’ என தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். டெல்லிக்கு செல்லும் முன் தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு தனது பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: என்னால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்பட கூடாது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட கூடாது. நான் செல்லும் போதும், வரும்போதும், சாலைகளின் இருபுறமும் மக்களை நிற்கவைத்து விடுவது, கடைகளை மூட சொல்வது போன்ற எந்த ஒரு இடையூறும் இருக்க...

2024 மக்களவை தேர்தலில் 73 பெண்களுக்கு வெற்றி: 2019 தேர்தலை விட எண்ணிக்கை குறைந்தது

மக்களவைத் தேர்தல்களில் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை 2009-ல் 7% ஆகவும், 2014-ல் 8%ஆகவும் இருந்தது. இது 2024-ல்9.5% ஆக உயர்ந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட 8,337 வேட்பாளர்களில் 797 பெண்கள் இடம் பெற்றிருந்தனர். தமிழ்நாட்டின் நாம் தமிழர் கட்சி மட்டுமே பெண்களுக்கு சம வாய்ப்பு அளித்தது. இதன் 40 வேட்பாளர்களில் 20 பேர் பெண்கள் ஆவார். மற்ற அனைத்து கட்சிகளிலும் இதற்கு அடுத்த நிலையில் 33 சதவீதம் மற்றும் அதற்கு குறைவாகவே பெண் வேட்பாளர்கள் இருந்தனர். பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மகளிர் மசோதா நிறைவேறிய...

ஒரு முஸ்லிம்கூட இல்லாத புதிய மத்திய அமைச்சரவை: உமர் அப்துல்லா குற்றச்சாட்டு

பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி (என்டிஏ)அமைக்கவிருக்கும் புதிய அமைச்சரவையில் ஒரு முஸ்லிம்கூட இடம்பெற வாய்ப்பில்லை என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 240 இடங்களை பாஜக கைப்பற்றியது. கூட்டணி கட்சிகளுடன் தற்போது என்டிஏ.வின் பலம் 292 ஆக உள்ளது. இதில் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளரை கேரளாவின் மலப்புரம் தொகுதியில் மட்டும்பாஜக களமிறக்கியது. பாஜகசார்பாக மலப்புரத்தில் போட்டியிட்ட அப்துல் சலாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் முகமது பஷீரிடம் 3 லட்சம்...

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவர்கள் பெயர்ப் பட்டியலில் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் செய்ய பள்ளிகளுக்கு தேர்வுத் துறை இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் ச.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்; 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும், பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் வேண்டி சில பள்ளிகளிடம் இருந்து கடிதங்கள் இயக்குநரகத்துக்கு வருகின்றன. இதையடுத்து 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான...

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நாளை நடைபெறுகிறது: 6,244 காலி இடங்களுக்கு 20 லட்சம் பேர் போட்டி

தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4தேர்வு நாளை நடைபெறுகிறது. மொத்தம் 6,244 காலி இடங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வை சுமார்20 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வனக் காவலர், பில்கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை நிர்வாகி, கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் மற்றும் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் என பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்...

சட்டப்பேரவை ஜூன் 24-ல் மீண்டும் கூடுகிறது: பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு

தமிழகத்தில் துறைகள் வாரியாக மானிய கோரிக்கை விவாதத்துக்காக சட்டப்பேரவை வரும் ஜூன் 24-ம் தேதிமீண்டும் கூடுவதாக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் ஆண்டுமுதல் கூட்டம் கடந்த பிப். 12-ம் தேதிஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து பிப்.15-ம்தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. நிறைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விவாதத்துக்கு பதில் அளித்தார். இதையடுத்து, இந்த 2024-25 நிதி ஆண்டுக்கான பொதுபட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு பிப்.19-ம் தேதியும், வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்...

நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

கருணை மதிப்பெண் வழங்கியதில் குளறுபடிகள் நடந்துள்ளதால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்: சமீபத்திய நீட் தேர்வில், வினாத்தாள் கசிவு, குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணைமதிப்பெண்கள் என்ற போர்வையில்நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளிவழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய மத்திய அரசின்அதிகாரக் குவிப்பின் குறைபாடுகளை வெட்ட வெளிச்சமாக்குகின்றன. இவை, தொழிற்படிப்புகளுக் கான மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிப்பதில்,...

பால் விநியோகம் தாமதம் ஏன்? – ஆவின் நிறுவனம் விளக்கம்

மாதவரம் பண்ணையில் இருந்து மொத்த விற்பனையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாதவரம் பால் பண்ணையில் பால் பாக்கெட் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நேற்று காலை பால் பண்ணையில் இருந்து மொத்த விற்பனையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய பால் விநியோகம் தாமதமானதாகவும் பால் முகவர்கள் தெரிவித்தனர். இதையொட்டி பொதுமக்களுக்கும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆவின் நிறுவனம் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில்லறை விற்பனையாளர்கள், பால் டெப்போக்கள்...

சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தாத பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை ஊக்குவிக்க வலியுறுத்தல்

அமெரிக்காவில் உள்ளதைப் போல இந்தியாவிலும் ஹைட்ரஜனுக்கு உற்பத்தி வரிக்கடன் போன்ற சலுகைகளை வழங்கி பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதை கணிசமாக அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று அவன்டஸ் எனர்ஜி நிறுவனத்தைச் சேர்ந்த கவுதம் ரமேஷ் கூறினார். எஃகு, அலுமினியம் மற்றும் சிமென்ட் போன்ற தொழில்களுக்கு அதிக வெப்பநிலை செயல்முறைகள் தேவைப்படுகின்றன. அவை மின்சாரத்தால் மட்டுமே திறமையாக இயங்காது. எனவே பசுமை ஹைட்ரஜன் ஒரு சுத்தமான, உயர் ஆற்றல் எரிபொருள் மாற்றாக விளங்குகிறது. இது கார்பன் உமிழ்வையும் அதிகளவில் குறைப்பதால் உலகளாவிய காலநிலை இலக்குகளுக்கு பங்களிக்க...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில் நடிகர் சரத்குமார் பிரசாரம்

பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் சரத்குமார், கன்னியாகுமரி மாவட்டத்தில் இம்மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். 17 ஆம் தேதி விளவங்கோடு, பத்மநாபபுரம், கிள்ளியூர் சட்டமன்ற...

களியக்காவிளை: வீட்டை உடைத்து 5 பவுன் நகைகள் திருட்டு

களியக்காவிளை, செம்மண்விளை பகுதியைச் சேர்ந்த ஆனி ஜீவா (39) என்பவர் குடும்பத்துடன் வேளாங்கண்ணி ஆன்மீக சுற்றுலா சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க...

நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (ஏப்ரல் 10) வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், பிற்பகலில் திடீரென இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. நீதிமன்ற சாலை, ஒழுகினசேரி, வடசேரி,...