Home 2024
Yearly Archives: 2024
இனிமேல்தான் ஆட்டம் இருக்கிறது: அன்பில் மகேஸ் கருத்து @ நீட் தேர்வு விவகாரம்
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் ஏற்கெனவே 20 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 17 ஆயிரம் பள்ளிகளிலும் இம்மாத இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்பறை வசதி ஏற்படுத்தப்படும். கல்வித் துறையில் தமிழகம் போட்டி போடுவது பிற மாநிலங்களோடு அல்ல, பிற நாடுகளுடன்.
நீட் தேர்வு ஏழை மாணவர்களை பழிவாங்க கூடிய ஒன்றாகஇருக்கிறது என்று ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகிறோம். நீட்தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதால், இந்த தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிரா...
கடற்கரைகள், தி.நகரில் வாகன நிறுத்த கட்டண வசூலில் முன்னாள் ராணுவத்தினர் – சென்னை மாநகராட்சி திட்டம்
மெரினா கடற்கரையில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கும் பணியில் முன்னாள் ராணுவத்தினரை நியமிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி, வருவாயை அதிகரிக்கும் பொருட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வாகன நிறுத்தங்களை மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை, தியாகராயநகர் உள்ளிட்ட 170-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைத்துள்ளது.
பாஸ்கர் சக்தியின் ‘ரயில்’ திரைப்படம் ஜூன் 21-ல் ரிலீஸ்!
பாஸ்கர் சக்தி இயக்கியுள்ள ‘ரயில்’ திரைப்படம் வரும் ஜூன் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, படத்தின் தலைப்பு மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
‘வெண்ணிலா கபடி குழு’, ‘எம்மகன்’, ‘நான் மகான் அல்ல’ உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதியிருக்கும் பாஸ்கர் சக்தி, தேசிய விருதுபெற்ற ‘அழகர்சாமியின் குதிரை’ படத்துக்கு கதை, வசனம் எழுதியிருந்தார். அவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘வடக்கன்’. இதில் குங்குமராஜ், வைரமாலா ஜோடியாக நடித்துள்ளனர். ரமேஷ் வைத்யா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா என பலர் நடித்துள்ள இந்தப் படத்தை...
ஹரா Review – ‘வெள்ளி விழா’ நாயகன் மோகனின் கம்பேக் எப்படி?
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வெள்ளி விழா நாயகன் என்று புகழப்பட்ட மோகன், 80களில் கொடிகட்டி பறந்த நடிகர். 90களில் அவர் நடித்த படங்கள் கைகொடுக்காமல் போகவே சிலகாலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். 2008-ல் வெளியான ‘சுட்டப் பழம்’ படம்தான் அவர் திரையில் தோன்றிய கடைசி படம். தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவரை லைம்லைட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது ‘ஹரா’.
கோயம்புத்தூரில் மனைவி மற்றும் மகளுடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் ராம் (மோகன்). திடீரென ஒருநாள் மகள் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளவே,...
சித்தார்த் நடிக்கும் காதல் கதை ‘மிஸ் யூ’
‘சித்தா' படத்தின் வெற்றிக்கு பிறகு சித்தார்த் ஹீரோவாக நடிக்கும் படம், ‘மிஸ் யூ'. இதை 7 மைல்ஸ் பர் செகண்ட் நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கிறார். ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். ஜேபி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், மாறன் என பலர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்.
கே.ஜி. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ‘மாப்ள சிங்கம்’, 'களத்தில் சந்திப்போம்’ படங்களை இயக்கிய என்.ராஜசேகர் இயக்குகிறார். காதல், ஆக்ஷன், காமெடி என முழுநீள பொழுதுபோக்கு படமாக உருவாகும் இதில், அனைத்து நடிகர்களுக்கும்...
எனக்கு கிடைத்த கவுரவம்: ’இந்தியன் 2’ இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் வெளியிட்ட சுயாதீன இசை ஆல்பம் ‘இனிமேல்' வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்து ஆத்வி சேஷ் நடிக்கும் ‘டெகாயிட்' என்ற தெலுங்கு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ‘இந்தியன் 2' பாடல் வெளியீட்டு விழாவில், அவர் தந்தை கமல்ஹாசனை கொண்டாடும் விதமாக அவரது ஹிட் பாடல்களைத் தொகுத்து இசை நடன நிகழ்வை அரங்கேற்றியிருந்தார்.
இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறும்போது, ‘என் தந்தையின் திரை வாழ்வை கவுரவப்படுத்துவது எனக்கு கிடைத்த பெருமை. அவரது படங்களில் இடம்பெற்ற பாடல்களில் சிலவற்றை இணைத்து, மெலடியாக தயாரித்து வழங்க...
T20 WC | நமீபியாவை வீழ்த்தியது ஸ்காட்லாந்து
ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ‘பி’ பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நமீபியாவை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஸ்காட்லாந்து அணி.
மேற்கு இந்தியத் தீவுகளின் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற இந்தஆட்டத்தில் முதலில் பேட் செய்த நமீபியா 9 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜெர்ஹார்டு எராஸ்மஸ் 31 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் விளாசினார். ஜேன் கிரீன் 28, நிக்கோலஸ் டாவின் 20, டேவிட் வைஸ் 14 ரன்கள் சேர்த்தனர். ஸ்காட்லாந்து...
12 ரன்களில் அயர்லாந்தை வென்றது கனடா: T20 WC
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் - ஏ’ ஆட்டத்தில் அயர்லாந்து அணியை 12 ரன்களில் வென்றது கனடா. இது ஐசிசி டி20 உலகக் கோப்பை அரங்கில் கனடாவுக்கு கிடைத்த முதல் வெற்றியாக அமைந்துள்ளது.
நியூயார்க் நகரின் மன்ஹாட்டனுக்கு கிழக்கே நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த கனடா அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது.
53 ரன்களுக்கு 4...
நியூஸிலாந்தை 84 ரன்களில் வென்ற ஆப்கன்: ரஷித், ஃபரூக்கி அபாரம் | T20 WC
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் - சி’ ஆட்டத்தில் நியூஸிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் 84 ரன்களில் வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான். அந்த அணியின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது.
கயனாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸை இழந்த ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது அந்த அணி.
ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான இப்ராஹிம் ஸத்ரான் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் இணைந்து முதல்...
ஆட்சி அமைக்க உரிமை கோரும் முன் அத்வானியிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி
மத்தியில் அடுத்த அரசை அமைப்பதற்கு உரிமை கோருவதற்கு முன்பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துகளை பிரதமர் நரேந்திர மோடி பெற்றார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களை மட்டுமே பெற்றுள்ள போதிலும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து 293 இடங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் என்டிஏ நாடாளுமன்ற கட்சி தலைவராக பிரதமர் மோடி நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து, மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோருவதற்கு முன் பிரதமர் மோடி, டெல்லியில் உள்ள கட்சியின் மூத்த...














