Google search engine
Home 2024

Yearly Archives: 2024

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC

நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘குரூப் - ஏ’ பிரிவு ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் பாகிஸ்தான் அணியை ஆறு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இந்தப் போட்டி நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுன்டி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். முதல் ஓவரை ஷாஹீன் ஷா அப்ரிடி வீசினார். அதில் 8 ரன்கள்...

‘கூலி’ முதல் ஷெட்யூலில் ரஜினி, சத்யராஜ், ஸ்ருதி

ரஜினி நடித்துள்ள 'வேட்டையன்', அக். 10-ம் தேதி ரிலீஸாகிறது. இதில் அமிதாப்பச்சன், மஞ்சுவாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா, ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இதை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது.அனிருத் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்த மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதில் சத்யராஜ், ரஜினியின் நண்பராக நடிக்கிறார். ஸ்ருதிஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் முதல் ஷெட்யூலில்...

SK 23 | சிவகார்த்திகேயனுக்கு வில்லன் ஆனார் வித்யுத்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வரும் படத்தை ஸ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சிவகார்த்திகேயனின் 23-வது படமான இதில் கன்னட நடிகை ருக்மணி வசந்த் நாயகியாக நடித்து வருகிறார். மலையாள நடிகர் பிஜு மேனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில் இதில் வில்லனாக இந்தி நடிகர் வித்யுத் ஜம்வால் நடிப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் படக்குழு அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘துப்பாக்கி’யில்...

மோடி 3.0 | பதவி ஏற்பு விழாவில் ஆசி வழங்க வந்த மூன்றாம் பாலினத்தவர்

குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்த பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க 50 மூன்றாம் பாலினத்தவர் வந்தனர். இதுகுறித்து பாஜக தலைவரும் முன்னாள் சமூக நீதித் துறை அமைச்சருமான வீரேந்திர குமார் கூறுகையில், “பதவி ஏற்பு விழா அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்பினார். குறிப்பாக, மூன்றாம் பாலினத்தவர்களையும் விழாவுக்கு அழைக்க வேண்டும் என்று கூறினார். இதற்காக 50 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அழைப்பு வழங்கினோம். பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அழைப்பு விடுப்பது இதுவே...

உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் மோடிக்கு ஆதரவளிக்க விருப்பம்

மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 7 இடங்களிலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 9 இடங்களிலும் வெற்றிபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஷிண்டேகட்சி மத்திய அமைச்சரவையில்இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், ஷிண்டே கட்சியைச் சேர்ந்த எம்.பி. நரேஷ் மாஸ்கே நேற்று முன்தினம் கூறும்போது, “உத்தவ் அணியைச் சேர்ந்த2 எம்.பி.க்கள் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை தொடர்புகொண்டு பேசினர். அப்போது, இண்டியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என கருதியதாகவும் அது நடக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். எனவே, தங்கள் தொகுதியின் மேம்பாட்டுக்காக பிரதமர் மோடிக்கு ஆதரவு...

குடிநீர் பிரச்சினை: வார்த்தை போரில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர் அதிஷி, ஹரியாணா முதல்வர்

கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தச் சூழலில் டெல்லி அமைச்சர் அதிஷி மற்றும் ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனியும் கடுமையான வார்த்தை போரில் ஈடுபட்டனர். ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனிக்கு நேற்றைய (ஜூன் 9) தினம் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் அதிஷி. அதில் யமுனை ஆற்றில் இருந்து முனாக் கால்வாய் வழியாக 1,050 கனஅடி நீரை திறந்து விட வேண்டும் என கோரியிருந்தார். முன்னதாக, தங்களுக்கான நீரை ஹரியாணா மாநில அரசு வழங்காதது...

மோடி 3.0-ன் முதல் அமைச்சரவை கூட்டம்: யாருக்கு எந்த இலாகா ஒதுக்குவது என ஆலோசனை

மோடி 3.0 அமைச்சரவையின் முதல் கேபினெட் கூட்டம் திங்கள்கிழமை (ஜூன் 10) மாலை நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்தக் கூட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) திட்டத்தின் கீழ் 2 கோடி கூடுதல் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாகவும், இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு பிப்ரவரியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இடைக்கால பட்ஜெட்டில் அனைத்து குடிமக்களுக்கும் மலிவு விலையில்...

பணியில் சேராத 193 மருத்துவர்கள் நியமனம் ரத்து

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் சேராத 193 மருத்துவர்களின் நியமன ஆணையை பொதுசுகாதாரத்துறை ரத்து செய்தது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக இருந்த 1,021 மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) சார்பில் கடந்த ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது. எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்த 25 ஆயிரம் மருத்துவர்கள் தேர்வு எழுதினர். அதில் தேர்ச்சி பெற்றவர்களில் 1,021 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், அவர்களில் 193 பேர் பணி ஆணை பெற்றும் சம்பந்தப்பட்ட இடங்களில் சேரவில்லை என கூறப்படுகிறது....

296 ரயில்களின் எண்கள் மாற்றம்: ஜூலை 1-ம் தேதி முதல் அமல்

ஜூலை 1-ம் தேதி முதல் 296 ரயில்களின் எண்கள் மாற்றப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கரோனா பரவல் ஏற்பட்டபோது, நாடு முழுவதும் பல்வேறு ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டது. கரோனா பாதிப்பு குறைந்த பிறகு, மீண்டும் வழக்கம்போல ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும், மாவட்டங்களில் இருந்து முக்கிய நகரங்களை இணைக்கும் குறுகிய தூர சாதாரண கட்டண ரயில்களும் சிறப்புரயில்களாக இயக்கப்படுகின்றன. இதனால், இந்த வகை ரயில்களுக்கு தற்காலிமாக, பூஜ்ஜியத்தில் தொடங்கும் எண்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், இந்த சிறப்பு ரயில்கள் வரும் ஜூலை 1 முதல் வழக்கமான பயணிகள்...

தலைமை வழங்கும் பொறுப்பை ஏற்று பணி செய்வேன்: அண்ணாமலை தகவல்

தலைமை வழங்கும் பொறுப்பை ஏற்று பணி செய்வேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 3-வது முறையாக மோடி பிரதமராக நேற்று பதவியேற்றார். இந்நிலையில், அண்ணாமலை மத்திய அமைச்சரானால், மாநில தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படும் என கூறப்பட்டது. ஆனால், டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற பிரதமர் மோடியின் தேநீர் விருந்தில் தமிழ்நாட்டில் இருந்து எல்.முருகன் மட்டுமே பங்கேற்றார். அதேபோல், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கரும் பங்கேற்றனர். இந்நிலையில், மத்திய அமைச்சராக நியமிக்கப்படுவதாக வெளியான தகவல்களுக்கு அண்ணாமலை மறுப்பு தெரிவித்து டெல்லியில் தனியார் செய்தி ஊடகத்துக்கு...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில் நடிகர் சரத்குமார் பிரசாரம்

பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் சரத்குமார், கன்னியாகுமரி மாவட்டத்தில் இம்மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். 17 ஆம் தேதி விளவங்கோடு, பத்மநாபபுரம், கிள்ளியூர் சட்டமன்ற...

களியக்காவிளை: வீட்டை உடைத்து 5 பவுன் நகைகள் திருட்டு

களியக்காவிளை, செம்மண்விளை பகுதியைச் சேர்ந்த ஆனி ஜீவா (39) என்பவர் குடும்பத்துடன் வேளாங்கண்ணி ஆன்மீக சுற்றுலா சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க...

நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (ஏப்ரல் 10) வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், பிற்பகலில் திடீரென இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. நீதிமன்ற சாலை, ஒழுகினசேரி, வடசேரி,...