Home 2024
Yearly Archives: 2024
மலாவி துணை அதிபர் பயணித்த ராணுவ விமானம் மாயம்: தேடுதல் பணி தீவிரம்
கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா பயணித்த ராணுவ விமானம் மாயமாகியுள்ளது. அவருடன் மேலும் 9 பேர் விமானத்தில் பயணித்தனர். தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அந்த நாட்டின் அரசு தெரிவித்துள்ளது.
இந்த விமானம் திங்கள்கிழமை (ஜூன் 10) அன்று 51 வயதான துணை அதிபர் சவ்லோஸ் சிலிமாவுடன் தலைநகர் லிலொங்வேயில் இருந்து புறப்பட்டது. அந்த விமானம் சுமார் 370 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மசுஸு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. விமானம் லிலொங்வேயில் இருந்து 45...
அசோக் எல்லுசாமி இல்லையென்றால் டெஸ்லா நிறுவனம் இல்லை: தமிழக பொறியாளருக்கு எலன் மஸ்க் புகழாரம்
உலக பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ள அமெரிக்க தொழிலதிபர் எலன் மஸ்கின், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் சமூக வலைதளம், ஓபன் ஏஐ, நியூரோலிங்க், தி போரிங் நிறுவனங்களிலும் இந்தியவம்சாவளியினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். எலனுக்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம் உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமாக விளங்குகிறது.
வரும் ஆகஸ்ட் மாதம் டெஸ்லா சார்பில் ஓட்டுநர் இல்லாத கார் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த கார்செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தானாகவே இயங்கும் திறன் கொண்டதாகும்
டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோபைலட் குழுவின் தலைவராக தமிழகத்தை...
ஜஸ்பிரீத் பும்ரா ஒரு மேதை: ரோஹித் சர்மா புகழாரம் | T20 WC
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்புரீத் பும்ரா ஒரு மேதை எனவும் அவர் தனது உயர்மட்ட செயல்திறனை டி20 உலகக் கோப்பை முழுவதும் தொடரச் செய்ய வேண்டும் எனவும் விரும்புவதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
ஐசிசி டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்றுமுன்தினம் நியூயார்க்கில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. பேட்டிங்குக்கு கடும் சவாலாக திகழ்ந்து வரும் நசாவு கவுண்டி மைதானத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 19 ஓவர்களில்...
ஹாட்ரிக் தோல்வியை சந்தித்து முதல் அணியாக மூட்டை கட்டிய ஓமன்: இங்கிலாந்து அணிக்கு சிக்கல் | T20 WC
ஐசிசி டி 20 கிரிக்கெட் தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்த ஓமன் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறுகிறது.
ஐசிசி டி 20 கிரிக்கெட்தொடரில் நேற்று முன்தினம் இரவு ஆன்டிகுவாவில் ‘பி’ பிரிவில் நடைபெற்றலீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து -ஓமன் அணிகள் மோதின. முதலில்பேட் செய்த ஓமன் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரரான பிரதிக் அதவாலே 40 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 54...
இந்தியா – பாக். போட்டியைப் பார்க்க டிராக்டரை விற்ற ரசிகர்
ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது அந்நாட்டு ரசிகர்களின் மனதை நொறுக்கியுள்ளது. டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி தோல்வி அடைவது இது 7-வது முறையாகும். இந்திய அணியின் வெற்றியில் ரிஷப் பந்த் சேர்த்த 42 ரன்களும், பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா கைப்பற்றிய 3 விக்கெட்களும் முக்கிய பங்குவகித்தன.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 4 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதற்கான...
எந்த ஒரு கட்டத்திலும் பதற்றம் அடையவில்லை: சொல்கிறார் ஜஸ்பிரீத் பும்ரா | T20 WC
ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா முக்கிய பங்கு வகித்தார். முக்கியமான கட்டங்களில் பாபர் அஸம் (13), முகமது ரிஸ்வான் (31), இப்திகார் அகமது(5) ஆகியோரை பும்ரா ஆட்டமிழக்கச் செய்து பாகிஸ்தான் அணியின் வெற்றியை பறித்தார். ஆட்ட நாயகன் விருது வென்ற பும்ரா கூறியதாவது:
இப்போது பாராட்டுபவர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக நான் காயம் அடைந்திருந்த போதுஇனிமேல் நான்...
சர்ச்சையான நடுவரின் டெட்-பால் முடிவு; விதிகள் சொல்வது என்ன? | T20 WC: SA vs BAN
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் - டி’ ஆட்டத்தில் வங்கதேசத்தை 4 ரன்களில் வென்றுள்ளது தென் ஆப்பிரிக்கா. இந்தப் போட்டியில் கள நடுவரின் டெட்-பால் முடிவு சர்ச்சையாகி உள்ளது.
நியூயார்க்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 113 ரன்கள் எடுத்தது. 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய வங்கதேச அணி 109 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேசம் பேட் செய்த...
சிக்கிம் முதல்வராக பிரேம் சிங் தமாங் பதவியேற்பு
சிக்கிம் முதல்வராக சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா தலைவர் பிரேம் சிங்தமாங் (56) தொடர்ந்து 2-வது முறையாக நேற்று பதவியேற்றார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலும் கடந்த ஏப்ரல் 19-ம்தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 32 தொகுதிகளில் பதிவானவாக்குகள் கடந்த ஜூன் 2-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் ஆளும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) 31இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஓரிடத்தில் மட்டுமே வென்றது. இதையடுத்து, சிக்கிம்முதல்வராக பிரேம் சிங் தமாங் தொடர்ந்து இரண்டாவது...
பிரதமர் மோடி அமைச்சரவையில் 5 சிறுபான்மையினர்: முஸ்லிம் சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் இல்லை
பிரதமராக தொடர்ந்து மூன்றா வது முறையாக நரேந்திர மோடி நேற்று முன்தினம் பதவியேற்றார். இவரது அமைச்சரவையில் உள்ள71 உறுப்பினர்களில் 5 பேர் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் இருவர் சீக்கியர்கள், இருவர் பவுத்தர்கள், ஒருவர் கிறிஸ்தவர்.
சீக்கியர்களில், பிரதமர் மோடியின் முந்தைய ஆட்சியில் அமைச்சராக இருந்த ஹர்தீப்சிங் புரிக்கு (72) மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபை சேர்ந்த ஹர்தீப் சிங் புரி, 1974-ல்ஐஎப்எஸ் பெற்ற முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி. 2014-ல் பாஜகவில் இணைந்த இவர், 2018-ல் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வாகி கேபினட்டிலும் சேர்க்கப்பட்டார். 2019...
ஹிஜாப் அணிந்து வர தடை: வேலையை ராஜினாமா செய்த கொல்கத்தா கல்லூரி ஆசிரியை
கொல்கத்தாவில் உள்ள எல்ஜேடி சட்டக் கல்லூரியில் சுமார் மூன்று ஆண்டு காலம் பணியாற்றி வந்த சஞ்சிதா காதர் என்ற ஆசிரியை தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். பணியிடத்துக்கு ஹிஜாப் அணிந்து வர வேண்டாம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததாக அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
எல்ஜேடி சட்டக் கல்லூரி தனியார் கல்லூரியாகும். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பணியாற்றி வந்த சஞ்சிதா காதரிடம் மே 31-ம் தேதிக்கு பிறகு பணியிடத்துக்கு ஹிஜாப் அணிந்து வர வேண்டாம் என கல்லூரி நிர்வாகம் சொல்லியதாக...














