ஹாட்ரிக் தோல்வியை சந்தித்து முதல் அணியாக மூட்டை கட்டிய ஓமன்: இங்கிலாந்து அணிக்கு சிக்கல் | T20 WC

0
99

ஐசிசி டி 20 கிரிக்கெட் தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்த ஓமன் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறுகிறது.

ஐசிசி டி 20 கிரிக்கெட்தொடரில் நேற்று முன்தினம் இரவு ஆன்டிகுவாவில் ‘பி’ பிரிவில் நடைபெற்றலீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து -ஓமன் அணிகள் மோதின. முதலில்பேட் செய்த ஓமன் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரரான பிரதிக் அதவாலே 40 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 54 ரன்களும், அயான் கான் 39 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 41ரன்களும் சேர்த்தனர். ஸ்காட்லாந்து அணி சார்பில் சஃபியான் ஷெரீப் 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.

151 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி அதிரடியாக விளையாடியது. இதனால் அந்த அணி 13.1 ஓவரில் 3 விகெட்கள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துவெற்றி பெற்றது. தொடக்க வீரர்களான ஜார்ஜ் முன்சே 20 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 41 ரன்களும் மைக்கேல் ஜோன்ஸ் 13 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 16 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ரிச்சி பெரிங்டன் 13 ரன்களில் வெளியேறினார். பிரண்டன் மெக்முல்லன் 31 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 61 ரன்களும், மேத்யூ கிராஸ் 15 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

3 ஆட்டங்களில் விளையாடி உள்ள ஸ்காட்லாந்து அணி நிகர ரன்ரேட் 2.164 உடன் 5 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி இங்கிலாந்துடன் மோதிய முதல் ஆட்டம் மழை காரணமாக ரத்தாகியிருந்தது. 2-வது ஆட்டத்தில் நமீபியாவை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இரு வெற்றிகளின் மூலம் ஸ்காட்லாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொண்டுள்ளது. அந்தஅணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 16-ம் தேதி ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. அதே வேளையில் ஹாட்ரிக் தோல்வியைச் சந்தித்த ஓமன் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறுகிறது.

ஸ்காட்லாந்து அணியின் தற்போதைய வெற்றியால் இதேபிரிவில் உள்ள நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. 2 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி இன்னும் வெற்றி கணக்கைதொடங்கவில்லை. ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்தான நிலையில் 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 36 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வி கண்டது.

இதனால் அந்த அணி -1.800 நிகரரன் ரேட்டுடன் தனது பிரிவில்4-வது இடத்தில் உள்ளது. சூப்பர்8 சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இங்கிலாந்து அணி தனது எஞ்சிய 2 ஆட்டங்களிலும் அதிக அளவிலான ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி தனது அடுத்த ஆட்டங்களில் வரும் 14-ம் தேதி ஓமனுடனும், 15-ம் தேதி நமீபியாவுடனும் மோதுகிறது.

இதே பிரிவில் உள்ள ஆஸ்திரேலிய அணி 2 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றிகளுடன் 4புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில்உள்ளது. அந்த அணி எஞ்சியுள்ள 2 ஆட்டங்களில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட 6 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றில் எளிதாகநுழைந்துவிடும். இந்த பிரிவில்இடம் பெற்றுள்ள நமீபியா 2 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி,ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here