Home 2024
Yearly Archives: 2024
முடங்கிய இல்லம் தேடி கல்வி திட்டம்: முறையான அறிவிப்பு வராததால் குழப்பம்
முறையான அறிவிப்பு வராததால், தமிழகத்தில் ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ செயல்படாமல் முடங்கியுள்ளது.
தமிழகத்தில் கற்றல் இடைவெளியை குறைக்கவும், மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தவும், இல்லம் தேடி கல்வித் திட்டத்தை கடந்த 2021-ம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தியது. இத்திட்டத்தில், மாவட்ட அளவில் பல ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள், மாலை நேரங்களில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வந்தனர். அவர்களுக்கு மதிப்பூதியமாக மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது.
கரோனா காலகட்டத்தில் இத்திட்டம் வரப்பிரசாதமாக அமைந்தது. மேலும், கடந்த மே மாதம் மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டதால், இல்லம் தேடி...
பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்த அ.தி.மு.க. பிரமுகர்
கன்னியாகுமரி தெற்கு குண்டல் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது58). மாற்றுத் திறனாளியான இவர், திருமணமாகாததால் தனியாக வசித்து வந்தார். இவர் அந்தப் பகுதி அ.தி.மு.க. கிளை அவைத் தலைவராக இருந்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேகர் இரவில் வீட்டுக்கு வந்துள்ளார். அதன்பிறகு அவரை யாரும் பார்க்கவில்லை. அவரது வீட்டுக் கதவும் திறக்கப்படாமல் இருந்துள்ளது இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தனர்.அதன் பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று வீட்டைத் திறந்து பார்த்தனர். அப்போது படுக்கை அறையில்...
பிரபல ஓட்டலில் வாங்கிய உணவில் பல்லி- போலீஸ் அதிகாரி மகன் அதிர்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பழைய தியேட்டர் சந்திப்பில் பிரபலமான ஓட்டல் செயல்பட்டு வருகிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் ஓட்டல் அமைந்துள்ளதால் தினமும் ஏராளமானோர் சாப்பிட வருவதுண்டு.
மார்த்தாண்டம் போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர், தனது மகன் ரோகித்திடம் இரவு சாப்பாட்டுக்கு மாட்டு இறைச்சி பிரை வாங்கி வருமாறு கூறி உள்ளார். அதன்படி அவர், அந்த ஓட்டலுக்குச் சென்று மாட்டு இறைச்சி பிரை வாங்கி வந்துள்ளார்.
தொடர்ந்து வீட்டில் வைத்து பார்சலை பிரித்த போது, இறைச்சியுடன் வால் முறிந்த நிலையில் இறந்த பல்லி...
ஆரல்வாய்மொழியில் டாரஸ் லாரி மோதியதில் ராஜீவ்காந்தி சிலை உடைந்தது- கட்சியினர் திரண்டதால் பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே லாயம் விலக்கு பகுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மார்பளவு சிலை வைக்கப்பட்டு இருந்தது. 1992-ம் ஆண்டு,காங்கிரஸ் தலைவர்களில் ஓருவரான ஜி.கே.மூப்பனார் இந்த சிலையை திறந்து வைத்தார். ராஜீவ்காந்தியின் பிறந்த நாள், நினைவு நாள் அன்று இந்த சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.
ராஜீவ்காந்தி சிலை அருகே டீக்கடையும் செயல்பட்டு வந்தது. இதனால் காலை முதல் இரவு வரை அங்கு மக்கள் கூட்டம் இருக்கும். இன்று காலை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் டீ கடைக்கு வந்துள்ளனர்....
காலிஸ்தான் ஆதரவாளர் பன்னுன் கொலை முயற்சி: நிகில் குப்தாவை அமெரிக்காவிடம் ஒப்படைத்த செக் குடியரசு
காலிஸ்தான் தனி நாடு கோரும் சீக்கியர்களுக்கான நீதி எனும் அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன். இவர் அமெரிக்க மற்றும் கனடா நாடுகளின் குடியுரிமையைப் பெற்றவர். இந்தியாவுக்கு எதிராக பன்னுன் தொடர்ந்து செயல்பட்டு வந்ததையடுத்து அவரை இந்தியா தீவிரவாதியாக அறிவித்தது.
இந்த நிலையில், பன்னுனை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வைத்து கொலை செய்வதற்கான சதியில் இந்தியரான நிகில் குப்தா (52 வயது) ஈடுபட்டதாக அமெரிக்க நீதித் துறை குற்றம்சாட்டிஉள்ளது. இந்த நிலையில் நிகில் குப்தா செக் குடியரசில் கைது செய்யப்பட்டார்.
அங்கு பராக் சிறையில் அடைக்கப்பட்டிருந்த...
பெல்ஜியத்தை அப்செட் செய்த ஸ்லோவாகியா: லுகாகுவின் கோல்களை மறுத்த விஏஆர் தொழில்நுட்பம் | Euro Cup
நடப்பு யூரோ கோப்பை தொடரின் ‘குரூப் - ஈ’ பிரிவு ஆட்டத்தில் பெல்ஜியத்தை அப்செட் செய்தது ஸ்லோவாகியா. 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்லோவாகியா இதில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே இரு அணிகளும் துடிப்புடன் விளையாடின. ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் நட்சத்திர வீரர் லுகாகு, தனக்கு கிடைத்த வாய்ப்பினை மிஸ் செய்தார். 7-வது நிமிடத்தில் ஸ்லோவாகியா அணியின் ஷ்ரான்ஸ் கோல் பதிவு செய்தார்.
அதன் பிறகு பெல்ஜியம் அணி பந்தை எதிரணியின் கோல் போஸ்டுக்கு கடத்தி செல்வதில் மும்முரமாக...
‘21 டாட் பந்துகள், 4 விக்கெட்கள்’ – தன்சிம் ஹசனின் அபார பந்து வீச்சால் சூப்பர் 8-ல் கால்பதித்தது வங்கதேசம் | T20 WC
ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேபாளம் அணிக்கு எதிரான 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேசம் கடைசி அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணியின் வெற்றியில் தன்சிம் ஹசன் சாகிப், முஸ்டாபிஸுர் ரஹ்மான் ஆகியோரது பந்து வீச்சு முக்கிய பங்கு வகித்தது.
மேற்கு இந்தியத் தீவுகளின் கிங்ஸ்டவுனில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி 19.3 ஓவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன்...
ஏர் இந்தியா விமான பயணத்தின்போது பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு
ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
கடந்த வாரம் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த ஒருவர் தனக்கு அளிக்கப்பட்ட உணவில் பிளேடு கிடந்ததாக புகார் தெரிவித்திருந்தார். இது குறித்து மதுரஸ் பால் என்ற அந்தப் பயணி வெளியிட்ட எக்ஸ்பதிவில், “ஏர் இந்தியாவில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு போன்றவெட்டக்கூடிய உலோகத் துண்டுகிடந்தது.
வறுத்த உருளைக்கிழங்கு மற்றும் அத்திபழ சாட்டில் மறைந் திருந்த அந்த பிளேடை வாயில் போட்டு மென்ற பிறகுதான் தெரிய வந்தது...
“காங்கிரஸ் இந்துக்களை நம்பவில்லை” – பிரியங்கா போட்டி குறித்து ஆச்சார்யா பிரமோத் கருத்து
வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு ரேபரேலி தொகுதியை தக்கவைத்துக் கொள்ள ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினரும், உத்தர பிரதேசத்தை சேர்ந்தவருமான ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம் கருத்து தெரிவித்துள்ளார்.
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி விடுத்த கோரிக்கைக்கு கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே...
“என்டிஏ கூட்டணி ஆட்சி சிறு பிரச்சினைகளுக்கே கவிழ்ந்துவிடும்” – ராகுல் காந்தி
பிரதமர் மோடி தலைமையில் அமைந்துள்ள ஆட்சி கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நிலைத்து நீடிக்க கடுமையாக போராட வேண்டி இருக்கும் என காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகத்துக்கு அவர் அளித்தப் பேட்டியில், “நாட்டில் வெறுப்பைப் பரப்பலாம், அதன் மூலம் ஆதாயம் பெறலாம் என்ற எண்ணத்தை இந்திய மக்கள் இந்தத் தேர்தலில் நிராகரித்துவிட்டனர். தேர்தல் முடிவுகள் அதை தான் சுட்டிக்காட்டுகிறது.
பிரதமர் மோடிக்கு கடந்த 2014 மற்றும் 2019 ஆட்சி போல இந்த ஆட்சி அமையவில்லை. மத்தியில் தற்போது அமைந்துள்ள தேசிய...














