Google search engine
Home 2024

Yearly Archives: 2024

நீட் விடைத்தாள் கிழிந்ததாக புகார் அளித்த மாணவி: நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்தது அம்பலம்

தன்னுடைய நீட் விடைத்தாள் கிழிந்துவிட்டதாகவும் இதனால், தனக்கான தேர்வு முடிவு முறையாக அறிவிக்கப்படவில்லை என்றும் மாணவி ஆயுஷி படேல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கான ஆவணங்களை இணைத்த அவர், தன்னுடைய விடைத்தாளை கணினி மூலம் இல்லாமல் கைப்பட திருத்த வேண்டும் என்றும் தன் மனுவில் கோரி இருந்தார். இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமை பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அம்மாணவியின் விடைத் தாள் தொடர்பான ஆவணங்களை தேசிய தேர்வு முகமை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில், அம்மாணவியின் விடைத் தாள்...

கள்ளச் சாராயம் விற்கும் சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: வைகோ

கள்ளச் சாரய விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து பலர் பலியாகி உள்ள துயர நிகழ்வு அதிர்ச்சி அளிக்கிறது.கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைகள், மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் உடல் நிலை மோசமாக உள்ளதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி, செங்கற்பட்டு,...

நிர்மலா சீதாராமன் குறித்து அவதூறாக பேசியதாக திமுக பேச்சாளர் இனியவன் மீது பாஜக புகார்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து அவதூறாகப் பேசிய திமுக பேச்சாளர் இனியவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் நேற்று புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: சென்னை பெருங்குடியில் கடந்த 17-ம் தேதி திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேச்சாளர் இனியவன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசினார். இந்த பேச்சால் தமிழக பாஜக தொண்டர்கள்...

உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்துக்கு சக காவலர்கள் ரூ.25.49 லட்சம் நிதியுதவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள பாகலூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ராஜேந்திரன், உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து, கடந்த 2011-ம்ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள், ‘காக்கி உதவும் கரங்கள்’ குழு மூலம் ரூ.25.49 லட்சம் நிதிதிரட்டினர். ராஜேந்திரனின் மகன்களான முகுந்த் அகிலேஷ் (5) பெயரில் ரூ.11,47,410 மற்றும் சம்ருத் (3) பெயரில் 11,47,253 காப்பீடு செய்தனர். மேலும், ரூ,2,54,831-க்குகாசோலை எடுத்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ராஜேந்திரனின் குடும்பத்தினரிடம், காப்பீடு பத்திரம் மற்றும் காசோலையை...

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது

தமிழகத்தில் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது. முன்னதாக பிப்ரவரி 19, 20-ம் தேதிகளில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, 22-ம் தேதி வரை அதன் மீதான விவாதம் நடைபெற்றது. மார்ச் 16-ம் தேதி மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியாகி, 7 கட்ட தேர்தலுக்கு பிறகு மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. மக்களவை தேர்தல் நடைமுறைகள் முடிவடைந்த நிலையில், துறைகள் தோறும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்த சட்டப்பேரவை...

காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய சோதனை: ரூ.2.14 லட்சம் ரொக்கம் பறிமுதல்

காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை வரை விடிய, விடிய விஜிலென்ஸ் போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.2.14 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதன், தொடர்ச்சியாக மேல்வல்லத்தில் உள்ள சார்பதிவாளர் நித்யானந்தம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடியில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு சார் பதிவாளராக நித்யானந்தம் உள்ளார். நேற்று புதன்கிழமை என்பதால் அதிகப்படியான பத்திரப்பதிவுகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு...

தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு- வாலிபர் படுகொலை

இரணியல் அருகே உள்ள நெய்யூர் செட்டியார் மடம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 38). இவரது மனைவி சோபிகா (37). இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் நவநீதன் (45), அவரது மனைவி அமுதா (32). இவர்கள் இரு குடும்பத்தினருக்கும் இடையே தெரு குழாயில் குடிநீர் பிடிப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று சோபிகா வீட்டின் குப்பைகளை அந்த பகுதியில் தீ வைத்து எரித்த போது, நவநீதன் மற்றும் அவரது மனைவி அமுதா இருவரும் தகாத வார்த்தையால் பேசி தகராறில் ஈடுபட்டனர். அப்போது...

அணு ஆயுத கையிருப்பை அதிகரிக்கும் சீனா: இந்தியாவை போல 3 மடங்கு அதிகம்

அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா ஆகிய நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துள்ளன. இதன் விவரங்கள் குறித்து ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி மையம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ரஷ்யா தற்போது 4,380 அணு ஆயுதங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிடம் 3,708 அணு ஆயுதங்கள் உள்ளன. உலக நாடுகளிடம் உள்ள அணு ஆயுதங்களில் 90 சதவீதம் இந்த இரு நாடுகளிடம் உள்ளன. 3-வதாக சீனாவிடம் 500 அணு ஆயுதங்கள் உள்ளன. உலகின் மற்ற...

பாரிஸ் கண்காட்சியில் இந்திய ஆயுதங்கள்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெற்ற ராணுவ கண்காட்சியில் இந்தியாவில் தயாரான ஆயுதங்கள், தளவாடங்கள் இடம்பெற்று பார்வையாளர்களைக் கவர்ந்தன. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் யூரோசாட்டரி 2024 என்ற பெயரில் ராணுவக் கண்காட்சி கடந்த 17-ம்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சார்பில்பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), பாரத் எலக்ட்ரானிக்ஸ் (பிஇஎல்) ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகள் இடம்பெற்றன. டிஆர்டிஓ சார்பில் பினாக்கா மல்ட்டி-பேரல் ராக்கெட் லாஞ்சர் சிஸ்டம், எல்சிஏ தேஜாஸ் போர் விமானம், அர்ஜுன் பீரங்கி, கவச வாகனங்கள், வருணாஸ்த்ரா கனரக டார்ப்பிடோ...

நிக்கோலஸ் பூரன் விளாசலில் மே.இ.தீவுகள் அபார வெற்றி | T20 WC

ஐசிசி டி 20 கிரிக்கெட் தொடரின் கடைசிலீக் ஆட்டத்தில் நேற்று ‘சி’ பிரிவில் உள்ள மேற்கு இந்தியத் தீவுகள் -ஆப்கானிஸ்தான் மோதின. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இந்தஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் 5 விக்கெட்கள் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. டி 20 உலகக் கோப்பைவரலாற்றில் மேற்கு இந்தியத் தீவுகளின் அதிகபட்ச ரன்குவிப்பாக இது அமைந்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 53பந்துகளில், 8 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 98 ரன்கள் விளாசினார். ஜான்சன் சார்ல்ஸ் 27 பந்துகளில், 8...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

உதயநிதி ஸ்டாலின் நாளை குமரியில் பிரச்சாரம்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (14) மாலை 4 மணிக்கு நாகர்கோவிலில் திமுக வேட்பாளர் ஆஸ்டின் மற்றும் கன்னியாகுமரி வேட்பாளர் மகேஷ் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். இதைத் தொடர்ந்து, குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும்...

தக்கலை: வாலிபரை வெட்டிய தந்தை , மகன் மீது வழக்கு

தக்கலை அருகே கேரளபுரம் பகுதியில் செல்போன் திருட்டு தகராறில் சங்கர் என்பவரை ஸ்ரீதரன் மற்றும் அவரது மகன் அர்ஜுன் வெட்டுக்கத்தியால் வெட்டி படுகாயம் ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தக்கலை போலீசார் வழக்கு...

மார்த்தாண்டம்: பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் படுகாயம்

நேற்று, உண்ணாமலைகடை பகுதியை சேர்ந்த சபின் (30) தனது தாயார் லதாவுடன் பைக்கில் மார்த்தாண்டத்தில் இருந்து புதுக்கடை நோக்கி சென்றார். சூசைபுரம் பகுதியில் சென்றபோது, லதாவுக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகமானதால் பைக்கிலிருந்து...