Google search engine
Home 2024

Yearly Archives: 2024

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் 6 புதிய திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில், ரூ.98.21 கோடி மதிப்பில் 6 புதிய திட்டப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில், ரூ.98.21 கோடி மதிப்பில் பெரும்பாக்கம், முடிச்சூர், அயனம்பாக்கம், வேளச்சேரி, சீக்கனான் ஏரிக்கரைகளை மேம்படுத்தும் பணிகள் மற்றும் வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் பகுதியை அழகுபடுத்தும் பணி என மொத்தம் 6 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி...

ரூ.426 கோடியில் 3,268 புதிய குடியிருப்புகள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.426.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 3,268 குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியை ஏற்படுத்தித் தரும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 1970-ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. இதை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்து கடந்த 2021-ம் ஆண்டு செப்.1-ம்...

தீபாவளி பண்டிகைக்காக இன்று இரவு 12 மணிவரை மெட்ரோ ரயில் சேவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மெட்ரோ ரயில் சேவை இன்று காலை 5 மணி முதல் இரவு 12 மணிவரை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக, இன்று (அக்.30) மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுகிறது. அதாவது, புதன்கிழமை காலை 5 மணிமுதல் இரவு 12 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். சென்னை சென்ட்ரல் - பரங்கிமலை...

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம்: விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு

தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு மக்கள் அதிகளவில் செல்வதால் விமான டிக்கெட் கட்டணங்களும் பல மடங்கு அதிகரித்துள்ளன. குறிப்பாக இன்று கட்டணம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காத பலர், விமானங்களில் செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு படையெடுத்து வருகின்றனர். அலைமோதும் பயணிகள்: இதனால் உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் விமான கட்டணங்கள் பல...

தீபாவளி ஊக்கத்தொகை: ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சிவசங்கர் கண்டனம்

“போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கும், இதுவரை ஊக்கத்தொகை வழங்கப்படாத பிற பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கும் இன்றைக்குள் தீபாவளி ஊக்கத்தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை உண்மைக்கு புறம்பானது” என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வரின் சீரிய தலைமையில் தமிழ்நாட்டில் மிகச் சிறந்த நிர்வாகத்தை வழங்கி வருகிறார்கள். 10 ஆண்டு அதிமுக ஆட்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களை சீரழித்து சென்றுள்ள நிலையில், இந்த...

நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் செல்போன் திருடிய வாலிபர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் நேற்று இரவு தீபாவளி பண்டிகையையொட்டி கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி இரண்டு இளைஞர்கள் பயணிகளிடமிருந்து செல்போனை திருடியுள்ளனர். செல்போன் திருடிய இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவிலில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 6 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் நேற்று மாநகரில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தினர். அப்போது மதுபோதையில் ஓட்டி வந்த 4 ஆட்டோக்கள், ஒரு வேன் மற்றும் ஒரு சொகுசு கார் உள்ளிட்ட 6 வாகன டிரைவர்கள் போலீசில் பிடிபட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விபத்து தடுப்பு நடவடிக்கையாக, குடிபோதையில் ஓட்டி வந்த வாகன டிரைவர்களின் ஓட்டுனர் உரிமத்தை கோர்ட்டு நடவடிக்கைகள் முடிந்த பிறகு வட்டார போக்குவரத்து அலுவலகம்...

மார்த்தாண்டம்: இடையூறாக நிறுத்திய பைக்க்களுக்கு பூட்டு

மார்த்தாண்டத்தில் மேம்பாலத்தின் கீழே மத்திய பகுதியில் இரு புறம் உள்ள கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக நடத்த பைக் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் நாகர்கோவில் திருவனந்தபுரம் மற்றும் வெளியூர்களில் தினமும் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றி வருகின்றவர்கள் பைக்கில் வந்து பைக் நிறுத்திவிட்டு இரவு வந்து எடுத்துச் செல்கின்றனர்.     ஆனால் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பைக் நிறுத்த போதுமான இடமில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்தது. இந்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் டிராபிக் சப் இன்ஸ்பெக்டர்...

மார்த்தாண்டம்: எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

இந்திய ஆயுள் காப்பீடு முகவர் மத்திய, மண்டல கோட்ட சங்கத்தின் அறிவுறுத்தலின்படி பாலிசிதாரர்களின் போனசை உயர்த்தவும், பாலிசிக்கான ஜிஎஸ்டி நீக்கிடவும், பாலிசி கடனுக்கான வட்டியை குறைத்து விடவும், ஏஜென்ட்களின் கமிஷனை குறைத்ததை கண்டித்தும், க்ளாவே கமிஷன் சரத்தை நீக்கிடவும், முகவர்களின் குழு காப்பீடு வயதை உயர்த்திடவும், அனைத்து முகவர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கிடவும் மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி குழித்துறை கிளை சார்பில் மார்த்தாண்டம் எல்ஐசி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.       கிளைச் செயலாளர் பீட்டர் தலைமை வகித்தார்....

கருங்கல்: பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு

கருங்கல் அருகே திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் மரிய அருள் தாஸ் (55). கொத்தனார். இவரது மனைவி ஐடா பிளாரன்ஸ் (51). இன்று (28-ம் தேதி) அதிகாலை ஐடா பிளாரன்ஸ்  வீட்டின் பின்வாசல் வழியே வெளியே சென்றார். அப்போது அந்த பகுதியில் நின்ற மர்ம நபர் ஐடா கழுத்தில் அணிந்திருந்த எட்டு பவுன் செயினை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.       இரு சூழ்ந்து இருந்ததால் மர்ம நபரை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. ஐடா சத்தம் போட்ட உடன்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...