Google search engine
Home 2024

Yearly Archives: 2024

ம.பி.யில் தீபாவளிக்காக மகாலட்சுமி கோயிலுக்கு நகைகள் வழங்கும் பக்தர்கள்: 5 நாட்களுக்கு பிறகு பத்திரமாக திரும்ப அளிக்கும் விநோதம்

வட மாநிலங்களில் தீபாவளி பண்டிகை ஐந்து நாட்களுக்கு கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி தீபாவளி பண்டிகை நேற்று தொடங்கியது. மத்திய பிரதேசத்தின் ரத்லாமில் உள்ள ஸ்ரீமகாலட் சுமி பெரிய கோயிலில் ஒரு வித்தியாசமான பழக்கம் உள்ளது. பக்தர்கள் தங்களுடைய தங்க,வைர நகைகளையும் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளையும் மகாலட்சுமி கோயிலில் டெபாசிட் செய்கிறார்கள். இவற்றை கோயில் நிர்வாகிகள் கணக்கிட்டு நோட்டுப்புத்தகத்தில் பதிவு செய்து, உரியவர்களிடம் ரசீது வழங்குகின்றனர். பின்னர் இந்த நகைகள் மற்றும் ரூபாய் நோட்டுகளைக் கொண்டு மகாலட்சுமி அம்மன், அருகிலுள்ள விநாயகர் மற்றும் சரஸ்வதியை அலங்காரம்...

பிவி சிந்துவுக்கு வழங்கப்பட்ட இடத்தில் கல்லூரி கட்ட வேண்டும்: ஆந்திர மக்கள் கோரிக்கை

பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்துவுக்கு கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், அகாடமி கட்ட வழங்கப்பட்ட இடத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் கல்லூரி கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பிவி சிந்துவின் கோரிக்கையின்படி, கடந்த ஜெகன் அரசு, அவருக்கு அகாடமி மற்றும் ஸ்போர்ட்ஸ் பள்ளி கட்ட 5 ஏக்கர் நிலத்தை விசாகப்பட்டினத்தில் உள்ள தோட்டகுரு எனும் இடத்தில் வழங்கியது. ஆனால் இதுவரை அங்கு எதுவும் கட்டப்படவில்லை என்பதால், அப்பகுதி மக்கள், அரசு வழங்கிய அந்த இடத்தில் ஜூனியர் கல்லூரி...

கர்நாடகாவில் செல்பி எடுக்க சென்றபோது பாறை இடுக்கில் விழுந்த கல்லூரி மாணவி: 20 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு

கர்நாடகாவில் செல்பி எடுக்க சென்றபோது கால் தவறி, பாறை இடுக்கில் சிக்கிய கல்லூரி மாணவி 20 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் பத்திரமாக‌ மீட்டகப்பட்டார். கர்நாடக மாநிலம் துமக்கூரு மாவட்டத்தில் குப்பி அருகிலுள்ள ஸ்ரவர்ணபுராவை சேர்ந்தவர் சோமநாத் கவுடா (48). இவரது மகள் அம்சா எஸ் கவுடா (20). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தும்கூருவை அடுத்துள்ள மைடாலா ஏரிக்கு நண்பர்களுடன் அவர் சுற்றுலா சென்றார். அங்கு பாறை மீது ஏறி செல்பி எடுத்தபோது...

ஜெகன்மோகனின் குடும்ப பிரச்சினைக்கு தெலுங்கு தேசம் கட்சி காரணமா? – ஆந்திர அமைச்சர் சத்யபிரசாத் கண்டனம்

 முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தனது குடும்ப பிரச்சினைக்கு தெலுங்கு தேசம் கட்சி மீது குற்றம் சுமத்துவதா? என்று ஆந்திர மாநில வருவாய் துறைஅமைச்சர் சத்யபிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. பண்டிகை விடுமுறையால் இக்கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று பல விஐபி பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். தெலங்கானாவை சேர்ந்த அமைச்சர் கொண்டா சுரேகா, ஆந்திர வருவாய் துறை அமைச்சர்சத்யபிரசாத் உட்பட பலர் சுவாமியை தரிசித்தனர். இவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில்தீர்த்த, பிரசாதங்கள் வழங்கிகவுரவிக்கப்பட்டது. தரிசனத்துக்குப்...

ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச சிகிச்சை: பிரதமர் தொடங்கி வைத்தார்

ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். 9-வது ஆயுர்வேத தினம் மற்றும் மருத்துவ கடவுளான தன்வந்தரி பகவானின் பிறந்த நாளை ஒட்டி டெல்லியில் நேற்று அரசு நலத்திட்ட விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, தமிழ்நாடு உட்பட 18 மாநிலங்களில் ரூ.12,850 கோடி மதிப்பிலான சுகாதார நலத் திட்டங்களை தொடங்கிவைத்தார். குறிப்பாக ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த...

நவ.1-ல் 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஈரோடு, கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, கரூர் உட்பட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நவ.1-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தென்தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வடதமிழக உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், சோழவந்தானில் தலா 4 செ.மீ.மழை...

சென்னை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 16 தொகுதிகளில் 39,25,144 வாக்காளர்கள் – ஆண்களைவிட பெண்கள் அதிகம்

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 39 லட்சத்து 25 ஆயிரத்து 144 வாக்காளர்கள் உள்ளனர் என்று வரைவு வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 68,704 பேர் அதிகமாக இருக்கின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான 2025-ம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்த வரைவு வாக்காளர் பட்டியலை கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலரும் சென்னை மாநகராட்சி துணை ஆணையாளருமான (வருவாய் மற்றும் நிதி) எம்.பிருதிவிராஜ் நேற்று வெளியிட்டார். அதன் விவரம்: சென்னை மாவட்டத்தில் 3,718 வாக்குச்சாவடிகள்...

தீபாவளி பண்டிகை இனிப்பு வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்களை ரூ.120 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு: இயக்குநர் தகவல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் பாலகங்களில் சிறப்பு இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், ரூ.120 கோடி மதிப்பிலான ஆவின் பொருட்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் வினீத் தெரிவித்தார். தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் உப பொருட்களான வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உட்பட 225 வகையான பால் பொருள்கள் தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக, தயாரித்து, ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில்,...

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து விளையாட்டு வீரர்களுக்கு ரூ.40.55 லட்சம்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து 29 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.31.95 லட்சத்துக்கான காசோலைகள், ஒரு சைக்கிள் பந்தைய வீரருக்கு ரூ.8.60 லட்சம் மதிப்பிலான அதிநவீன பந்தைய சைக்கிள் என மொத்தம் ரூ.40 லட்சத்து 55 ஆயிரத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சீனாவில் டிசம்பர் 1 முதல் 7-ம் தேதி வரை நடைபெறவுள்ள 4-வது உலக ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டியில் (சிறுவர் மற்றும் சிறுமியர்) கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ள 24 வீரர்,...

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்

 சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்தாண்டு கைது செய்தனர். பின்னர் அவர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ம.கவுதமன், தடயவியல் துறை...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...