Home 2024
Yearly Archives: 2024
ஈத்தாமொழி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாழையூத்தைச்சேர்ந்தவர் மதியழகன் (வயது46), மரம் வெட்டும் தொழிலாளி. சம்பவத்தன்று ஈத்தாமொழி அருகே உள்ள நரையன்விளையச் சேர்ந்த ஸ்ரீதரன் என் பவரது தோப்பில் உள்ள மரத்தை வெட்டுவதற்காக மதியழகன் வந்தார். பின்னர் அவர் மரத்தில் ஏறிக்கொண்டிருந்தார். அப்போது எதிர் பாராத விதமாக மதியழகன் தவறி விழுந்தார்.
இதில் அவ ருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதரன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில்...
ஏடிபி பைனல்ஸ் தொடருக்கு தகுதி பெற்றது ரோகன் போபண்ணா – மேத்யூ எப்டன் ஜோடி
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் டென்னிஸ் தரவரிசையில் முன்னணியில் உள்ள 8 வீரர்கள் மற்றும் 8 ஜோடிகள் கலந்து கொள்ளும் ஏடிபி பைனல்ஸ் தொடர் நடைபெறும். இந்த ஆண்டுக்கான தொடர் வரும் நவம்பர் 10 முதல் 17-ம் தேதி வரை இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற உள்ளது.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் விளையாட இதுவரை இத்தாலியின் ஜன்னிக் ஷின்னர், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரேவ், ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ் ஆகிய 4 பேர் தகுதிபெற்றுள்ளனர். மீதம் உள்ள 4 இடங்கள்...
டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் சதம்: தென் ஆப்பிரிக்க அணி 307 ரன்கள் குவிப்பு
வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது. டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் சதம் விளாசினார்கள்.
சட்டோகிராமில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக கேப்டன் எய்டன் மார்க்ரம், டோனி டி ஸோர்ஸி களமிறங்கினார்கள். நிதானமாக விளையாடிய எய்டன் மார்க்ரம் 55 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்த...
விஜய் சங்கர் சதம் விளாசல்: சத்தீஸ்கருக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தது தமிழ்நாடு அணி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘டி’ பிரிவில் உள்ள சத்தீஸ்கர் - தமிழ்நாடு அணிகள் இடையிலான ஆட்டம் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் சத்தீஸ்கர் 500 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய தமிழ்நாடு 77.2 ஓவர்களில் 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது பாலோ-ஆன் ஆனது.
இதையடுத்து 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 76 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்த...
ஸ்மிருதி மந்தனா அதிரடியில் தொடரை வென்றது இந்திய மகளிர் அணி
நியூஸிலாந்து மகளிர் அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய மகளிர் அணி வென்றது.
இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து மகளிர் அணி 49.5 ஓவர்களில் 232 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக புரூக் ஹாலிடே 96 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் விளாசினார். ஜார்ஜியா பிலிமெர் 39, இஸபெல்லா காஸி 25 ரன்கள் சேர்த்தனர்.
233 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய...
இந்திய அணியுடன் இணைகிறார் ‘இளம் வேகம்’ ஹர்ஷித் ராணா: பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?
இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வரும் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியுடன் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா இன்று இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ஹர்ஷித் ராணா, ரஞ்சி கோப்பை தொடரில் அசாம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களையும், 2-வது இன்னிங்ஸில் 2 விக்கெட்களையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருந்தார். மேலும் முதல் இன்னிங்ஸில்...
ஃபேமிலி டிராமா ஜானரில் ஜெயம் ரவியின் ‘பிரதர்’ – படக்குழு பகிர்வு
இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘பிரதர்’ திரைப்படம், தீபாவளி திருநாளான அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா அருள் மோகன், பூமிகா சாவ்லா, விடிவி கணேஷ், நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியன், ராவ் ரமேஷ், அச்யுத் குமார், சரண்யா பொன்வண்ணன், சீதா, சதீஷ் கிருஷ்ணன், எம்.எஸ்.பாஸ்கர், சுரேஷ் சக்கரவர்த்தி, விருத்தி விஷால், மாஸ்டர் அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விவேகானந்த் சந்தோஷம்...
லோகேஷ் யுனிவர்ஸில் என்ட்ரி! – ராகவா லாரன்ஸின் ‘பென்ஸ்’ அறிவிப்பு டீசர் எப்படி?
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படத்தின் அறிவிப்பு டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்துக்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஜி ஸ்குவாட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதன் முதல் தயாரிப்பாக ‘ஃபைட் கிளப்’ படம் கடந்த ஆண்டு வெளியானது. இதன் அடுத்த தயாரிப்பாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘பென்ஸ்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் கதை எழுத, ‘ரெமோ’, ‘சுல்தான்’ படங்களைய் இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். ராகவா லாரன்ஸின் பிறந்தநாளையொட்டி இதன்...
500 ஆண்டுகளுக்குப் பிறகு ராமருக்கு இது சிறப்பான தீபாவளி: பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி
500 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தீபவாளி ராமருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த தீபாவளியாக அமைய உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று மேலும் கூறியதாவது: தந்திராஸ் பண்டிகை கொண்டாடும் அனைத்து குடிமக்களுக்கும் என்னுடைய மனம் கனிந்த நல்வாழ்த்துகள். தீபாவளி பண்டிகையை கொண்டாட இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இந்த தீபாவளி ராமருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. 500 ஆண்டுகளுக்குப் பிறகு கடவுள் ராமர் அயோத்தியில் வீற்றிருக்கிறார். அங்கிருந்து முதல் முறையாக அவர் இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட...
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் தீவிரவாதம் குறித்து நூல் எழுதிய ஜெகதிஷ் உய்கே
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஜெகதிஷ் என்பவர் தீவிரவாதம் குறித்து நூல் எழுதியவர் என்றும் அவரை தேடி வருவதாகவும் மகாராஷ்டிர போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2 வாரங்களாக தினமும் உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவையில் ஈடுபட்டுள்ள விமானங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால் சோதனையில் அவை வெறும் புரளி என தெரியவந்தது. இதனால் விமானங்கள் புறப்படுவதில் அல்லது சென்று சேர்வதில் தாமதம் ஏற்பட்டது. மேலும் விமான நிலையங்கள், விமான நிறுவன அலுவலகங்கள், ரயில்வே நிலையங்கள் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்,...














