Google search engine
Home 2024

Yearly Archives: 2024

தேங்காப்பட்டணம்: துறைமுகம் சீரமைக்க அமைச்சரிடம் மனு

அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று குமரி மாவட்டம் வந்திருந்தார். அவரை சந்தித்து கிள்ளியூர் எம் எல் ஏ ராஜேஷ்குமார்  அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: - தேங்காய் பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் தற்போது ஏற்பட்ட கடல் சீற்றத்தின் காரணமாக துறைமுகத்தில் 100 மீட்டர் தூரத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக சீரமைக்க வேண்டும். சேதமடைந்த துறைமுகத்தை சீரமைக்க மேலும் ரூ.   10 கோடி செலவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகம் சீரமைக்க 26 டன் எடை கொண்ட கற்களை அடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ...

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது யார்?

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூஸிலாந்துக்கு எதிராக அடுத்தடுத்து இரு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்ததன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. அதேவேளையில் இந்திய அணியின் இந்த திடீர் சரிவு மற்ற அணிகளுக்கான வாய்ப்பின் கதவுகளை திறந்துள்ளது. தற்போதைய நிலையில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்தியா 62.82 வெற்றி சராசரியுடன் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 62.50 வெற்றி சராசரியுடன் 2-வது இடத்தில் உள்ளது. இந்த இரு...

சிறந்த வீரருக்கான Ballon d’Or விருதை வென்றார் ஸ்பெயினின் ரோட்ரி!

நடப்பு ஆண்டுக்கான Ballon d’Or விருதை விருதை வென்றுள்ளார் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மிட்-ஃபில்டர் ரோட்ரி. தனது தேசிய அணி மற்றும் கிளப் அணியில் சிறந்த ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார். 2023-24 பிரீமியர் லீக் சீசனில் மான்செஸ்டர் சிட்டி அணி பட்டம் வெல்லவும், யூரோ கோப்பை தொடரில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வெல்லவும் அவரது ஆட்டம் உறுதுணையாக அமைந்தது. பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அவர் Ballon d’Or விருதை பெற்றுக் கொண்டார். 28 வயதான அவர், மான்செஸ்டர்...

மாத்ருபூமி: 5 அணா சம்பளத்தில் 2,000 துணை நடிகர்கள்!

தமிழ் சினிமா பேசத் தொடங்கிய காலகட்டத்திலேயே சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவான கருத்துகள் படங்களில் இடம்பெறத் தொடங்கிவிட்டன. சென்னை ராஜதானியில், 1937-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்ததும் திரைப்படத் தணிக்கை முறையில் தளர்வு செய்யப்பட்டது. இதையடுத்து நாட்டுப்பற்றைப் போற்றும் திரைப்படங்கள் வெளிவந்தன. அதில் ஒன்று ‘மாத்ருபூமி’. சுதந்திர உணர்வைக் கொஞ்சம் ஆக்ரோஷமாகவே பேசிய படம் இது. ‘சந்திரகுப்தா’ என்ற வங்க மொழி நாடகத்தைத் தழுவி உருவான படம். அந்த காலத்திலேயே 2 லட்சம் ரூபாய் செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்துக்கான போர்க்காட்சிகள், செஞ்சிக்...

பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா? – நயன்தாரா விளக்கம்

திரையுலகினர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முக அழகை மாற்றுவது வழக்கமானதுதான். ஸ்ரீதேவி முதல் ஸ்ருதி ஹாசன் வரை பல நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. புருவத்தை அழகுபடுத்த அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நயன்தாரா, கன்னம் மற்றும் மூக்குப் பகுதியில் சர்ஜரி செய்துள்ளதாகவும் உதட்டில் ‘லிப் ஃபில்லர்’களைப் பயன்படுத்தி யிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இதை நயன்தாரா மறுத்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், “புருவத்துக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுப்பது உண்மைதான். அதை அழகுபடுத்த அதிக நேரம் எடுத்துக்கொள்வேன். ஏனென்றால் அதுதான் எனக்கு...

ஜானி டெப் இயக்கிய ‘மோடி’ பயோபிக் படம்

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், பிளாட்டூன், க்ரை-பேபி, டெட் மேன் என பல படங்களில் நடித்துள்ளார். பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் பட வரிசையில் நடித்த ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். சில படங்களைத் தயாரித்துள்ள இவர், ‘தி பிரேவ்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘மோடி, த்ரீ டேஸ் ஆன் த விங்க் ஆஃப் மேட்னஸ்’. இதில் ரெக்கார்டோ ஸ்கேமர்சியோ, ஸ்டீபன் கிரஹாம், அல் பசினோ உட்பட...

ஜார்க்கண்ட்டின் பாரம்பரிய ஓவியத்தை அதிபர் புதினுக்கு பரிசளித்த பிரதமர் நரேந்திர மோடி

 ரஷ்யாவின் காஸன் நகரில் கடந்த 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை பிரிக்ஸ் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, புதின் உட்பட உலகத் தலைவர்களுக்கு இந்தியாவின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் பல அரிய பொருட்களை பிரதமர் மோடி பரிசளித்துள்ளார். இதுகுறித்து மத்திய வெளியு றவுத் துறை அதிகாரிகள் நேற்று கூறியதாவது: பிரிக்ஸ் மாநாட்டின் போது ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுக்கு, கடல் சிப்பிகளால் செய்யப்பட்ட பூக்கள் வைக்கும் குவளையை (மதர் ஆப் பியர்ல்) பிரதமர் மோடி பரிசளித்தார். இந்த...

நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

 தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சியின் முதல் மாநாட்டை விக்ரவாண்டி, வி சாலை கிராமத்தில் வெற்றிகரமாக நிகழ்த்தி முடித்துள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது உரையை பாராட்டியும், விமர்சித்தும் வருகின்றனர். விஜய் மாநாட்டில் பேசும்போது, ’கூத்தாடிகள்’ குறித்து ஆவேசமாக உரையாற்றினார். அவர் பேசும்போது, கூத்தாடிகள் என்றால் கேவலமல்ல என்றும், அவர்கள் நாட்டையே வெகு சிறப்பாக ஆண்டிருக்கிறார்கள் என்றும் பேசினார். இதற்கு உதாரணமாக தமிழ்நாட்டில்எம்ஜிஆரும், ஆந்திராவில் என்டிஆரின்...

ரூ.12,850 கோடியில் பல்வேறு சுகாதார நலத்திட்டங்கள்: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

 ரூ.12,850 கோடி மதிப்பிலான பல்வேறு சுகாதார நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைக்கவுள்ளார். 9-வது ஆயுர்வேத நாள் மற்றும், மருத்துவக் கடவுளான தன்வந்திரி பகவானின் பிறந்தநாளையொட்டி பல்வேறு சுகாதார நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மொத்தம் ரூ.12,850 கோடி மதிப்பிலான சுகாதார நலத்திட்டங்களை நாட்டு மக்களுக்கு இன்று அர்ப்பணிக்கவுள்ளார். நாடு முழுவதும் பொதுமக்கள் இலவசமாக மருத்துவச் சிகிச்சையைப் பெற உதவும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்...

2025-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்: 2028-க்குள் தொகுதி மறுவரையறை பணி முடியும்

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும். இதன் அடிப்படையில் வரும் 2028-ம் ஆண்டில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடந்த 1881-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதன்படி கடந்த 2011-ம் ஆண்டில் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதன்பிறகு கடந்த 2021-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் சுமார் 4...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...