Home 2024
Yearly Archives: 2024
பேருந்தில் கட்டணம் ரூ.50 தர மறுத்த பெண் காவலர்: ராஜஸ்தான், ஹரியானா போலீஸார் மாறி மாறி அபராதம்
ராஜஸ்தான் அரசுப் பேருந்தில் ஹரியானா பெண் காவலர் பயணச்சீட்டு வாங்க மறுத்த விவகாரம் இரு மாநில போக்குவரத்து போலீஸார் இடையிலான மோதலாக உருவெடுத்துள்ளது. இதில் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி அபராதம் விதித்து வருகின்றனர்.
கடந்த 22-ம் தேதி ராஜஸ்தான் அரசுப் பேருந்தில் ஹரியானா பெண் காவலர் ஒருவர் பயணம் செய்துள்ளார். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து ஹரியானாவின் தர்ஹரா செல்ல அக்காவலரிடம் நடத்துநர் ரூ.50 பயணக் கட்டணம் கேட்டுள்ளார். ஆனால் அரசு ஊழியர் என்று கூறி பெண் காவலர் பயணச்சீட்டை வாங்க மறுத்துள்ளார்.
இதற்கு...
குஜராத்தில் ராணுவ விமானங்கள் தயாரிக்கும் டாடா ஏர்பஸ் ஆலையை திறந்தார் மோடி: ஸ்பெயின் பிரதமர் பங்கேற்பு
ராணுவ விமானம் தயாரிப்பதற்கான டாடா - ஏர்பஸ் தொழிற்சாலையை குஜராத் மாநிலம் வடோதராவில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உடன் இணைந்து பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். ‘‘இந்த நாட்டின் சிறந்த மகன் ரத்தன் டாடா உயிரோடு இருந்திருந்தால் இந்த நிகழ்வை பார்த்து மகிழ்ந்திருப்பார்’’ என்று மோடி நெகிழ்ச்சியுடன் கூறினார். இந்த தொழிற்சாலை மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். விமான உற்பத்தி கேந்திரமாக இந்தியாவை மாற்றுவதில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய விமானப்படையில் உள்ள அவ்ரோ-748 ரக போக்குவரத்து...
சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கில் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று பெங்களூரு, மைசூரு, மண்டியா, மங்களூரு உள்ளிட்ட இடங்களில் 6 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை மேற்கொண்டனர்.
முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியதற்காக, மைசூரு மாநகர மேம்பாட்டு கழகம்(முடா) அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பை விட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் சித்தராமையா மீது நில முறைகேடு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை அமலாக்கத்துறையும் லோக் ஆயுக்தாவும்...
கேரளாவில் கோயில் திருவிழாவில் பயங்கர வெடி விபத்து: 150 பேர் காயம்
கேரள மாநிலம் காசர்கோடு அருகே கோயில் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை (அக்.29) அதிகாலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில், சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு அருகே அஞ்சூத்தம்பலம் வீரர்காவு கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இக்கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுகான திருவிழா அங்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு பட்டாசுகள் கோயில் அருகே உள்ள குடோனில் வைக்கப்பட்டிருந்தது. கோயில் திருவிழாவை காண ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர்.
இந்நிலையில், குடோனில்...
ஜாபர் சாதிக் மீதான வழக்கு: இயக்குநர் அமீர் உட்பட 12 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவு
ஜாபர் சாதிக் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்காக இயக்குநர் அமீர் உட்பட 12 பேருக்கு சம்மன் அனுப்ப சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகளும் கடந்த ஜூன் 26-ல் ஜாபர் சாதிக்கை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாபர் சாதி்க்கின்...
தீபாவளிக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காய சிறப்பு சிகிச்சை பிரிவு தொடக்கம்
தீபாவளி பண்டிகை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25 படுக்கைகள் கொண்ட சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவில் ஆண்களுக்கு 12 படுக்கைகள், பெண்களுக்கு 8 படுக்கைகள், குழந்தைகளுக்கு 5 படுக்கைகள் என மொத்தம் 25 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு சிகிச்சை வார்டை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பாதுகாப்பாகப் பட்டாசுகள் வெடிப்பது தொடர்பாக தமிழ்நாடு தீயணைப்புத் துறையின் சார்பில் மருத்துவமனையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதேபோல், இந்த...
தனியார் பேருந்துகளை வாடகைக்கு இயக்குவது பொது போக்குவரத்தை தனியார் மயமாக்கும்: கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை
தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்களின் நலன் கருதி தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது, எதிர்காலத்தில் பொதுப்போக்குவரத்தை தனியாருக்கு விடும் நிலையை ஏற்படுத்திவிடும் என மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது
இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. ஆனால், இச்சிறப்பு பேருந்துகள் இயக்கத்துக்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு முன்வந்துள்ள நடவடிக்கை ஏற்கத்தக்கல்ல.
தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு போக்குவரத்துக் கழகங்களின் சேவை முக்கிய பங்களிப்பு...
தீபாவளி பண்டிகை நெரிசலை குறைக்க தென் மாவட்டங்களுக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை இயக்குமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் (அக்.31) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு சொந்த ஊர்களுக்கு செல்லும் விதமாக, வழக்கமான விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பாக முடிந்து, காத்திருப்போர் பட்டியல் வந்தது.
இதையடுத்து, 15-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களில் குறிப்பிட்ட மார்க்கங்களில் அக்.28, 29, 30 ஆகிய தேதிகளில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில்...
கொளத்தூரில் முதல்வர் படைப்பக கட்டிடம்: நவ.4-ல் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
சென்னை கொளத்தூர் தொகுதியில் நவ.4-ம் தேதி முதல் பகிர்ந்த பணியிடமான ‘முதல்வர் படைப்பகத்தை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார். சென்னை, அகரம், ஜெகந்நாதன் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பன்னோக்கு மையத்தில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் பகிர்ந்த பணியிடம் அமைக்கப்படுகிறது. இதன் இறுதிக்கட்ட பணிகளை, அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பெண்கள் கணினி கற்பதற்காக, அனிதா பெயரில் கொளத்தூரில் தொடங்கப்பட்ட மையத்தில், 2,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பலனடைந்துள்ளனர். இதன், 13-வது பேட்ச்சாக...
துணை முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர் உதயநிதி ஸ்டாலின்: இந்து முன்னணி விமர்சனம்
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கத்தின் லோகோவை சென்னையில் வெளியிட்டுள்ளார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களை இனவெறிக்கு தூண்டும் வகையில், இன பேதத்தைத் கல்விக்கூடங்களில் ஏற்படுத்தி மாணவர்களிடையே இனப் பிரிவினையை உண்டாக்கிடும் வகையில் பேசியுள்ளார். எனவே உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி வகிக்க தகுதியற்றவர்.
அந்நிகழ்ச்சியில் பேசும்போது கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் சங்கிகள்...














