Google search engine
Home 2024

Yearly Archives: 2024

விமர்சனங்களுக்கு நேரடியாக பதில் அளிக்காவிட்டாலும் விஜய்யின் அடுத்தடுத்த செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்கும் திமுக

 தவெகவின் முதல் மாநாட்டில் நடிகர் விஜய்யின் பேச்சு மற்றும் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் விமர்சனங்கள் வைக்கப்பட்ட போதிலும், நேரடியாக பதிலளிக்காமல் நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த செயல்பாடுகளை உன்னிப்பாக திமுக கவனித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆளும் திமுக, அடுத்த சட்டப்பேரவை தேர்தலுக்கு கடந்த பல மாதங்களுக்கு முன்பிருந்தே தயாராகி வருகிறது. அடுத்து வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் 200 தொகுதிகளை இலக்காக வைத்து களம் காண, முதல்வர் மு.க.ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் கட்சியினரை அவ்வப்போது சந்தித்து உற்சாகப்படுத்தி வருகின்றனர்....

விஜய்க்கு ஆதரவாக சீமானை விமர்சித்து வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி

விஜய்க்கு ஆதரவாக சீமானை விமர்சித்து நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார். தவெக தலைவர் விஜய்யின் கொள்கை குறித்து நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: தவெக தலைவர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாபம் விடுகிறார். விஜயும், திமுகவும் கொள்கை ரீதியாகவே தவறு செய்துள்ளதாக சீமான் கூறுகிறார். அப்படி கொள்கை ரீதியாக தவறு செய்பவர்கள் லாரி விபத்தில் சிக்குவார்கள் என்றால், எங்களை போன்ற பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவர்கள்...

வடகிழக்கு பருவமழை தீவிரம்: தமிழகத்தில் நவ.9 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்நவ.9-ம் தேதி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கேரள கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாக உள்ளது. இவற்றின் தாக்கத்தால், தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் நவம்பர் 9-ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்....

ஊர் சென்று திரும்புவோர் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்கம்

தீபாவளிக்கு ஊர் சென்று சென்னை திரும்புவோரின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக இன்று (நவ.4) பயணிகளின் நெரிசல் குறையும் வரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 478 பேருந்துகளின் 3,529 பயண நடைகளுடன் கூடுதலாக 250 பேருந்துகளின் மூலம் 1,113 பயண நடைகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும். மேலும்,...

சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பாத தொழிலாளர்களால் சென்னை மெட்ரோ ரயில் பணிகளில் சிறிது தொய்வு

சொந்த ஊர்களுக்கு சென்ற வெளிமாநில தொழிலாளர்கள் 30 முதல் 40 சதவீதம் பேர் மீண்டும் பணிக்கு திரும்பாததால், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக, புதிய தொழிலாளர்களை பணிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் 116.1 கி.மீ. தொலைவுக்கு ரூ.63,246 கோடியில் நடைபெற்று வருகின்றன. அதாவது, மாதவரம் - சிறுசேரி வரை 3-வது வழித்தடம் (45.4 கி.மீ.), கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை 4-வது...

பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தை: வாடகை வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை

வாடகை வாகன ஓட்டுநர்களின் பிரச்சினைகள் தொடர்பாக தீர்வுகாண பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக உரிமைக் குரல் ஓட்டுநர் சங்க பொதுச்செயலாளர் அ.ஜாஹிர்உசேன், தலைவர் இ.சே.சுரேந்தர் ஆகியோர் கூறியதாவது: தனியார் செயலி மூலம் இயங்கும் பன்னாட்டு போக்குவரத்து நிறுவனங்களால் வாடகை வாகன ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறோம். அந்நிறுவனங்களின் கீழ் வாகனங்களை ஓட்டும்போது ரூ.2 ஆயிரம் சம்பாதித்தால் ரூ.400 கமிஷனாகவும், ரூ.100 ஜிஎஸ்டி வரியாகவும் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆட்டோக்களுக்கு கி.மீட்டருக்கு ரூ.11 மட்டுமே வழங்கப்படுகிறது. சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் அதிக...

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: விரைவில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோரயில் சோதனை ஓட்டம் பூந்தமல்லியில் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த தடங்களில் ஓட்டுநர் இல்லாத 138 ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொருரயிலிலும் 3 பெட்டிகள் இருக்கும். இதில் முதல் கட்டமாக, 36 ரயில்களை ரூ.1,215.92 கோடி மதிப்பில் தயாரித்து வழங்க, அல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியது. இந்த வகையைச் சேர்ந்த...

நாகர்கோவில் கழிவு நீர் அகற்றும் பணி; மேயர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு விருந்தினர் மாளிகை எதிர் பகுதியில் உள்ள கழிவு நீர் ஓடையில் தேங்கி நிற்கும் கழிவு நீர் மாநகராட்சி மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. இந்த பணியினை நேற்று நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். கழிவுநீர் அந்த பகுதியில் விடக்கூடாது என்று அருகில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

ராஜாக்கமங்கலம்: மின்சாரம் தாக்கி 8-ம் வகுப்பு மாணவன் பலி

ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் மகன் ஸ்ரீதர் (13). இவர் ஈத்தாமொழியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று ( 1 -ம் தேதி  மாலை ஸ்ரீதர் வீட்டருகில்  உள்ள மைதானத்தில் விளையாடி கொண்டு இருந்தான். அப்போது சாலையோரமாக லோடுடன் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. விளையாடிக் கொண்டிருந்த ஸ்ரீதரின் செருப்பு எதிர்பாராத விதமாக அந்த லாரியின் மீது விழுந்துள்ளது.       உடனே ஸ்ரீதர் தனது செருப்பை எடுப்பதற்காக அந்த லாரி மீது எறினார். அப்போது...

பெருஞ்சாணி: அணையில் மீன் பிடிக்க சென்றவர் மூழ்கி பலி

பெருஞ்சாணி அருகே உள்ள வலிய மலை, காணி குடியிருப்பை சேர்ந்தவர் குமார் (45). ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவருக்கு கீதா என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகளும் உள்ளனர். சம்பவ  தினம் இரவு குமார் தன் உறவினர்களுடன்  பெருஞ்சாணி அணையில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.         இதற்கிடையே குமார் தன்னுடன் மீன் பிடிக்க வந்த உறவினர்களிடம்  தான் வீட்டுக்கு செல்வதாக  கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் நேற்று முன்தினம் மதியம் வரை வீடு திரும்பவில்லை. இதை எடுத்து...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...