Google search engine
Home 2024

Yearly Archives: 2024

திருப்பதி அறங்காவலர் குழுவில் தமிழகத்தில் இருந்து 2 பேர் நியமனம்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 25 உறுப்பினர்கள் கொண்ட புதிய அறங்காவலர் குழுவை சந்திரபாபு நாயுடு அரசு அறிவித்துள்ளது இதில் தெலங்கானாவில் இருந்து 5 பேரும் தமிழகத்தில் இருந்து இருவரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒவ்வொரு முறையும் புதிய அறங்காவலர் குழு அறிவிக்கும் போதெல்லாம் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆந்திர முதல்வருக்கு சிபாரிசுகள் வருவது வழக்கம். இதன் அடிப்படையில் இம்முறை தெலங்கானாவை சேர்ந்த 5 பேருக்கு சந்திரபாபு வாய்ப்பு அளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் இருந்து 3 பேருக்கும் தமிழகத்தில் இருந்து திருப்பூரை சேர்ந்த...

பாக்கியை செலுத்தாவிட்டால் வங்கதேசத்துக்கான மின் விநியோகம் நிறுத்தப்படும்: அதானி பவர் நிறுவனம் கெடு

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மின்சார விநியோகத்துக்கான பாக்கியை செலுத்த வேண்டும். இல்லையென்றால் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று வங்கதேசத்திடம் அதானி பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அதானி பவர் நிறுவனத்தின் கோடா மின் உற்பத்தி ஆலையின் நிறுவு திறன் 1,496 மெகாவாட்டாக உள்ளது. வங்கதேசத்துக்கு மின்சார விநியோகம் செய்வதில் பைரா (1,244 மெகாவாட்), ராம்பால் (1,234 மெகாவாட்), எஸ்எஸ் பவர் I (1,224 மெகாவாட்) ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து அதானி பவர் (724 மெகாவாட்) மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது. இந்த நிலையில், டாலருக்கு பற்றாக்குறை...

சகோதரி பிரியங்காவை ஆதரித்து வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி பிரச்சாரம்

இந்தியாவில் தற்போது அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதே பெரும் போராட்டமாக உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் தனது சகோதரி பிரியங்கா காந்தியை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் கூறியதாவது: நம் நாட்டில் தற்போது அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதே பெரும் போராட்டமாக உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகபோராடி பல துன்பங்களை தாங்கி,பல ஆண்டுகள் சிறையில் இருந்தவர்களால் அரசியலமைப்பு சட்டம்உருவாக்கப்பட்டது. அவர்கள் பணிவு, அன்பு மற்றும் தேசத்தின் மீதான...

சென்னை விமான நிலையத்தில் சுற்றுலா வந்த அமெரிக்கரிடம் சேட்டிலைட் போன் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க பயணியிடம் இருந்து சேட்டிலைட் போன் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு புறப்பட தயாராக இருந்தது. அந்தவிமானத்தில் பயணம் செய்ய வந்த அமெரிக்காவைச் சேர்ந்தடேவிட் (55) என்ற பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது, சேட்டிலைட் போன் ஒன்று இருந்தது. இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக சேட்டிலைட் போன் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகள் சேட்டிலைட் போன் எடுத்து வந்தால், பாதுகாப்பு அதிகாரிகள்...

குரங்கம்மை அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்: அமைச்சர் அறிவுறுத்தல்

சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த நபருக்கு குரங்கம்மை பாதிப்பு இல்லை என்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. குரங்கம்மை பாதிப்புள்ள 116 நாடுகளில் இருந்து வந்தவர்கள், அந்நோய்க்கான அறிகுறிகள் இருந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் குரங்கம்மை தொற்றுநோய் தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கும் குரங்கம்மை தொற்றுநோய் குறித்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல், தலைவலி, உடல்வலி...

முதல்வர் ஸ்டாலின் நாளை கோவை வருகை: 2 நாட்கள் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் 2 நாட்கள் அரசு மற்றும் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு நாளை (நவ.5) வருகிறார். மாவட்டம் வாரியாக ஆய்வுப் பணி மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், முதல்கட்ட ஆய்வுப் பணியை கோவையில் நாளை தொடங்குகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை காலை கோவை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து டைடல் பார்க் வளாகத்துக்குச் செல்லும் அவர், அங்கு 8 தளங்களுடன், 2 லட்சத்து 94,000 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவை திறந்து வைக்கிறார்....

தீபாவளி விற்பனையில் செயற்கை இழை ஜவுளி ரகங்கள் ஆதிக்கம்: எதிர்காலத்தில் பருத்தி பயன்பாடு குறையும் என தகவல்

 தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மொத்த ஜவுளிப் பொருட்கள் விற்பனையில் பாலியஸ்டர் உள்ளிட்ட செயற்கை இழை கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. எதிர்காலத்தில் பருத்தி பயன்பாடு முற்றிலும் குறைவதற்கான அறிகுறி இது என்று தொழில் துறையினர் தெரிவித்தனர். பருத்தியை மூலப் பொருளாகக் கொண்டு செயல்படும் இந்திய ஜவுளிச் சங்கிலித் தொடரில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. பருத்தி மூலம் தயாரிக்கப்படும் ஜவுளிப் பொருட்களைவிட, செயற்கை இழை கலந்து தயாரிக்கப்படும் ஜவுளிப் பொருட்களுக்கான உற்பத்திச் செலவு குறைகிறது. மேலும், அவை துணியின் ஆயுளை அதிகரிக்கவும், சுருக்கத்தை...

தமிழகம் முழுவதும் முப்படை ஓய்வூதியதாரர்களுக்கு குறைதீர்ப்பு முகாம் இன்று தொடக்கம்

தமிழகம் முழுவதும் முப்படை ஓய்வூதியதாரர்களுக்கு குறைதீர்ப்பு முகாம் இன்று தொடங்கி வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஓய்வூதியதாரர்களுக்காக டிஜிட்டல் முறையில் வாழ்நாள் அடையாளச் சான்றிதழ் காணும் முகாம் மத்திய அரசினால் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நவ.1 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, முப்படை ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்நாள் அடையாளச் சான்றிதழ் காணவும் அவர்களின் ஓய்வூதியம் சார்ந்த குறைகளை தீர்க்கவும் சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் சார்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் 'ஸ்பர்ஷ்' (SPARSH) என்ற ஓய்வூதிய...

ஓய்வூதியர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு முகாம்

மத்திய, மாநில அரசுகள் மற்றும் ராணுவ ஓய்வூதியர்கள் உள்ளிட்டோர் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வசதியாக அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வீட்டில் இருந்தபடியும் இந்த சேவையை பெறலாம் என்று அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய, மாநில அரசுகள், ராணுவம் உள்ளிட்டவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் தங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற, ஆண்டுதோறும் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இந்த நிலையில், நேரில் சென்று ஆயுள் சான்றிதழை...

திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தவெக செயற்குழு தீர்மானம்

சாதிவாரி கணக்கெடுப்பு, நீட் தேர்வு, வரிகளை உயர்த்தியது, போதைப் பொருள் புழக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. பொதுச் செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன், கொள்கை பரப்பு இணை செயலாளர் தாகிரா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: மத்திய அரசின் ஒரே நாடு, ஒரேதேர்தல் அறிவிப்புக்கு கண்டனம். வக்பு...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...