Google search engine
Home 2024

Yearly Archives: 2024

3-வது டெஸ்டில் 25 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி: முழுமையாக தொடரை இழந்து இந்திய அணி மோசமான சாதனை

நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி கண்டு 0-3 என்ற கணக்கில் தொடரை முழுமையாக இழந்துள்ளது. இதையடுத்து சுழற்பந்து வீச்சில் தடுமாறத் தொடங்கியுள்ளது என்ற விமர்சனம் இந்திய அணி மீது எழுந்துள்ளது. நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், புனேவில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வி கண்டு தொடரை...

சர்ச்சைக்குரிய முறையில் ரிஷப் அவுட்: விவாதத்துக்கு வித்திட்ட டிஆர்எஸ் முடிவு

மும்பை டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பந்த்துக்கு சர்ச்சைக்குரிய வகையில் அவுட் கொடுக்கப்பட்டது. நேற்றைய இந்திய அணியின் 2-வது இன்னிங்ஸின்போது சிறப்பான முறையில் ரிஷப் பந்த் விளையாடிக் கொண்டிருந்தார். அவர் 57 பந்துகளில் 64 ரன்களில் இருந்தபோது, அஜாஸ் படேல் பந்தை இறங்கி வந்து அடிக்க முயன்றார். அப்போது பந்தை விக்கெட் கீப்பர் டாம் பிளண்டல் கேட்ச் பிடித்தார். நியூஸிலாந்து வீரர்கள் இதற்கு அவுட் கேட்க, கள நடுவர் அவுட் தரமறுத்தார். இதையடுத்து டிஆர்எஸ் முறையில் அவுட் கேட்கப்பட்டது. ஆனால் பேட்டில் பந்து படவே...

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தை இழந்த இந்திய அணி

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை இழந்துள்ளது. நியூஸிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன்பு வரை இந்திய அணி அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில் தொடரை 0-3 என்ற கணக்கில் முழுமையாக இழந்துள்ளதால் இந்திய அணி முதலிடத்தை இழந்து 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்திய அணி தற்போது 58.33 புள்ளிகளுடன் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 62.50 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட பார்டர்- கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடவுள்ளது. இந்த...

91 ஆண்டுகளில் முதன்முறையாக உள்நாட்டில் டெஸ்ட் தொடரை முழுவதுமாக இழந்த இந்தியா!

இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் போட்டிகளில் 1933-ம் ஆண்டில் விளையாடத் தொடங்கியது. டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தொடங்கி 91 ஆண்டுகளான நிலையில், இந்திய அணி முதன்முறையாக 0-3 என்ற கணக்கில் தொடரை உள்நாட்டில் முழுமையாக இழந்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூஸிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. பெங்களூரு, புனே மற்றும் மும்பை என மூன்று போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றது. உள்நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா முழுவதுமாக இழப்பது இதுவே முதல்முறை. இந்த தொடர்...

‘சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை’ – தோல்வி குறித்து கேப்டன் ரோஹித் சர்மா | IND vs NZ

நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். “சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்வியடைவது சாதாரண விஷயமல்ல. இந்த தொடரில் நான் சரிவர அணியை வழிநடத்தவில்லை. பேட்டிங்கிலும் நான் சரியாக விளையாடவில்லை. இந்த தோல்வியை எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தொடரை முழுமையாக இழந்ததை ஜீரணிக்கவே முடியவில்லை. இந்த தொடரில் சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை என்பதே உண்மை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரும் எங்களுக்கு சவாலான விஷயம்தான். அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடுவோம்”...

சபரிமலை பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு: தேவஸ்வம் போர்டு அமைச்சர் அறிவிப்பு

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் ரூ.5 லட்சம் இலவச காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும் என்று கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் வி.என்.வாசவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து கேரள அமைச்சர் வாசவன் கடந்த சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் ரூ.5 லட்சம் இலவச காப்பீடு அளிக்கப்படும். ஏதாவது உயிரிழப்பு ஏற்பட்டால் இந்த தொகையை திருவாங்கூர்தேவஸ்வம் போர்டு வழங்கும். அத்துடன், உயிரிழப்பவரின்உடலை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளையும் தேவஸ்வம் போர்டு செய்து கொடுக்கும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு...

ஜூனியர்களை ராகிங் செய்த 5 சீனியர் மாணவர்கள் ஒடிசா மருத்துவ கல்லூரி விடுதியிலிருந்து நீக்கம்

ஜூனியர் மாணவர்களை கடுமையாக தாக்கி ராகிங் செய்த நான்காம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கும் 5 மாணவர்கள் ஒடிசா மருத்துவக் கல்லூரி விடுதியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இதுகுறித்து பீரம்பூர் காவல் துறை கண்காணிப்பாளரும், ராகிங் தடுப்பு குழு உறுப்பினர்களில் ஒருவருமான சர்வண் விவேக் கூறியதாவது: ஒடிசா அரசின் எம்கேசிஜி மருத்துவ கல்லூரியில் புதிதாக சேர்ந்த ஜுனியர் மாணவர்களிடம் அதே கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் 5 மாணவர்கள் கடுமையான முறையில் தாக்கி ராகிங்கில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ராகிங் தடுப்பு குழு...

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த இளம்பெண் கைது

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த புனேவைச் சேர்ந்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். மும்பையில் நடிகர் சல்மான் கானுக்கு சமீபத்தில் பல கொலை மிரட்டல்கள் வந்தன. இது குறித்து மும்பை போலீஸார் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் மும்பை போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ் அப் உதவி எண்ணுக்கு ஒரு கொலை மிரட்டல் வந்தது. அதில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 10 நாட்களுக்குள் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர் பாபா சித்திக் போல்...

மகாராஷ்டிர தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பராக் ஷாவுக்கு ரூ.3,300 கோடி சொத்து: 5 ஆண்டுகளில் 575% அதிகரிப்பு

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பராக் ஷா கடந்த 2002-ம் ஆண்டில் மேன் இன்ஃப்ரா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தை தொடங்கினார். பின்னர் ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக வலம்வந்த அவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு பாஜக சீட் வழங்கியது. இதையடுத்து, கட்கோபார் கிழக்கு பகுதி நகராட்சி கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். பராக் ஷா2019-ல் முதன்முறையாக சட்டப்பேரவை தேர்தலை சந்தித்த பராக் ஷா 53,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், மகாராஷ்டிரா வின் கட்கோபார் கிழக்கு தொகுதி யில் போட்டியிட பாஜக அவருக்கு...

‘டிஜிட்டல் அரெஸ்ட்’ விவகாரத்தில் ஏமாற வேண்டாம்: பொதுமக்களுக்கு அமலாக்கத் துறை அறிவுரை

'டிஜிட்டல் அரெஸ்ட்' விவகாரத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செல்போன், சமூக வலைதளங்களில் யாரிடமும் ஏமாறக் கூடாது என்று அமலாக்கத் துறை அறிவுறுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக 'டிஜிட்டல் அரெஸ்ட்' என்ற பெயரில் பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் 65,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. சுமார் ரூ.4.69 லட்சம் கோடிக்கும் அதிகமாக மோசடி நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...