Google search engine
Home 2024

Yearly Archives: 2024

திமுக அரசுக்கு யாரும் பாடம் எடுக்க தேவையில்லை: தமிழ் மொழி குறித்த சீமான் கருத்துக்கு அமைச்சர் கீதாஜீவன் பதில்

தமிழ் குறித்து திமுக அரசுக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, அமைச்சர் கீதாஜீவன் பதிலளித்துள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிக்கையில், ‘‘தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை நடைமுறையில் உள்ள நிலையில், வன்முறைக்கு இலக்காகும் பெண்களுக்கு உதவ தமிழக அரசு அமைக்கும் உதவி மையத்தில் பணிபுரிய தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழி தெரிந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தி தெரிந்தால்தான் வேலைவாய்ப்பு என்று திமுக அரசு கூறுவது...

புதுக்கடை: தாக்குதல்; 3 பேர் மீது வழக்கு – ஒருவர் கைது

புதுக்கடை அருகே கீழ்குளம், பருத்தியடைப்பு விளையை சேர்ந்தவர் ஆல்பன் (44). இவருக்கும் அதே பகுதி அரசு (44) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவ தினம் அரசு பக்கத்தில் உள்ள கடைக்கு சென்று வரும் போது, எதிரே வந்த ஆல்பனை தடுத்து நிறுத்தி அரசு மற்றும் 2 பேர் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.        இதில் படுகாயம் அடைந்த ஆல்பன் காஞ்சிரகோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார்...

நாகர்கோவிலில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சாவு

திருவட்டார் அருகே உள்ள காட்டாதுறை இரவிபுதூர்கடை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 53). இவர் திருவட்டார் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலராக வேலை பார்த்து வந்தார். நேற்றுமுன்தினம் விடுமுறை என்பதால் நாகராஜன் வீட்டில் இருந்து காரில் நாகர்கோவிலுக்கு வந்தார். தேரேக்கால்புதூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது கார் மீது மற்றொரு மோட்டார் சைக்கிள் லேசாக மோதியது. இதில் நாகராஜனுக்கு காயம் ஏற்படவில்லை. இருப்பினும் நாகராஜன் இதுகுறித்து புகார் அளிப்பதற்காக நேற்று முன்தினம் இரவு நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் இதுதொடர்பாக...

நாகர்கோவிலில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கம்

கன்னியாகுமரி மாவட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, மது போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் சார்பாக போதை விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நாகர்கோவில் குருசடி சர்ச்சில் வைத்து நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா தலைமையில் நடைப்பெற்றது. இதில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் போக்குவரத்து விதிகள் மற்றும் போதை விழிப்புணர்வு குறித்து பேசினார்.

திற்பரப்பு: அருவியல் 8 நாட்களுக்கு பின் குளிக்க அனுமதி

குமரி மாவட்டத்தில் முக்கியமான சுற்றுலா தலம் திற்பரப்பு அருவியாகும். கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பேச்சிப்பாறை,   சிற்றார் அணைகளில் இருந்து மறுகால் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.       கடந்த 8 நாட்களாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று அணைகளின் மறுகல் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது நிறுத்தப்பட்டது. எனினும் நேற்று மழை பெய்து கொண்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி நேற்று...

களியக்காவிளை: பகவத்கீதா ஒப்புவித்தல் போட்டி

குமரி மாவட்டத்தில் குமாரகோவில் மையமாக வைத்து சின்மய மிஷன் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீமத் பகவத் கீதா பாட்டும் பொருளும் ஒப்புவிக்கும்  போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த வருட போட்டி நவம்பர் 3-ம் தேதி நேற்று தக்கலை பார்த்தசாரதி கோயில் வளாக தனியார் மண்டபத்தில் நடந்தது.         கோயம்புத்தூர் சின்மய மிஷன் பிரம்மச்சாரி விக்னேஷ் சைதன்யா , சுவாமி வேதா நிஷ்டானந்தா, நீலகண்டசைதன்யா, ஹரிஷ் , சிவா, வெள்ளிமலை. ஹிந்து தர்ம வித்தியா பீடம்...

மாத்தூர்: தொட்டி பாலம் மதியம் பூட்டு; மாலையில் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கியமான சுற்றுலா தலம் மாத்தூர் தொட்டி பாலம். காமராஜர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட இந்த தொட்டி பாலம் ஆசியாவிலேயே  மிகவும் உயரமானதும் நீளமான தொட்டி பாலமாகும். இதை பார்வையிட தினம் சுற்றுலா பயணிகள் ஏராளம் பேர் வந்து செல்வது வழக்கம்.       இந்த நிலையில் மாத்தூர் தொட்டி பாலத்துக்கு சுற்றுலா வந்த மாணவி ஒருவர்  கடந்த இரண்டு மாதம் முன்பு பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்த காரணங்காட்டி மாவட்ட ஆட்சியர் பாலத்தின் மேல் சுற்றுலா பயணிகள் நடந்து...

ரஜினிகாந்த் பாராட்டு – ‘அமரன்’ படக்குழுவினர் மகிழ்ச்சி

ரஜினிகாந்த் பாராட்டினால் ‘அமரன்’ படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அமரன்’. சோனி நிறுவனம், கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி இருக்கிறது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தினை இயக்கி இருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.இந்தப் படத்தினைப் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் படக்குழுவினரை அழைத்து பாராட்டினார். இதன் வீடியோ பதிவினை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் ‘அமரன்’ படத்தினை வெகுவாக பாராட்டியிருக்கிறார் ரஜினி....

தடங்கலின்றி தொடங்குமா ‘STR 48’?

‘STR 48’ திரைப்படம் தடங்கலின்றி தொடங்குமா என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. கமல் மற்றும் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. அதனைத் தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார். இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.இதன் படப்பிடிப்பு ‘டிராகன்’ படப்பிடிப்பு முடிந்தவுடன் தொடங்கும் என கூறப்படுகிறது. ஆனால், ‘STR 48’ படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில பிரச்சினைகளை சிம்பு முடிக்க வேண்டும் என்கிறார்கள் திரையுலகினர். ஏனென்றால் வேல்ஸ் நிறுவனம் சிம்புவின் மீது புகார்...

‘புஷ்பா 2’ பாடலுக்கு ஸ்ரீலீலா நடனம்!

‘புஷ்பா 2’ படத்தில் ஒரு பாடலுக்கு ஸ்ரீலீலா நடனமாட சம்மதம் தெரிவித்துள்ளார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புஷ்பா 2’. முதல் பாகமான ‘புஷ்பா’ உலகமெங்கும் வசூல் சாதனை புரிந்தது. இதில் ‘ஊ அண்டாவா’ என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தார். இப்பாடலின் வரிகள், நடனம் என அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடினார்கள். அதேபோல் ‘புஷ்பா 2’ படத்திலும் ஒரு பாடல் இருக்கிறது. இதில் நடனமாட முன்னணி நாயகிகள் பலரிடம்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...