Google search engine
Home 2024

Yearly Archives: 2024

குமரி: கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாள் இன்று அனுசரிப்பு

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2 - ம் தேதி தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களின் நினைவாக கல்லறை திருநாளாக அனுசரிக்கின்றனர். இந்த ஆண்டு இன்று 2-ம் தேதி கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது.       இதை ஒட்டி நேற்று மாலை அனைத்து கல்லறை தோட்டங்களும் சுத்தப்படுத்தப்பட்டு புல் புதர்கள் அகற்றப்பட்டன. இன்று மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஊர்வத்தி ஏற்றி அஞ்சலி செலுத்துகின்றனர்.        மேலும்  இறந்தவர்களின் ஆன்மா இளைப்பாறுதலுக்காக திருப்பலி,   சிறப்பு வழிபாடுகள் போன்றவை நடைபெறுகிறது....

கிள்ளியூர்: ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்

கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டமானது ஒன்றிய செயலாளர் பி கோபால் தலைமையில் கருங்கல் பாலூர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான  மனோதங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.             கூட்டத்தில் 2026 ம் ஆண்டு நடைபெற இருக்கிற தேர்தலில் அனைவரும் ஒற்றுமையுடன் குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளையும் வெற்றி பெற செய்ய வேண்டும்,   வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கழகத் தலைவர்...

களியக்காவிளை: கோழிக்கழிவுகள்  கொண்டு வந்த லாரி பறிமுதல்

கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கழிவுகள் கொண்டுவரப்படுவதை கண்காணிக்கம் பணியை பலப்படுத்த குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த நிலையில் இன்று ( 1 -ம் தேதி)  இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் களியக்காவிளை  பகுதியில் சோதனையில்  ஈடுபட்டிருந்தனர்.       அப்போது கேரளாவிலிருந்து குமரி மாவட்டத்தை நோக்கி ஒரு கண்டைனர் லாரி வேகமாக வந்தது. போலீசார் அதனை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அதில் கோழி கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.   தொடர்ந்து லாரியில்...

கருங்கல்: விபத்தில் 2 பேர் பலி சிசிடிவி வெளியாகி பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள தொலையாவட்டம் பகுதியை சேர்ந்தவர் சேம் ராஜ் மகன் ஜெகன் அதே பகுதியை சேர்ந்தவர் சின்ன நாடான் மகன் வினு. இருவரும் நண்பர்கள். இவர்கள் பைக்கில் கருங்கல் அருகேயுள்ள பாலூர் - தேங்கா பட்டணம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை பினு ஓட்டி சென்றார். அப்போது திடீரென இருசக்கர வாகனம் சாலையில் நிலை தடுமாறி கீழே கவிழ்ந்தது.இதில்   எதிரே வந்த டெம்போ டிராவலர் வாகனம் இருவர் மீதும் ஏறி இறங்கி அருகில் இருந்த சுவற்றில் மோதி நின்றது. இந்த...

திரை விமர்சனம்: அமரன்

சென்னையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த முகுந்த் வரதராஜன் (சிவகார்த்திகேயன்) ராணுவத்தில் சேர விரும்புகிறார். அவருடைய அம்மா கீதாவுக்கு (கீதா கைலாசம்) அதில் விருப்பமில்லை. ஆனால் முகுந்துக்கு துணை நிற்கிறார், காதலி இந்து ரெபெக்கா (சாய் பல்லவி). ராணுவத்தில் சேர்ந்து காஷ்மீர் செல்லும் முகுந்த், கேப்டன், மேஜர் போன்ற உயர் பதவிகளை அடைகிறார். முகுந்துடனான காதலை இந்துவின் பெற்றோர் எதிர்க்க, அதைச் சமாளித்து அவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்குப் பெண் குழந்தை பிறக்கிறது. ராஷ்ட்ரிய ரைஃபில்ஸ் 44 படைக்குத் தலைவராக நியமிக்கப்படும் முகுந்த்,...

திரை விமர்சனம்: லக்கி பாஸ்கர்

பம்பாயில் வசிக்கும் பாஸ்கர் (துல்கர் சல்மான்), வங்கி ஒன்றின் காசாளர். இளம் மனைவி சுமதி (மீனாட்சி சவுத்ரி), மகன் கார்த்திக் (ரித்விக்), சகோதரி, சகோதரன் மற்றும் அப்பாவுடன் வசிக்கும் அவருக்குக் கடன் மேல் கடன். நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் இருக்கும் அவர், தனக்கு புரமோஷன் கிடைக்கும் என நம்புகிறார். அது கிடைக்காமல் போக, நேர்மையை ஓரமாக வைத்துவிட்டு, வேறு முடிவை எடுக்கிறார். அது அவருக்கு என்ன மாதிரியான பிரச்சினைகளைக் கொண்டு வருகிறது. அதில் இருந்து மீண்டு சாதாரண பாஸ்கர், லக்கி பாஸ்கர் ஆனாரா என்பது...

ஐபிஎல் 2025 சீசன்: 10 அணிகளில் ‘உள்ளே’, ‘வெளியே’ யார் யார்? – முழுப் பட்டியல்

புது டெல்லி: ஐபிஎல் 2025 சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதன் விவரம்: சென்னை சூப்பர் கிங்ஸ்: உள்ளே > ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.18 கோடி), ரவீந்திர ஜடேஜா (ரூ.18 கோடி), மதீஷா பதிரனா (ரூ.13 கோடி), ஷிவம் துபே (ரூ.12 கோடி), எம்.எஸ்.தோனி (ரூ.4 கோடி). செலவிட்ட தொகை: ரூ.65 கோடி | மீதமுள்ள தொகை: ரூ.55 கோடி | வெளியே கழற்றிவிடப்பட்ட முக்கிய வீரர்கள்: டேவன்...

கோட்டையை சிறப்பாக கட்டிக்கொடுத்த கான்டிராக்டருக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரம் பரிசளித்த தொழிலதிபர்

கோட்டையை சிறப்பாக கட்டிக்கொடுத்த கான்டிராக்டருக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரத்தை தொழிலதிபர் ஒருவர் பரிசாக வழங்கியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் குர்தீப் தேவ் பத். பஞ்சாபில் இவருக்குச் சொந்தமான ஏராளமான பங்களாக்கள், வீடுகள், பண்ணை வீடுகள், எஸ்டேட்டுகள் உள்ளன. இந்நிலையில் தனது நிலத்தில் ஒரு கோட்டையைக் கட்டுவதற்கான பணிகளை, ரஜிந்தர் சிங் ரூப்ரா என்ற காண்டிராக்டரிடம் குர்தீப் தேவ் ஒப்படைத்தார் குர்தீப் தேவ். இதைத் தொடர்ந்து தன்னுடைய திறமையான தொழிலாளர்கள், தோட்டக்கலை நிபுணர்கள், கட்டிடக் கலை...

வேற்று கிரக ஆராய்ச்சிக்கு மையம்: லடாக்கில் தொடங்கியது இஸ்ரோ

 விண்வெளிக்கும், வேற்று கிரகங்களுக்கும் மனிதர்களை அனுப்பும் பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக, லடாக்கில் புதிய அனலாக் ஆய்வு மையத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) தொடங்கியுள்ளது. இஸ்ரோ சார்பில் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஆய்வுகள் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன. அதேபோல், விண்வெளி மையம் ஒன்றை அமைக்கவும் இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளது. வேற்று கிரகங்களுக்கு விண்வெளிக் கலன்களை அனுப்பவும் அடுத்தடுத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்புவதற்காக விமானப்படையை சேர்ந்த 6 வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு...

தாம்பரம் – காட்டாங்கொளத்தூர் இடையே நாளை மறுநாள் 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்: சென்னை திரும்பும் பயணிகளுக்காக ஏற்பாடு

தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்குச் சென்று சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக, தாம்பரம் – காட்டாங்கொளத்தூர் இடையே நாளை மறுநாள் (திங்கள்) 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகைக்கு 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் வெளியூர் சென்றுள்ளனர். இவர்கள் விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (நவ.4) அதிகாலை முதல் சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அதிகளவில் வந்து இறங்கும் பயணிகள், மாநகர பேருந்துகள், ரயில்களில் பயணம் செய்து தங்களது இருப்பிடங்களுக்கு செல்வார்கள். எனவே, சென்னை...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...