Google search engine
Home 2024

Yearly Archives: 2024

ராமர் கோயிலில் முதலாண்டு பிரம்மாண்ட தீப உற்சவம்: இரண்டு உலக சாதனை படைத்தது அயோத்தி

தீபாவளியை முன்னிட்டு அயோத்தி ராமர் கோயிலில் முதலாண்டு பிரம்மாண்ட தீபஉற்சவம் நடைபெற்றது. இதில் 25 லட்சம் அகல் விளக்குகளுடன், 1,121 வேதாச்சாரியார்களின் ஆரத்தி என 2 உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. ராமாயணத்தில் ராமர் வனவாசம் முடித்து அயோத்திக்கு திரும்பும் நாளை வடமாநிலங்களில் தீபாவளியாக கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு உத்தர பிரதேச அரசின் சார்பில் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயிலில் முதலாண்டு தீப உற்சவம் நடைபெற்றது. உ.பி.யில் பாஜக ஆட்சி பொறுப்பேற்று யோகி ஆதித்யநாத் முதல்வரானது முதல் அயோத்தி மிக அதிக முக்கியத்துவம்...

திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: அறங்காவலர் குழு தலைவர் அறிவிப்பு

திருப்பதி, திருமலை கோயிலில் வேலை செய்பவர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும் என்று அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பி.ஆர்.நாயுடு தெரிவித்தார். ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலின் (டிடிடி) அறங்காவலர் குழு தலைவராக பி.ஆர்.நாயுடு அண்மையில் நியமனம் செய்யப்பட்டார். மேலும், டிடிடி குழு உறுப்பினர்களாக 24 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அறங்காவலர் குழு புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பி.ஆர். நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டதற்காக முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண்,...

4 ஆண்டுகளுக்கு பிறகு எல்லையில் ரோந்து பணி: இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் தீபாவளி இனிப்பு பரிமாற்றம்

இந்தியா - சீனா எல்லையில் படைகளை இரு தரப்பும் விலக்கிக் கொண்டுள்ள நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல ரோந்து பணி தொடங்கியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு 5 இடங்களில் இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவம் இடையே இரு நாட்டு எல்லை தொடர்பாக கடந்த 2020 மே, ஜூன் மாதங்களில் மோதல் ஏற்பட்டது. ஜூன் 15-ம் தேதி நடந்த கடும் சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா...

மதுரை, கோவை, சேலம், நெல்லை உட்பட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மதுரை, கோவை, சேலம், நெல்லை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (நவ.2) தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி,...

ஜவுளி, இனிப்பு, பட்டாசு, தங்கம் உள்ளிட்ட பொருட்களின் தீபாவளி விற்பனை ரூ.60,000 கோடி

 தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட நிலையில், ஜவுளி, பட்டாசு, இனிப்புகள் விற்பனை ரூ.60,000 கோடியை தாண்டியதாக தெரியவந்துள்ளது. இதனால், வியாபாரிகள், விற்பனையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வடகிழக்கு பருவமழை காலமாக இருந்தாலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் மழை இல்லை என்பதால், தீபாவளி விற்பனை களைகட்டியது. சென்னை மட்டுமின்றி, மதுரை, கோவை, சேலம், நெல்லை, தஞ்சாவூர், நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் விற்பனை...

ரயில் முன்பதிவு அவகாசம் குறைப்பு அமலுக்கு வந்தது

ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான காலஅவகாசம் 60 நாட்களாக குறைக்கப்பட்டது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்கள் வெளியூர் மற்றும் சொந்த ஊர்களுக்கு ரயிலில் பயணம் செல்ல நான்கு மாதங்களுக்கு முன்பே, அதாவது 120 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்பவர்களுக்கு இந்த நடைமுறை மிகவும் வசதியாக இருந்தது. அதேநேரத்தில், இவ்வாறு முன்கூட்டியே முன்பதிவு செய்பவர்கள் பலர் தாங்கள் பயணம் செய்யும் தேதிக்கு முன்பாக சில காரணங்களால் டிக்கெட்டை ரத்து செய்து விடுகின்றனர். இவ்வாறு ரத்து...

சுற்றுலா தலங்கள், கோயில்களில் குவிந்த மக்கள்; தமிழகத்தில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்

தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது. பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து உற்சாகத்துடன் தீபாவளியை கொண்டாடினர். சுற்றுலா தலங்கள் மற்றும் கோயில்களிலும் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகை தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் உற்சாகத்துடன் அதிகாலையிலே எழுந்து எண்ணெய் தேய்து குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகளை ஒருவருக்கொருவர் பரிமாறி வாழ்த்து தெரிவித்தனர். தெருக்களில் பட்டாசுகளை வெடித்து ஆரவாரத்துடன் தீபாவளியை தொடங்கினர். நண்பர்கள், உறவினர்களுடன் உணவருந்தி, சுற்றுலா தலங்களுக்கும், பொழுதுபோக்கு இடங்களுக்கும் சென்று மகிழ்ந்தனர். தீபாவளியையொட்டி அதிகாலை முதலே பல்வேறு கோயில்களில் சிறப்பு...

தீபாவளிக்கு சென்னையில் சேகரமான 213 மெட்ரிக் டன் பட்டாசு குப்பை அகற்றம்

சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மொத்தம் 213 மெட்ரிக் டன் பட்டாசு குப்பை மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது. தமிழகத்தில் தீபாவளியை ஒட்டி பட்டாசு வெடிப்பதில் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. காலையும், மாலையும் 2 மணி நேரம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், பொதுமக்கள் அக்.30-ம் தேதி அன்று இரவு முதலே தெருக்களில் பட்டாசுகளை வெடித்தனர். அந்த வகையில் சென்னை மாநகரம் முழுவதும் வெடித்து சிதறிய பட்டாசுகளின் குப்பைக் கழிவுகள் வீதிகளில் குவிந்து கிடந்தன. ஒவ்வொரு வீட்டின் முன்பும் பட்டாசு குப்பை சாலைகளில் நிரம்பியிருந்தது. இந்த குப்பையை அகற்றும்...

தாம்பரம் மாநகராட்சியில் பட்டாசு குப்பை அகற்றும் பணியில் 1,650 பேர்: நேரத்தை மீறி வெடித்ததாக 67 வழக்குகள் பதிவு

தாம்பரம் மாநகராட்சியில் தீபாவளியையொட்டி மட்டும் 29 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டதாக தாம்பரம் மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. தீபாவளியையொட்டி சிறுவர் முதல் பெரியவர் வரை பட்டாசுகள் வெடித்தும் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினர். தீபாவளி தினத்தில் காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் சென்னையில் பல இடங்களில் யாரும் இதனை கடைப்பிடிக்கவில்லை. வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் குப்பை தாம்பரம் முழுவதும் ஆங்காங்கே தேங்கியது. இப்படி டன்...

தொடர் விடுமுறையால் தினசரி மின்தேவை 5 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு குறைந்தது: சென்னையில் ஆவின் பால் விற்பனையும் சரிவு

 தமிழகத்தில் தினசரி மின்தேவை16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில்உள்ளது. இது குளிர்காலத்தில் 10 ஆயிரம் மெகாவாட் ஆகவும், கோடை காலத்தில் 20 ஆயிரம் மெகாவாட் ஆகவும் இருக்கும். கோடை காலத்தில், இந்த ஆண்டுமே 2-ம் தேதி மின்தேவை 20,830மெகாவாட் ஆக அதிகரித்தது.இதுவே உச்சபட்ச அளவாகும். தமிழகத்தில் அக்டோபரில் வடகிழக்குப் பருவமழை தொடங்கினாலும், செப்டம்பர் மாதத்திலேயே பல மாவட்டங்களில் மழை பெய்யும். இதனால், அந்த மாதம் மின்நுகர்வு வழக்கத்தைவிட குறையும். ஆனால், இந்த ஆண்டு செப்டம்பரில் எப்போதும் இல்லாத அளவுக்குகோடை காலத்தைப் போல வெயில்சுட்டெரித்தது. அதன்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...