Home 2024
Yearly Archives: 2024
கோட்டூர்புரம், பெரம்பூர், அரக்கோணம் உள்ளிட்ட 24 ரயில் நிலையங்களில் விரைவில் வாகன நிறுத்த வசதி
தெற்கு ரயில்வேயில் 24 ரயில் நிலையங்களில் வாகன நிறுத்த வசதியை கொண்டு வருவதற்கான பணிகள் தொடங்கப் பட்டுள்ளன.
தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வே கோட்டங்கள் உள்ளன. இவற்றில் 700-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அரக்கோணம், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகள் இருக்கின்றன.
இதற்கிடையில், தெற்கு ரயில்வேயில் பல்வேறு இடங்களில் வாகன நிறுத்தங்களில் ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தக் காலம் முடிந்துவிட்டது....
20 வகையான பதிவு கட்டணம் உயர்வு: டிடிவி.தினகரன் கண்டனம்
தமிழக பத்திரப்பதிவுத் துறையில் 20 வகையான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டுள் ளதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து டிடிவி.தினகரன் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப் பதாவது: பத்திரப் பதிவுத் துறையில் 20 வகையான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு, ஏழை மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்றும். எனவே, முத்திரைத் தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகைபத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் என 20 வகையான பதிவு களுக்கான முத்திரைத்தாள் கட்டணத்தை...
தமிழகத்தில் நடப்பாண்டில் புதிதாக 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு
தமிழகத்தில் நடப்பாண்டில் புதிதாக 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய,மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் நோயாளிகளைக் கண்டறிதல், கூட்டு மருந்து சிகிச்சைகளை அளித்தல், தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என காசநோய் ஒழிப்புத் திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் காச நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்துகள் களப்பணியாளர்கள் மூலம் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படு கின்றன....
தாம்பரம் மாநகராட்சியில் மழைநீர் வடிகாலுக்கு தோண்டப்பட்ட குழிகளால் ஆபத்து: பணியை விரைவுபடுத்த மக்கள் கோரிக்கை
தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 2-ல் கீழ்க்கட்டளைக்கு அருகே உள்ள பிருந்தாவன் நகர், பாலாஜி அவென்யூ, கேஜிகே நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பாலான தெருக்கள் தாழ்வானதாக இருப்பதால் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கும்நிலை உள்ளது. இதுதவிர மூவரசன்பேட்டை ஏரி நிரம்பிவிட்டால் அதன் உபரிநீரும் இந்த தெருக்களில் புகுந்துவிடுவதால் பருவமழையின்போது இப்பகுதி வெள்ளக்காடாக மாறிவிடும். எனவே, மழைநீர் வடிகால் அமைத்து தரவேண்டுமென நீண்டகாலமாக அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதையேற்று கீழ்க்கட்டளை மற்றும்அதன் சுற்றுப்புற பகுதிகளில்...
சென்னையில் பயன்பாடு இன்றி கிடக்கும் கழிப்பறைகள்: முறையாக இயக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
சென்னை மாநகரில் 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தினமும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மாநகருக்கு வந்து செல்கின்றனர். மாநகரமக்கள் தொகைக்கு ஏற்றவாறு போதிய கழிப்பறைகளை மாநகராட்சி நிர்வாகம் அமைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது.
மாநகரில் தற்போதைய நிலவரப்படி 550-க்கும் மேற்பட்ட இடங்களில் கான்கிரீட் கட்டிடங்களில் பழைய கழிப்பிடங்கள் இயங்கி வருகின்றன. தூய்மை இந்தியா இயக்க நிதியில் 445 இடங்களில் நவீன கழிப்பிடங்களை இளஞ்சிவப்பு நிறத்தில் மாநகராட்சி நிறுவியுள்ளது. இவற்றில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருக்கைகள், 300-க்கும் மேற்பட்ட...
புதுப்பொலிவு பெறும் திருக்கழுக்குன்றம் குளங்கள்: நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த சீரமைப்பு தீவிரம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை தூர்வாரி சீரமைக்க பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நீர் நிலைகளின் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும் மற்றும் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் சரியான திட்டங்களுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் சிறப்பு நிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் அமைந்துள்ளன. இப்பகுதிகளில், நிலத்தடி நீர் ஆதாரமாக 15-க்கும் மேற்பட்ட குளங்கள் அமைந்துள்ளன. இவற்றை, முறையாக பராமரிக்காத காரணத்தால் குளங்கள் தூர்ந்ததால், கடந்த 2014-ம் ஆண்டு நிலத்தடி...
பேச்சிப்பாறை: கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் டிரைவர் உயிரிழப்பு
குலசேகரம் அருகே உள்ள பேச்சிப்பாறை மயிலாறு குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் ரூபின் (23). சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். கோதையாறு மின்சார வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வீரமணிகண்டன் மகன் செல்வின் ஜோஸ் ( 23). இவர் பேச்சிப்பாறை பகுதியில் பைக் ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ரசல் (17) இவர் பள்ளியில் படித்து வருகிறார். மூன்று பேரும் நண்பர்கள். இவர்கள் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கல்லாறு பகுதியை சென்று சுற்றி...
குமரி: ஆசிரியை இறந்த வழக்கை மறுவிசாரணை செய்ய கோரிக்கை
வெள்ளிச்சந்தை அருகே உள்ள சரல் பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி மகள் அஜிதா. இவர் தனியார் பள்ளி ஆசிரியை. இவரை சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் கடந்த 25. 10. 2023 திருமணம் செய்தார். திருமணமான சில மாதங்களில் குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த அஜிதா கடந்த 25 10 2024 அன்று (முதல் வருட திருமண நாளில்) வீட்டின் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராஜகமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து...
புதுக்கடை: தியாகிகள் ஸ்தூபியில் குமரி முத்தமிழ் மன்றம் மரியாதை
கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்து இன்று (நவ-1 -ம் தேதி)) 68-ம் ஆண்டு ஆகும். இந்த நாளில் புதுக்கடையில் அமைந்துள்ள தியாகிகள் நினைவு ஸ்தூபியில் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதில் குமரி முத்தமிழ் மன்றம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மன்ற தலைவர் முளங்குழி பா லாசர் மாலை அணிவித்தார். செயலாளர் சஜீவ், பொருளாளர் முருகன், முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராஜேஸ்வரி, மற்றும் நிர்வாகிகள் மோகனதாஸ், ரவீந்திரன், பிரான்சிஸ், ஜீவகுமார் உட்பட பலர்...
குமரி மாவட்டத்திற்கு 4 புதிய வாக்குச்சாவடிகள்
குமரி மாவட்டத்தில் புதிதாக 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 1698 வாக்குச்சாவடிகள் இருந்து வந்தன. இந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 1702 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியிலும் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதியிலும் தலா இரண்டு வாக்குச்சாவடிகள் வீதம் 4 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.














